நூல் வெளியீட்டு நிகழ்வு மனதிற்கு நெருக்கமாய் அமைந்தது. ஒவ்வொருவருடைய நூல் குறித்தும் ஒரு பார்வையை யாரேனும் பகிர்ந்திருக்கலாம் எனும் ஆதங்கம் மட்டும் மீதமாய் இருக்கிறது. எனது புத்தகத்தின் அச்சாக்கம் செய்நேர்த்தியுடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நூல் வெளியான மறுநாள் காலை நூலில் இடம்பெற்றுள்ள சில கதைகள் குறித்து கடிதம் பெறுவது கனவாகவும் வந்திடாத ஓர் வரம்.
கொண்டாட்ட மனநிலைக்கான அத்தனை காரணிகளையும் இந்நூல் எனக்கு கொடுத்து வந்திருக்கிறது. மேலும் கொடுக்கும் எனும் சிறு நம்பிக்கை என்னுள் இருக்கிறது. அதை விரைவில் கடக்கவே விரும்புகிறேன். இந்த புத்தகம் நெடும் பயணத்தின் சிறு காலடி. அதை சிறந்த வடிவமைப்பில் வெளியிட்ட, வெளியீட்டில் பங்குகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...
புகைப்படம் நல்கிய தினேஷ் குமார் மற்றும் மணிகண்டனுக்கு அன்பும் நன்றியும்.
i
1 கருத்திடுக. . .:
வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.
Post a comment
கருத்திடுக