2018 இன் வாச்சியம்
இவ்வாண்டின் வாசிப்பு மனதிற்கு நிறைவானதாக அமைந்திருந்தது. திரும்பிப் பார்க்கையில்
சென்ற ஆண்டைக் காட்டிலும் எண்ணிக்கை அளவில் நிறைய வாசித்திருக்கிறேன். இந்திய இலக்கியங்களையும்
சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். இந்திய இலக்கியத்தை பொறுத்தவரை
அவை மிகக் குறைவாகவே நிறைவேறியிருக்கிறது. அவ்வெண்ணம் நிறைவேறாதது கூடுதலான தாகத்தையும்,
வரும் ஆண்டில் செய்ய வேண்டிய முக்கிய பணியாக இந்திய இலக்கியத்தை அறிதல் என்னுள் உருக்கொள்ளத்
துவங்கியிருக்கிறது. சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நிறைய கொண்டாடினேன். கற்றும் கொண்டேன்.
ஒவ்வொரு சிறுகதையும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்த என் எண்ணத்தை விரிவு படுத்திக்
கொண்டே சென்றிருக்கிறது. சிறுகதைகள் மீதான ஈர்ப்பும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
முன்னோடிகளின் சிறுகதைகள் கருப்பொருளின் ஆழத்தையும் சமகால சிறுகதைகள் கருபொருள்
கொள்ள வேண்டிய விஸ்தீரணத்தையும் அறிய உதவியாய் இருந்தன
எழுத்தின் அளவில் ஒரே ஒரு சிறுகதை
கணையாழியில் வெளிவந்தது. யாவரும் பதிப்பகத்தின் வழியே இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு
வெளியானது. இந்து தமிழ் திசையில் புத்தக மதிப்புரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
புத்தகத்தைக் குறித்து எழுதுவதன் வழி இலக்கியத்திற்குள் வந்தவன் நான். அதை செய்வதில்
எப்போதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டும். ஆதலால் அவ்விடத்தை பயன்படுத்தி சமகால
இலக்கியத்தை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டேன். புரிதலை ஒவ்வொரு வாசிப்பும்
விரிவுபடுத்தியது. சமகால எழுத்தில் இருக்கும் சவால்களை அறிமுகப்படுத்தியது. மேலும்
புரிதலை விரிவுபடுத்தும் என்று நம்புகிறேன். எனக்குள் இருக்கும் வாசகன் அடுத்தடுத்த
சொற்களுக்காக எப்போதும் ஏங்கிய வண்ணமிருக்கிறான். அன்றாட சிக்கல்களைத் தாண்டி அவனுக்கு
தீனி இடுவதும் சவாலான செயல் தான்!
இவ்வாண்டு வாசித்தவற்றின் பட்டியல்
நாவல்
●
நீலகண்ட பறவையைத் தேடி – அதீன் பந்தோபாத்யாய
– தமிழில் :சு.கிருஷ்ணமூர்த்தி
●
அன்பு வழி – பேர் லாகர்க்விஸ்டு – தமிழில்
: .க.நா.சுப்ரமணியம்
●
நட்ராஜ் மகராஜ் – தேவிபாரதி (மீள்வாசிப்பு)
●
ஆப்பிளுக்கு முன் – சி.சரவணகார்த்திகேயன்
●
நஞ்சுண்டகாடு – குணா கவியழகன்
●
சலூன் – க.வீரபாண்டியன்
குறுநாவல்
●
துறவியின் மோகம் – லியோ டால்ஸ்டாய்
●
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்
●
மனநல மருத்துவர் – மச்சடோ டி ஆஸிஸ் –
தமிழில் : ராஜகோபால்
●
அவன் விதி - மிகயீல் சோலகவ் - தமிழில் : மீனவன்
கவிதை
●
நெடுவழித் தனிமை – க.மோகனரங்கன்
●
இரு நீண்ட கவிதைகள் – நகுலன்
●
சொல் வெளித் தவளைகள் – றாம் சந்தோஷ்
கட்டுரை
●
குறுக்குவெட்டுகள் – அசோகமித்திரன்
●
எக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்
●
ஈழம் : தேவதைகளும் கைவிட்ட தேசம் – தமிழ்நதி
●
அன்புள்ள புல்புல் – சுனில் கிருஷ்ணன்
●
கிராம சுயராஜ்யம் – காந்தி
●
பகல் கனவு – ஜிஜுபாய் பதேக்கா – தமிழில்
: டாக்டர் சங்கரராஜுலு
●
முதலும் முடிவும் – மது ஶ்ரீதரன்
●
அன்பின் வழியது உயிர் நிழல் - பாதசாரி
சிறுகதை
●
போர்ஹேஸ் – தமிழில் : பிரம்மராஜன் (கட்டுரை,
கதை, கவிதை அடங்கிய தொகுப்பு)
●
எழுத்தும் நடையும் – சி.மணி (கட்டுரை,
கதை, கவிதை, நேர்காணல் அடங்கிய தொகுப்பு)
●
புதுமைபித்தன் சிறுகதைகள் - தொகுப்பு:வீ.அரசு
●
சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்
– லத்தின் அமேரிக்க சிறுகதைகள் – தமிழில் : அமரந்தா
●
இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் - மொழிபெயர்ப்பு
சிறுகதைகள் - தமிழில் : ஆர்.சிவக்குமார்
●
அம்புப்படுக்கை – சுனில் கிருஷ்ணன்
●
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை – சிவசங்கர்
எஸ்.ஜே
●
டொரினா – கார்த்திக் பாலசுப்ரமணியன்
●
பிரதியின் நிர்வாணம் – லைலா எக்ஸ்
●
போர்க்குரல் – லூ சுன் – தமிழில் : கே.கணேஷ்
●
சில கதைகள் – வில்லியம் ஃபாக்னர்
●
பாகிஸ்தான் சிறுகதைகள் – தொகுப்பு : இந்திஜார்
ஹுசேன் – தமிழில் : மா.இராமலிங்கம்
●
வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி
●
பாகேஶ்ரீ – S..சுரேஷ்
வரும் ஆண்டிற்கான வாசிப்பு பட்டியலில் குறைந்தது ஐந்து
முன்னோடிகளின் படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும், குறிப்பாக சிறுகதை முன்னோடிகள்.
இரண்டு ஆங்கில நூல்களாவது வாசிக்க வேண்டும். இந்தியாவின் பிறமொழி படைப்புகளையும், சிறிய
அளவில் இந்திய வரலாற்றையும், காந்தியையும் வாசிக்க வேண்டும். அதற்கான நேரமும் வாய்ப்பும்
அமையும் எனும் நம்பிக்கையில் புத்தாண்டை வரவேற்கிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.