கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (6)
சிறுகதைகள்
எழுத முனைபவர்களுக்கென சில எழுத்தாளர்களை அறிமுகம்
செய்தார். அவர்களாவன - ஜாக் லேண்டன், காஃப்கா,
இடாலோ கால்வினோ, மிலன் குந்தேரா, கேப்ரியல்
கார்ஸியா மார்க்வேஸ், கார்லோஸ் புவந்தேஸ், ஹெமிங்வே, வில்லியம் ஃபௌல்க்னர், சகி, ஆலிஸ் மன்றோ,
ஆண்டன் செகாவ், மக்ஸிம் கார்க்கி,
டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, லூயி போர்ஹேஸ், விலாஸ்
அரங்க், சாதத் ஹஸன் மண்ட்டோ,
வைக்கம் முகமது பஷீர், பால்
சக்க்கரியா, சேது, அ மாதவன்,
இஸ்மத் சுக்தாயி, ஹைதர், ரேமன் கார்வார்.
விடுபட்டவை போக மீதியே இவை.
இதில் செகாவை நிச்சயம் வாசிக்க
சொன்னார். நானூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருப்பவர் செகாவ்.
அதில் இருநூற்றி ஐம்பதிற்கும் மேல் சிறப்பான கதைகள்
என்று உலகில் சொல்லப்படுகிறதாம்.
பிரத்யேகமாக
அவரிடம் சென்று சாரு நிவேதிதாவின்
நேநோ, ஜோக்கர் இஸ் ஹியர்,
மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
போன்ற கட்டமைப்பையே மையமாகக் கொண்ட கதைகள் உலக
இலக்கியங்களில் உள்ளனவா என்று கேட்டேன்.
அவர் பதில் நிறைய சொன்னார்.
மீண்டும் மைக்கில் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால்
சொல்லவில்லை. அவர் சொன்னதில் ஒரு
பெயர் மட்டுமே நினைவில் நின்றது.
டொனால்ட் பார்தெல்மே.
மாலை
நேரம் நெருங்க மீண்டும் ஒரு
தேநீர் இடைவேளை விடபட்டது. அதில்
ஒற்றை செம்பருத்தி தேநீர் கொடுத்தார்கள். இரட்டை
செம்பருத்தியில் போடக் கூடாது என்றும்
சொன்னார்கள். ஏன் என்று தான்
தெரியவில்லை.
எழுத்தாளர்கள்
எல்லோரும் தங்களின் வாழ்க்கைக்கு ஒரு மாற்று தேவை
அதனால் இலக்கியத்தை கொண்டிருக்கிறோம் என்று சொல்வதை கேட்டிருப்போம்.
இவர் சொல்வதோ கலை யதார்த்த
வாழ்க்கையின் மாற்று கிடையாது என்பதே.
இலக்க்கியம் யதார்த்த பிரச்சினைகளினின்று தப்பிப்பதற்கு ஒரு வழி என்கிறார்.
மேலும்
இலக்கியம் நிகழ்காலத்தையோ எதிர்காலத்தையோ அதிகம் பேசுவதில்லை. இலக்கியம்
சுயத்தின் உலகத்தின் கடந்தகாலத்தையே அதிகம் பேசுகிறது என்கிறார்.
இதோடு பெண் எழுத்தாளர்கள் சார்ந்தும்
பேச்சுகள் எழுந்தன. அதில் அவர் சொன்னதாவது
ஆண் கதை எழுதினால் அது
அவனுக்கு விடுதலை. பெண் கதை எழுதினால்
அது அவளுக்கு பிரச்சினை என்று. கதை எழுதுகிறவள்
என்றாலே அந்த பெண்ணிற்கு வீட்டில்
பிரச்சினை முளைத்துவிடும் என்கிறார். வீட்டில் சம்மதம் கிடைத்தாலும் சம்மந்தமில்லாத
இடங்களில் இதை வைத்து உணர்வு
ரீதியான தாக்குதல்கள் நிறைவேறும் என்றும் சொல்லிச் சென்றார்.
தோற்றுப்
போகிறவர்களையே இலக்கியம் தன் வசம் இழுத்துக்
கொள்கின்றது என்கிறார். ஜெயித்துக் கொண்டிருப்பவர்கள் உலகில் குறைவு. நான்
ஜெயித்து என்ன செய்யப் போகிறோம்
? அடுத்தவனிடம் நான் ஏன் எல்லா
தடவையும் என்னை நிரூபிக்க வேண்டும்
என்று நினைப்பவர்களை இலக்கியம் தனதாக்கிக் கொள்கிறது. கற்பனையே மனிதனின் வீழ்ச்சி தானே என்கிறார். தேநீர்
இடைவேளை முடிந்தவுடன் சிறு விளையாட்டொன்றை நிகழ்த்தினார்.
அதை
அவர் நிகழ்த்தும் போது ஆரம்பத்தில் ஆர்வமாய்
இருந்தாலும் போகப் போக சலிப்பினை
ஊட்டியது. அதே சில மணி
நேரங்கள் கழித்து அதை நினைத்துப்
பார்க்கையில் எவ்வளவு உன்னதமான விஷயமென்றே
தோன்றியது.
அவர்
கைவசம் முப்பது படங்களை வைத்திருந்தார்.
ஒவ்வொன்றாக வேடியப்பனிடம் கொடுத்து எல்லோரிடமும் காட்ட சொன்னார். அவற்றில்
முதல் படத்தில் சேவல் கொண்டை தெரிந்தது.
அடுத்த படத்தில் சேவல் இருந்தது. அப்போது
இது இங்கே காண்பவனுக்கு யதார்த்தமாகின்றது.
ஆனால் இது யதார்த்தமில்லை என்பதற்கு
அதில் ஒரு க்ளூ இருக்கிறது
என்றார். அடுத்த படத்தில் ஒரு
சிறுவன் ஜன்னலின் வழியே அந்த சேவலை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆக சேவல் யதார்த்தம்
என நம்பியிருந்த பார்வை இப்போது சிறுவனை
யதார்த்தமாக நம்புகின்றது. அடுத்த படத்தில் சிறுவன்
ஒரு அறையினுக்குள்ளே சிறுமி ஒருத்தியுடன் இணைந்து
சேவலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இப்படியே
ஒவ்வொரு படமும் படத்தினுள் இருக்கும்
நிலவியலால் விரிந்து கொண்டே செல்கிறது. பன்றிகள்,
அருகருகே வீடுகள் காண்பித்தவாரு எல்லாம்
அட்டைப்படம், அது ஒரு போஸ்டர்,
பேருந்தின் மேலே ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்,
கப்பல், விமானம், தீவு என்று அது
ஸ்டாம்ப் வரை சென்று கடைசி
படத்தில், அஃதாவது முப்பதாவது படத்தில்
உலகத்தை பிரபஞ்சத்தை காட்டுகிறார். அங்கே எல்லாம் இருக்கிறது.
எதையும் நுண்மையாக பார்க்க முடியவில்லை.
இந்த
முறையை zoom out and zoom
in என்கிறார். இது கதையினுள்ளே சொல்லப்படும்
படிமங்கள். இது எல்லாம் எதற்காக
எனில் வாசகனை நம்பவைக்க. நம்பவைத்தலே
எழுத்தாளனுக்கு பிரதானமான ஒன்று. இந்த நம்பவைத்தல்
ஏதேனும் ஒரு இடத்தில் தளர்ந்து
செல்கிறது. இருந்தும் இழுத்து பிடிக்க வைத்து
அவனுக்கு கடைசியில் இருக்கும் விஷயத்தை உணர்த்த வேண்டும்.
கடைசிவிஷயம்
எனில் ? ஒவ்வொரு சிறுகதையும் பிரதானமாக
சில விஷயங்களை தத்தமது மையமாக கொண்டிருக்கின்றன.
வாசகனுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள்
தனி மனிதன் சார்ந்தும் இருக்கலாம்.
இந்த தனி மனிதன் சார்ந்த
விஷயங்கள் உலகமயமாக்கப்படும் போது அது இலக்கியமாகிறது
என்கிறார். சராசரி சிறுகதையின் அடிநாதமே
இது தான்.
இதை
முடித்து it’s a wonderful
life என்னும் திரைப்படத்தைப் பற்றி சொன்னார். அமேரிக்காவில்
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய தினம் இப்படத்தை
தொலைக்காட்சிகளில் போட்டு எல்லோரையும் அழ
வைப்பார்களாம். இந்தப்படமோ எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று
என்று அதன் கதையை சொல்லிக்
கொண்டிருந்தார். இந்த ஒரு படத்தின்
கதை அன்றைய நிகழ்வு, நிகழ்வில்
பேசப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்ப்பது போல
தோன்றியது. மீமாயத் தோற்றமாகவும் இருக்கலாம்!
இதோடு
முகாம் நிறைவடைந்தது. இதற்கு பின் போட்டோக்கள்
எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். கையெழுத்து
வாங்குபவர்களும் வேக வேகமாக வந்து
கொண்டே இருந்தார்கள். வடையும் மீண்டும் ஒற்றை
செம்ப்பருத்தி தேநீரும் கொடுத்தனர். நான் தேநீருக்கு அடிமையாகிவிட்டேனோ
என்னும் எண்ணம் எனக்கு வந்து
சென்றது.
ஒரு
நாள் முழுக்க இலக்கிய வாசனையுடன்
இருந்தது இதுவே முதல் முறை.
கையெழுத்திட்ட நூல். அருகில் அமர்ந்தவாரு
ஒரு போட்டோ சிறுகதை இலக்கியம்
சார்ந்து அறிவு என்று அகப்பொலிவுடன்
வெளியே வந்தேன். மீண்டும் பயணம்.
தண்டரையிலிருந்து
கிளம்பும் போது மனதில் தோன்றிய
ஒரே விஷயம்
“நான்
இவர கொண்டாடாம யார் இவர கொண்டாடப்
போறாங்க” என்பதே.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல இது.
மேலும்
இதை ஒருங்கிணைத்த வேடியப்பன், அவரின் நண்பர்கள், முழு
நாளும் நின்று கொண்டே உரையாற்றிய
எஸ்.ராமகிருஷ்ணன், நிகழ்வை அமைதியாக நிகழ்த்திய
முகமறியா நண்பர்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
குறுந்தொடர்
முடிந்தது.
தொடரின் முந்தைய பதிவுகளுக்கான இடுகைகள்
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (5)
தொடரின் முந்தைய பதிவுகளுக்கான இடுகைகள்
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (5)
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக