Wolf is a wise dog
The aim of life was meat. Life itself was meat. Life lived on life. There were the eaters and the eaten. The law was : EAT OR TO BE EATEN
ஜாக் லண்டனின் பெயர் செங்கல்பட்டில்
நிகழ்ந்த சிறுகதை முகாம் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைபித்தன்
எழுதிய சிறுகதை சார்ந்து பேசும் பொழுது ஜாக் லண்டனின் எழுத்து வகையை எப்படி புதுமைபித்தன்
கையாண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். மேலும் அவருடைய சில படைப்புகள்
தமிழிலும் கிடைக்கின்றன. அவருடைய எழுத்தில் என்ன இருக்கக்கூடும் என்பதை அறிய அவருடைய
நாவலொன்றை வாங்கியிருந்தேன். அது White Fang.
ஜியாங் ரோங் எழுதிய ஓநாய் குலச்சின்னத்தில்
ஓநாய்கள் சார்ந்து இருக்கும் ஆவணங்களும் படைப்புகளும் தெளிவாக சொல்லப்படும். அவை மிக
மிகக் குறைவு. இந்நிலையில் ஓநாய் குலச்சின்னம் ஓநாயை ஒரே சமயத்தில் மிருகமாகவும் உன்னதமான
உயிரினமாகவும் சித்தரிக்கக்கூடிய படைப்பு. அப்படைப்பு தன்னளவில் பல அரசியல் விஷயங்களை
பேசினாலும் ஓநாயின் குணாம்சங்களை நடுநிலையாக பேசுகிறது. ஓநாய்கள் தங்களுடைய தனித்தன்மைகளை
ஒருப்போதும் விட்டுத்தராதவை. நாய்கள் அவர்களை விட குறைந்தவர்கள் என்பதை குணாம்சங்களுடன்
கூறியிருப்பர்.
இதை இங்கே கூறக்காரணம் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலில் ஓநாய்கள் குணமளவில் பெரும் மாற்றங்களை கொண்டு நாயாக
மாறுகிறது. இந்நாவலின் தனிச்சிறப்பு ஒநாய்களின் உலகத்தை எழுதுவது தான். ஓநாய்களை மையப்பாத்திரமாக்கி
அவர்களின் உலகை, இவ்வுலகை அவர்கள் காணும் நோக்கை முழுமைக்குமாக விவரித்திருக்கிறார்.
முக்கியமாக அவரின் விவரணைகள் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மிருகங்களாக இருக்கின்றனர்
என்பதை எடுத்துரைப்பதற்காகவே இருக்கிறது. அதை ஓநாயின் பார்வையில் கூறுகிறார்.
இந்நாவலைப் பற்றியும் மிருகங்கள்
மற்றும் மனிதர்களுடனான தொடர்புகளை பற்றியும் தன்னுடைய கட்டுரை ஒன்றில் ஜாக் லண்டன்
தெளிவாக கூறுகிறார். அஃதாவது மிருகங்கள் தங்களுடைய உடலியக்கங்களாலும் அனிச்சை செயல்களாலும்
மட்டுமே செயல்களை செய்கின்றன. சிந்தித்தல் அவர்களுக்கு இல்லை. அது மனிதர்களுக்கு மட்டுமே
இருக்கிறது. மனிதன் அந்த செயலை வைத்து மிருகங்களை ஆட்டிப்படைக்கிறான். மிருகங்கள் மேலே
கூறிய இரண்டு விஷயங்களை மட்டுமே செய்கிறது.
நவீனத்தின் நோக்கில் பார்க்கும்
பட்சத்தில் இந்நாவல் தோல்வியடைந்ததாகவே கருதப்படும். அதற்கான காரணம் ஓநாய் குலச்சின்னத்தை
படிக்கும் பட்சத்தில் ஓநாய்களின் சிந்தனையை நம்மால் வியக்க முடியும். ஒரு வேட்டையை
நிகழ்த்தும்முன் அவை கூட்டமாக அமைதியாக செயல்படுத்தும் திட்டங்கள் இரை வெளியவே செல்ல
முடியாததாக்கிவிடும். இந்த நாவலை வாசிக்க நேர்ந்திருப்பின் ஜாக் லண்டன் தன்னுடைய கருத்தை
மனிதர்களின் சிந்தனைகளில் பாதியினை கொண்டிருக்கிறது மிருகங்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.
கதையளவில் வொயிட் ஃபாங்க் நீண்ட
பயணத்தை கொண்டிருக்கிறது. பெண் ஓநாய் நிகழ்த்தும் வேட்டைகளில் தொடங்குகிறது நாவல்.
அதை மனிதர்களின் பட்சத்திலிருந்து ஆசிரியர் கூற ஆரம்பிக்கிறார். நாவல் முழுமைக்கும்
ஆறு பகுதிகளாகவும் அதன் உள் அத்தியாங்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதியை
தவிர்த்து மீத அனைத்து பகுதிகளும் ஓநாயின் பார்வைகளாக நகர்கிறது. முதல் பகுதியில் வரும்
பெண் ஓநாய் அந்த பகுதியுடன் நின்றுவிடுகிறது. பின் அதன் குட்டியின் கதையே நாவல் முழுக்க
நீள்கிறது.
காட்டிலிருக்கும் ஓநாய் சமவெளிப்பகுதிகளுக்கு
வரும் போது அங்கிருக்கும் வேறு உயிரினங்களான மனிதர்களை காண்கிறது. அன்பிலிருந்து அடிமைத்தனம்
வரை வெறித்தனமாக வெளிப்படுத்தும் பன்முக மனிதர்களை அடையாளம் காண்கிறது. தன் இருத்தலை
நிலைநாட்ட பின்பற்றவேண்டிய சட்ட ஒழுங்குகளை அதுவே அவதானிக்கிறது. மனிதர்களுடன் வாழும்
போது அதனுள் இருக்கும் முரட்டுத்தனங்களும் காட்டின் சுதந்திரமும் அதனூடே இல்லாமலாகிறது.
மனிதர்கள் ஓநாயை நாயென கருதுகிறார்கள். நாயாக மாற்ற முனைகிறார்கள். அதன் விளைவு ஓநாய்
தன் குணங்க்ளை இழக்க நேர்கிறது. அப்போது ஒரு பாத்திரம் சொல்லும் வாக்கியமே இப்பதிவிற்கான
தலைப்பாகிறது.
இந்நாவல் க்ளாசிக் என சொல்லப்படுவதன்
முக்கிய காரணம் மனிதனை பகுப்பாயும் மிருகத்தின் குணமாகவே இருக்கிறது. மனிதனே உலகம்
முழுக்க நிரம்பியிருக்கிறான். ஆனால் எல்லா மனிதர்களும் ஒன்றல்லவே. அந்த மிருகத்துடன்
போட்டியிடும் போதும் சமனிலையாக உடன் செல்லும் போதும் அவர்களுக்கான சட்டங்களுக்கிடையில்
நாம் சிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆள நினைப்பவர்கள் அவர்கள் என்னும் மேல்நிலை தொனியிலேயே
மனிதர்கள் லண்டனின் எழுத்தில் உலாவருகிறார்கள்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில்
ஓநாயை பார்க்கும் போது ஓநாய் குலச்சின்னம் நாவலே நினைவில் எழுந்தது. உடனே கண்களில்
கண்ணிரே முட்டிக் கொண்டு நின்றது. இந்நாவலை வாசிக்கும் போது இதற்கேற்ற ஓநாய் தான் வண்டலூரில்
இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். ஓநாய்கள் காடுகளுக்கானவை என்பதை இரண்டு நாவலின்
வாசிப்பும் என்னுள் புரிதலை கொடுக்கிறது. ஜாக் லண்டன் என்னுள் இருந்த ஓநாயின் பிம்பத்தை
லேசாக கலைத்தாலும் ஓநாயை மானசீகமாக விரும்பவே செய்கிறேன்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக