இந்தியப் பெண்கள் !


கீவில் இந்தியத் தூதரகம் நிர்வாணமாக போராடிய உக்ரேனிய பெண்ணியவாதிகள் மீது கொலைக் குற்றம் சுமத்தியது.அதில் ஒரு போராளியான இன்னா செவ்சென்கோவிற்கும் அனுராதா வர்மாவிற்கும் இடையே நடந்த உரையாடலை 18/03/2012 டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தேன்.அது ஒருக் கணம் என்னை பிரமிக்க வைத்தது.அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “ஆடையின்றி போராடுவதுதான் பெண்ணியத்தின் முக்கியப் பொருளா ? பெண்களின் தேகத்தினை வைத்து வியாபாரம் நடத்துகிறீர்களா ?” அதற்கு அவளின் பதில் நாங்கள் இக்கால பெண்ணியவாதிகள்.எங்களை அக்காலத்தவர்களைப் போல் இன்னும் துண்டு பேப்பரில் இலக்கினை எழுதி பிரசுரம் செய்து போராடுவோம் என எதிர்ப்பார்க்காதீர்கள்.உரிமைக்காக போராடுவதை நாங்கள் நம்புகிறோம்.அதே தான் பெண்ணியவாதிகளுக்கும் ஆனால் வேறு வழியில்.மேலும் தன் நிர்வாணத்தினை நியாயப்படுத்துகிறாள்.இக்கால இளைஞர்கள் போர்னோ இணையதளங்களை கண்டு தன்னைத் தானே சுகப்படுத்திக் கொள்கிறார்கள்.அதே ஒரு பெண் உண்மையில் நிர்வாணமாக வந்தால் ஓடி ஒளிகிறார்கள்.எத்தனையோ ஆண்டுகளாக பெண்ணியத்தின் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.யார் காதுகளிலும் விழாமல் ஒலி மட்டும் நிலைத்து நிற்கிறது.இன்று நாங்கள் நிர்வாண்மாவதன் மூலம் மீடியா மற்றும் மக்களின் பார்வை எங்கள் மேல் விழும்.அப்போது எங்கள் கொள்கையினைக் கூறினால் எங்கள் உரிமை எங்களுக்கு கிடைத்துவிடும்.அப்படி எங்கள் கொள்கைகளையும் பெண்களின் உரிமைத் தேவையினையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டுவருவதன் மூலம் விபச்சார விடுதிக்கு கொண்டு செல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையினை நிச்சயமாக குறைக்க முடியும்.பெற்றோர் எப்படி சகித்தார்கள் என்னும் கேள்விக்கு முதலில் வெறுத்தார்கள் பின் விட்டுவிட்டார்கள் என்றாள்.இத்தனைக்கும் தன் படிப்பினை நிறுத்திவிட்டு இத்தகைய போராட்டத்தினுள் இறங்கியிருக்கிறாள்.
இதனை இந்தியாவில் எதிர்பார்க்க முடியுமா…? குஜராத் சட்டசபையில் ஷங்கர் செளத்ரி மற்றும் ஜேதா பர்வாத் என்னும் பி.ஜே.பி அமைச்சர்கள் பலான படத்தினை சட்டசபையிலேயே ஐபேடில் பார்த்துக் கொண்டிருந்தனர்.இப்படிப்பட்ட ஜனநாயக அமைச்சர்களிடமா பெண்ணிய போராட்டத்தினை நடத்த சொல்கிறீர்கள்.அவரும் நடத்துவார் போராட்டத்தினை அல்ல! சோனியா காந்தி,மாயாவதி,கல்பனா சாவ்லா,ஜெயலலிதா,மம்தா பானர்ஜீ போன்றவர்கள் இந்த சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே அவர்கள் உன் கண்களுக்குத் தெரியவில்லையா என்று நிச்சயம் கேட்பீர்கள்.இன்னும் எத்தனை நாட்களுக்கு கடந்த கால முகங்களையே வெளிச்சத்திற்கு கொண்டு வருவீர்கள்.சமகாலத்தின் நிலைமை என்ன ?பதிலறியாமல் நீங்கள் முழிப்பதை போல் தான் நானும் முழிக்கிறேன்.இதனால் தான் இன்னாவின் பேட்டி என்னை ஈர்த்திருக்கிறது.அதில் தெரியும் உரிமைக்கான வெறி இங்கு தெரியவில்லை.மாதர் சங்கம் அமைத்தால் பெண்ணியத்தினை அடைந்து விடலாம் என நினைக்காதீர்கள்.எந்த ஒரு குழந்தைக்கும் தெரியப்போவதில்லை தன் தாய்க்கு உரிமை இல்லை என்று.எழுத்தாளர் சாரு ஒரு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.அங்கு சிறுவன் காபியினை குடித்துவிட்டு டம்ளரினை அங்கேயே வைத்துவிட்டான்.ஏனெனில் அதனை எடுக்க அம்மாவோ தங்கையோ வர வேண்டும்.இதுதான் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் யதார்த்தம்.இது உளவியல் ரீதியான பிரச்சினையும் கூட.பெரியாரும் இதனை எதிர்த்து போராடினார் இன்றும் போராடுகிறார்கள் எனில் ஏதோ ஒரு தவறான concept மனிதனின்/இந்தியனின் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.அதனை எடுத்தால் தான் நம் வீட்டின் பெண்களுக்கு அவர்களின் உரிமை போய்ச் சேரும்.உரிமை நாம் கொடுப்பது அல்ல அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது.இதனை புரிந்து கொள்ளாமல் நாம் பிடுங்கிக் கொண்டிருக்கிறோம்.இதுதான் அடிப்படை பாலியல் கல்வி.இதனை சரியாக கற்றுக் கொடுக்காமல் சமூகத்தின் மூளையினை அனைவரும் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.இப்படியிருக்கும் சமூகத்தில் பெண்ணியவதிகள் எதனை வைத்து போராடுவார்கள்.உலகத்தின் பார்வையினை திருப்ப இன்னா போன்றவர்கள் நிர்வாணத்தினை கையில் எடுத்துக் கொண்டார்கள் என்றால் பெண்தேகமே காமத்திற்குரியது என நினைத்துக் கொண்டிருக்கும் இந்த தேசத்தின் பார்வையினை திருப்ப எதனை கையிலெடுப்பது என தெரியாமல் பெண்ணியவாதிகள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னா மற்றும் சக போரளிகளின் புகைப்படத்தை பார்த்து எத்தனை பேர் சுகப்பட்டார்கள் எனத் தெரியவில்லை ஆனால் இதே இந்தியாவில் தோன்றிய ஒரு மதம் கூறுகிறது “நிர்வாணம் தியானத்தின் ஒரு நிலை”என்று !
எங்களுக்கு தேவை நிர்வாணம் அல்ல உண்மையான போராட்டம்.
பின் குறிப்பு:இதற்கு போட்டோவினையும் போடலாம் என இணையதளங்களில் தேடினேன்.அதனை பார்த்த பின் தான் உணர்ந்தேன் அதை போட்டால் பின் அந்த போட்டவிற்காக மட்டும் தான் என் பதிவுகளை பார்ப்பார்கள் என்று.அதனால் நீங்கலே தேடிக் கொள்ளுங்கள்.

Send your comments :krishik10@gmail.com

Share this:

CONVERSATION