2017 இன் வாச்சியம்
பிருஹன்னளை நாவல் வெளியான
சமயத்தில் கோவை இலக்கிய சந்திப்பில் நண்பரும் படைப்பாளியுமான இளங்கோ கிருஷ்ணனிடமிருந்து
நல்லதொரு அறிவுரை கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் கட்டுப்பாட்டிற்குள் அல்லது வரையறைக்குள்
வாசிப்பை நிகழ்த்த வேண்டும். அந்த வரையறை பாதி நேரங்களில் நிலம் சார்ந்த வரையறையாகவே
அமையும் எனவும் சொல்லியிருந்தார். உதாரணம் எனில் ஓராண்டில் முடிந்த வரை ருஷ்ய இலக்கியங்களை
வாசித்துவிடுவது. அடுத்த ஆண்டு லத்தீன் அமேரிக்க இலக்கியம் என வாசிப்பின் வழி பயணம்
செய்தல். அப்போதைக்கு இருந்த என் மனநிலை அதோடு இயைந்துகொள்ளவில்லை. ஆனால் கடந்த ஜனவரியில்
அப்படியான மனநிலையும் வாசிப்பும் சரி என்று தோன்றியது. சோதனை முயற்சியாகக் கூட செய்து
பார்க்கலாமே எனும் எண்ணமும் எழுந்தது. நிலம் சார்ந்த வரையறைக்குள் செல்லாமல் வடிவம்
சார்ந்த வரையறையை தேர்வு செய்தேன். முடிந்த அளவு சிறுகதைகளை வாசிக்க வேண்டும் என எண்ணினேன்.
மனதில் இருக்கும் பேராசையான வாசிப்பை இவ்வாண்டு நிகழ்த்த முடியவில்லையெனினும் நல்ல
வாசிப்பை மேற்கொண்டிருக்கிறேன் எனும் திருப்தி வாசித்தவற்றை நினைக்கும்போது கிடைக்கிறது.
இவ்வாண்டில் நான் வாசித்தவற்றின்
பட்டியலை கீழே அளிக்கிறேன். இந்த பட்டியல் தரவரிசைப்பட்டியல் அன்று. கொண்டாடவும் விமர்சிக்கவும்
தகுதி பெற்ற நூல்களாக வாசிப்பில் உணர்ந்தவை. ஒவ்வொருவரும் ஆண்டு முழுதும் வாசித்தவற்றின்
பட்டியலை வெளியிட வேண்டும். தனக்கு பிடிக்காத நூல் கூட நிச்சயம் யாரேனும் ஒருவருக்கு
பிடிக்கக்கூடும். அதை குறைந்தபட்சம் தலைப்பின் வழியிலாவது அறிமுகம் செய்வது வாசகனாக
ஒவ்வொருவரும் செய்யும் மகத்தான செயலாகும்.
நாவல்
சூல் – சோ.தர்மன்
தண்ணீர்
– அசோகமித்திரன்
பசித்த மானிடம்
– கரிச்சான் குஞ்சு
நவீனன் டைரி
– நகுலன்
சீர்மை –
க. அரவிந்த்
ஒளிர்நிழல்
– சுரேஷ் பிரதீப்
பருவம் –
எஸ்.எல்.பைரப்பா – தமிழில் : பாவண்ணன்
பொம்மை அறை
– லொரன்ஸ் வில்லலோங்கா – தமிழில் : யுவன் சந்திரசேகர்
விடம்பனம்
– சீனிவாசன் நடராஜன்
கனவுராட்டினம்
– மாதவன் ஶ்ரீரங்கம்
குறுநாவல்
கறுப்பு வெள்ளைக் கடவுள் – தேவிபாரதி
கட்டுரைகள்
அன்பின்
ஐந்திணை - க.மோகனரங்கன்
காந்தியை
அறிதல் – தரம்பால் தமிழில் : ஜனகப்ப்ரியா
தென்னாப்ப்ரிக்க
சத்தியாகிரகம் – காந்தி
உணவு – காந்தி
அஹிம்சை
– காந்தி
யுகத்தின்
முடிவில் – இராவதி கார்வே. தமிழில் : இராக.விவேகானந்த கோபால்
நாடகம் நிகழ்வு
அழகியல் – வெளி.ரங்கராஜன்
இலக்கியச்
சாதனையாளர்கள் – க.நா.சுப்ரமண்யம்
இந்தியாவின்
பிணைக்கைதிகள் – ஹெர்பர்ட் ஸ்டார்க். தமிழில் : ஜெ.நிர்மல் ராஜ், அனுராதா ரமேஷ்
கவிதை
இம்பர் உலகம் – ஞானகூத்தன்
சிறுகதைகள்
இருமுனை
– தூயன்
பனிமுடி
மீது ஒரு கண்ணகி – எம்.வி வெங்கட்ராம்
வண்ணநிலவன்
சிறுகதைகள்
பால்ஸாக்
கதைகள் - தமிழில் : ப.ஜீவகன்
ஆச்சர்யம்
எனும் கிரகம் – ஷிஞ்ஜி தாஜிமா. தமிழில் : வெங்கட்
சாமிநாதன்
எது நிற்கும்
? - கரிச்சான் குஞ்சு
முனிமேடு
– எம்.கோபாலகிருஷ்ணன்
டெர்லின்
ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்
வாழ்விலே
ஒரு முறை – அசோகமித்திரன்
கடைசியாக
ஒரு முறை – அரவிந்தன்
சிறந்த சிறுகதைகள்
– ஜாக் லண்டன் – தமிழில் : நா.ஜகந்நாதன்
நாயகர்கள்
நாயகிகள் – சுரேஷ் பிரதீப்
மதுரைக்
கதைகள் – நர்சீம்
அடைக்கலப்
பாம்புகள் – ரிஷான் ஷெரிப்
சர்ப்பம்
அவளை வஞ்சிக்கவில்லை – சிவசங்கர் எஸ்.ஜே
நீர்மாலை
– மு.சுயம்புலிங்கம்
முஸ்தபாவைச்
சுட்டுக் கொன்ற ஓரிரவு – அகரமுதல்வன்
இறுதிஇரவு
– சரவணக்காரத்திகேயன்
கேசம் –
நரன்
தஞ்சை பிரகாஷ்
சிறுகதைகள்
மேற்கூறிய அடுக்கில் சில
நூல்களுக்கு கிமு பக்கங்களில் நூல் குறித்து எழுதலாம் என எண்ணம் வைத்திருக்கிறேன்.
விரைவில் எழுதவும் செய்வேன். நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்ட சின்னச் சின்ன தோல்விகளிலிருந்து
என்னை மீட்டெடுத்தது மேற்கூறிய அடுக்கிலிருக்கும் சில சொற்கள் தான். அத்தகைய சொற்களோடு
புத்தாண்டிலும் தொடர்ந்து பயணிப்பேன். பயணிப்போம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக