se7en - 1995

உலகமே அறத்தில் தான் இயங்குகின்றது என்பதை அக்காலத்தில் அதிகம் நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மக்களின் எண்ணங்களும் செயல்களும் அறத்திலிருந்து பிழன்று சென்றதை அக்காலத்திய மக்கள் கண்டு கோபம் கொண்டனர். மக்களை நன்வழி செய்ய வேண்டும் என எண்ணினர். அப்போது அவர்களுக்கு இருந்த ஒரே வழி பாவ புண்ணியம் தான்.

கிரேக்கத்தில் இருந்த இவாக்ரியஸ் என்பவர் எட்டு பாவங்களை வகுத்தார். அவை gluttony, lust, avarice, sadness, anger, acedia, vainglory, and pride. இந்த பாவங்களின் அளவை பின் போப் க்ரிகோரி என்பவர் ஏழாக குறைத்தார். மேலே இந்த லிஸ்டிலிருந்து vainglory என்பதையும் pride னுள் அடக்கி ஏழாக்கினார். அந்த ஏழு பாவங்களாவன

gluttony - இதை பெருந்தீனிக்காரன் என சொல்லலாம். அஃதாவது தேவையுள்ளவர்களுக்கு அளிக்காமல் தனக்கே என்று தின்பவன்.

lust - பணம் சாப்பாடு புகழ் அதிகாரம் மற்றும் குறிப்பாக காமம் ஆகியவற்றின் ஒரு வார்த்தை. பெருவாரியாக தவிர்க்க முடியாத காம இச்சைகளுக்கே இதை சொல்வார்கள்.

avarice(greed) - இதுவும் இச்சை சார்ந்தது தான். அடுத்தவர்களின் பொருட்கள் மேல் கொள்ளும் இச்சை.

(acedia, sadness) sloth - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலைகள் பிறவிப்பயனாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வேலைகளை செய்யாமல் சோம்பேறியாய் இருத்தல்.

wrath - வெறுப்பாலும் கோபத்தாலும் பொங்கி எழும் வெறி

envy - இதையும் அடக்கவியலாத இச்சை என்று சொல்கிறார்கள். பிறரின் கௌரவம் மேல் கொள்ளும் பொறாமை.

pride - இதை ஏழு பாவங்களிலேயே முக்கியமாக கருதியிருக்கின்றனர். பிறரின் நன்முயற்சிகளை பொருட்படுத்தாமல் தன்னையே பிறரை காட்டிலும் மேலோங்கியவன் என்று எண்ணிக் கொள்ளுதல்.

இந்த ஏழு பாவங்களையும் நிறைய எழுத்தாளர்கள் தத்துவ அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். இப்பாவங்களுக்கு என்ன என்ன தண்டனை கொடுக்கப்படும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அது எழுத்தாளர்களைப் பொருத்து மாறுபடக் கூடியது. இதை சொன்னதன் நோக்கம் இந்த ஏழு பாவங்களை மட்டுமே வைத்து, குறிப்பாக கதைப் போன்றதொரு வடிவத்தை கொணராமல் எடுக்கப்பட்ட படம் தான் se7en.


இந்த ஒரு திகில் படத்தை பொருத்தமட்டில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதற்கான பெரிய காரணம் படத்தில் கதையே இல்லாமல் இருப்பது தான்.

இந்த படத்தில் இரண்டு டிடெக்டிவ்கள் வருகிறார்கள். ஒருவர் சோமர்செட் மற்றொருவன் மில்ஸ். ஒருவர் முதியவர் ஒருவன் இளையவன். மூத்தவர் விவேகம் மிக்கவர். இளையவரோ முழுக்க வேகம் தான். இதை திரைக்கதையில் எங்கெல்லாம் காண்பிக்க முடியுமோ அங்கெல்லாம் அழகுற காண்பித்திருக்கிறார் இயக்குனர். சோமர்செட்டின் வேலை முடியப்போகிறது. இருந்தாலும் இவனுக்கு உதவி செய்கிறார். அவருடைய உழைப்பில் இருக்கும் பொறுமை இவனிடம் சிறிதும் இல்லை. இந்த விஷயமும் நடிப்பில் சாதாரணமாக தெரிகிறது.

ஒவ்வொரு பாவங்களுக்காக கொலைகள் நகரில் அந்த வாரத்தின் திங்களிலிருந்து ஒவ்வொரு நாளாக நிகழ்ந்து கொண்டே வருகிறது. ஐந்து கொலைகள் நிகழும் போது கொலைகாரன் தானாக முன்வந்து மாட்டிக் கொள்கிறான். அவன் முன்வைக்கும் விஷயம் அன்று மாலை மீத இரண்டு பிணங்களை  காண்பிப்பேன் என்றும் அதற்கு உடன் ஹீரோக்களான இரண்டு டிடெக்டிவ்களே வர வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்கிறான். கோரிக்கையை அவர்களும் ஏற்கின்றனர். இதன் முடிவு என்ன என்பதே படத்தின் அதிரடியான க்ளைமாக்ஸ்.

படத்தில் கிளைக்கதைகள் நிறைய வருகின்றன. படத்தின் கடைசியில் எல்லா கிளைக்கதைகளையும் டிராமா என்னும் வகையறாவிற்குள் அடக்குவது போல திரைக்கதை அமைந்திருக்கிறது. ஒரு கிளைக்கதை மில்ஸின் மனைவி. அவள் கர்ப்பமாகி இருப்பதை கணவனிடம் சொல்லலாமா என நினைக்கிறாள். சோமர்செட்டின் மீது நம்பிக்கை வருவதால் கணவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று ஆலோசனை கேட்கிறாள். அதற்கான காரணம் அந்த நகரத்தில் தன் குழந்தை பிறப்பதை அவள் விரும்பவில்லை. அதற்கு அவர் சொல்லும் பதிலோ விருப்பமிருந்தால் அவனிடம் சொல் இல்லையெனில் சொல்லாதே அழித்துவிடு என. இதை திரைக்கதையில் உபயோகபடுத்திய விதம் அருமை.

ஒட்டு மொத்த படத்திலும் காமிரா ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. வில்லனை படத்தின் அநேக இடங்களில் காட்டுகிறார்கள். ஒருமுறை அவன் பிடிபடவும் செய்கிறான். அங்கே போலீஸிற்கும் அவனுக்கு ஓட்டம் வேட்டை என நிகழ்கிறது. ஆனால் அப்போதும் அவன் முகத்தை நமக்கு காண்பிப்பதில்லை. அவனை மட்டுமின்றி சில கொலைகளையும் இப்படியே கேமிராவால் மர்மமான முறையில் காண்பிக்கிறார்கள். இதில் விஷயம் படத்தில் பிணத்தை மட்டுமே காண்பிக்கின்றனர். இருந்தாலும் கொலையை பார்த்ததன் உணர்வை கேமிரா கொடுக்கின்றது.

படத்தின் கடைசி அரை மணி நேரம் tip to seat என்பதன் உண்மையான அர்த்தம். கொலைகாரனை காண்பிக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து படம் வசனங்களால் அவ்வளவு திகில் அடைகிறது. ஏன் அந்த கொலைகளை செய்தான் என்னும் கேள்விக்கு அவன் அளிக்கும் பதிலும், சோமர்செட் கவனமாக கொலைகாரனை அவதானிப்பதும், மில்ஸ் அவசர புத்தியில் அவனுடன் வார்த்தையில் சண்டையிடுவதும், கொலைகாரனோ அமைதியாகவே ஒரு துறவியைப் போல பதில் அளித்து பயனிப்பதும் ரணகளம். சரியான வார்த்தை ரணகளம் என்றே நினைக்கிறேன்.

இப்படத்தில் கதை இல்லை என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். ஆனாலும் கதை தேடும் மனதை இந்தப் படத்தால் நம்மிடமிருந்து பிரிக்க முடியவில்லை. இப்படத்திற்கு மாற்று க்ளைமாக்ஸும் ஒன்று உள்ளது. ஆனால் அது வெளிவரவில்லை போல. எழுத்து வடிவத்தில் மட்டுமே கண்டேன். படத்தைக் கண்டவுடன் இணையத்தில் பிராய்ந்து வாசித்துக் கொள்ளுங்கள்.

கடைசி அரை மணி நேரத்திற்காக மட்டுமே கூட இப்படத்தை பார்க்கலாம். படத்தில் வரும் வில்லனின் மௌனம் கணம் நிறைந்ததாய் இருக்கிறது. அதையே அதிகம் ரசிக்கிறேன்.

Share this:

CONVERSATION

3 கருத்திடுக. . .:

Subash basu said...

See The Pursuit of Happyness

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்க ஆவலைத் தூண்டும் விமர்சனம்... நன்றி...

Vignesh JR said...

i didnt understand the reason for killing tracy, its just he admires the life of mills? is that it?

Post a Comment

கருத்திடுக