சென்னை புத்தக திருவிழா
வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான பிரத்யேக திருவிழா தான் சென்னையின் புத்தக திருவிழா. எங்கு சென்றாலும் துரத்திக் கொண்டே வரும் நூல்களின் மணமும் தேடி செல்ல வைக்கும் நூல்களின் அறியப்படாத சுவையும் நம்மை மேலும் பித்தனாக்கும். சென்னையில் இல்லை என்பதை இத்தருணங்களில் அதிகமாக உணர்கிறேன். தினம் திருவிழாவிற்கு வர வேண்டும் என்று ஆசை. இம்முறையோ ஒரு நாள் மட்டுமே வருவேன். எப்போது என்று தெரியவில்லை. இப்போதைக்கு இரண்டு நாவல்களும் கிடைக்கும் அரங்கு எண்களை பகிர்கிறேன்.
எனக்கும் என் படைப்புகளுக்குமான உறவு வெளியீட்டுடன் பலகீனம் கொள்கிறது. வாசகர்களை தனதாக்கிக் கொள்கிறது. இனி அதன் அமைப்பையும் அழகியலையும் விமர்சனங்களையும் வாசகர்களிடமிருந்தே அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்நோக்குகிறேன். அதற்காக சில அரங்குகளில் காத்திருக்கின்றன என்னிரு நாவல்கள். . .
0 கருத்திடுக. . .:
Post a Comment
கருத்திடுக