மிளிர் கல்
முருகவேள் தன்னுடைய முதல் நாவல் "மிளிர் கல்" சார்ந்து என்னிடம் முன்னமே ஒருமுறை பேசினார். ஆனால் தலைப்பை சொல்லவில்லை. அப்போதிலிருந்தே இந்நாவலுக்காக காத்திருந்தேன். சங்க இலக்கியங்கள் சார்ந்து நூல் வாசிக்கும் யாவருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை சரியான நேரத்தில் சரியான விதத்தில் தூண்டி விடத் தான் யாருமில்லை. எப்பேர்பட்ட இலக்கியமாக இருந்தாலும் அதன் சாரம் நான்கு வரிகளிலோ எட்டு வரிகளிலோ சங்க இலக்கியங்களில் நிச்சயம் இருக்கும். இதை அணுகுவதற்கு நமக்குள் விளக்கமறியாத தயக்கம் எப்போதும் குடி கொண்டிருக்கிறது. இந்த தயக்கத்தை தாண்டி மதபேதமற்று சங்க இலக்கியத்தை ஒரு இலக்கிய பிரதியாக, சராசரி வாசகனை அணுக வைக்க அந்நூல் சார்ந்த தர்க்கங்கள், அனுபவ எழுத்துகள் வேண்டும். அதை இந்நூல் நாவல் என்னும் வடிவத்தில் செய்திருக்கிறது. அது சார்ந்த என் "ஆய்வு இரக்கமற்றது" என்னும் தலைப்பிட்ட கட்டுரை மலைகள் இதழில் வெளியாகியிருக்கிறது.
அதற்கான லிங்க் - http://malaigal.com/?p=4623
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக