கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (5)
மொழிபெயர்ப்பு
இலக்கியத்துள் சிறு வட்டமிடுவோம். உலக
இலக்கியம் வாசிக்க அது எழுதப்பட்ட
நிலவியலின் பின்புலத்தை அறிதல் முக்கியமான விஷயம்
என்றார். இதனுடன் என் மனம்
ஒப்பவில்லை. அதற்கு என் வயதை
காரணமாக சிலர் சொல்வர். இருந்தாலும்
என் மனம் இதை ஏற்பதில்லை.
இங்கு அவர் சொன்னதை மட்டும்
பதிவு செய்கிறேன்.
காப்ரியல்
கார்சியா மார்க்வேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல்
நோபல் பரிசு பெற்ற போது
அதை செய்தித் தாளில் பார்த்திருக்கிறார். தனக்கு
தெரிந்த நண்பர்களிடம் சென்று இந்த நூல்
எங்கு கிடைக்கும் என்று கேட்ட வண்ணம்
இருந்திருக்கிறார். யாருக்கும் தெரியவில்லை. பெரும் பதவியில் இருந்த
ஒருவரிடம் சென்று கேட்ட போது
சென்னையில் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய
நண்பர்களின் துணை கொண்டு வாங்க
முடியுமா என்றும் கேட்டிருக்கிறார். அவரோ
அங்கும் இல்லை டில்லியில் தான்
கிடைக்கும் என்று சொல்லிவிட்டாராம். எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் கிளம்பி டில்லி சென்றிருக்கிறார்கள்.
ஐயாயிரம் ரூபாய்க்கு நூல்களை வாங்கி திரும்பினார்களாம்.
வந்தவுடன்
தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை
வாசித்து முடித்துவிட்டார் எஸ்.ரா. ஆனால்
அவரால் நாவலுக்குள் நுழைய முடியவில்லை. எப்படி
புரிந்து கொள்வது எனும் போது
கொலம்பியாவின் அரசியலை மட்டுமே அறிந்திருந்த
சிலரிடம் இணைந்து அந்நாட்டின் நிலையை
அறிந்து பின் வாசித்து புரிந்து
கொண்டாராம். அப்போது நாவல் அவருக்கு
எளிமையாகியிருக்கிறது. ஓநாய் குலச் சின்னத்தை
இங்கு சொல்லியிருக்க வேண்டும்!! முன்பே சொன்னது என்
பிழை தான்.
விஞ்ஞான
சிறுகதைகள் சார்ந்தும் சொன்னார். தமிழில் விஞ்ஞான சிறுகதைகள்
குறைந்திருக்கிறது என்று சிலர் அவரிடம்
முறையிட்டார்கள். அவர் சொன்ன விஷயம்
இங்கு விஞ்ஞான சிறுகதை எழுத
முனைபவர்கள் யாவரும் விஞ்ஞானம் அறிந்திருக்க
வேண்டும் என்று நினைக்கிறார்கள். தர்க்கம்
நிறைந்த விஞ்ஞானம் அடிநாதமாக மட்டுமே வேண்டும் என்கிறார்.
முத்துலிங்கம் புவியீர்ப்பு விசைக்கு வரி கட்டுவது போல
ஒரு கதை எழுதினாராம். அதையும்
விஞ்ஞானக் கதையென்றெ அவர் சொல்கிறார்.
விஞ்ஞானக்
கதைகளை சொல்லும் போது விஞ்ஞானக் கதைகளில்
சிறந்தவராக இன்று வரை இருக்கும்
ஐஸக் அஸிமோவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
அத்தனை விஞ்ஞானக் கதைகளை எழுதிய அஸிமோவிற்கு
கணினி எனில் பயமாம். அவருக்கு
பரிசாய் கொடுத்த கணினியை பிரிக்காமல்
முப்பது ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்தாராம்.
நேரமின்மை காரணமாக அவர் கொடுத்திருந்த பிறமொழிக் கதைகளை குறைவாக மட்டுமே சொல்லிச் சென்றார்.
பழுப்புக்
காலை
இந்தக்
கதையை எப்போதும் போல் வாசிக்காதவர்களுக்காக சொன்னார். இப்பதிவை
வாசிப்பவர்கள் வாசிக்கவில்லையெனில் இந்த லிங்கில் வாசித்துக்
கொள்ளலாம் - http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/
இந்தக்
கதை மேலோட்டமாக வாசிக்கும் போது நாய்கள் சார்ந்து
விலங்கினங்கள் சார்ந்து இருக்கும் விஷயமாகவே தெரியும். இது அரசு விலங்கினங்களை
நிலவியலிலிருந்து குறைக்க செய்யும் நூதன
முறை என நம்மை எண்ண
வைக்கும். ஆனால் இதில் சொல்லப்படுவது
வளர்ப்பு மிருகமானது மனிதனுக்கு கட்டுப்பட்டே காலங்காலமாக இருந்து வருகிறது. அதே
அரசு மனிதர்களை வளர்ப்பு மிருகங்களாக நடத்துகின்றது என்று. இதை எல்லா
அரசிடமும் காண முடியும் என்றார்.
அதிகாரத்தில்
இருப்பவர்களை எதிர்த்து எழுத வேண்டிய தருணங்களில்
இந்த மாதிரியான பூடகத் தன்மை தேவை
என்றும் சொன்னார். இக்கதை அந்நாட்டின் அரசியல்
பிரச்சினையும் கூட. அதை அவர்
எழுதியிருக்கும் விதமோ குழந்தைகளுக்கொப்ப அமைந்தது
தான் கதையின் உச்சம்.
யாருக்கும்
வேண்டாத கண்
இந்த
கதை படிமங்களை வைத்து எழுதுவதற்கான ஒரு
எடுத்துக்காட்டு. எல்லாவற்றையும் நமக்கு புலனாக்கும் கண்களை
நாம் சரியாக வைத்துக் கொள்கிறோமா
? ஒரு பக்கம் மனிதநேயமும் மறுபக்கம்
உறுப்புகளை கதாப்பாத்திரமாக்கும் தன்மையும் நிறைந்துள்ள கதை என்றே சிரிதாக
இக்கதையை முடித்தார்.
ஹருகி
முராகமி
ஹருகி
முராகமியைப் பற்றி நிறைய கூறினார்.
முராகமிக்கு ஒரு நாவல் விற்று
தீர்ந்தால் ஐம்பது கோடி கிடைக்குமாம்.
ஜப்பானைப் போலவே பல நாடுகளில்
அவருடைய அலுவலகம் உள்ளதாம். எல்லாம் ஒன்றைப் போலவே
இருக்கும். எப்போது வேண்டுமென்றாலும் அங்கே
சென்று வருவார். வீட்டிலிருந்து வெளியே வந்தால் கூட
அவரைக் காண ஐந்துலட்சம் பேர்
கூடுகிறார்கள். ஐந்து லட்சம் பேர்
கூடுவது கூட அவரைக் காண
மட்டுமே.
எப்போதேனும் இப்படி வெளியே வந்து தேநீர்க் கடைகளில் அமர்ந்து வாசகர்களுடன் பேசி சென்றுவிடுகிறார். அவர் ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரும் போல. அதை சார்ந்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்றார்.
முராகமி
ஒரு நூலை வெளியிட்டால் ஏன்
உலகம் முழுக்க வரவேற்பு பெறுகின்றது
எனில் அவரின் எழுத்துகளில் ஒரு
சூட்சுமம் அல்லது முடிச்சு அவிழ்க்கபடாமலேயே
இருக்கின்றது. பிறந்தநாள் சார்ந்து அவர் எழுதியிருந்த கதையை
வாசித்து வர சொல்லியிருந்தார். அதன்
லிங்க் - http://malaigal.com/?p=175
இந்தக்
கதையில் ஒரு புதிர் இருக்கிறது.
புதிருக்கான க்ளூக்களும் உள்ளன. புதிரை கதைக்குள்
கேள்வியாகவும் கேட்கவில்லை பதிலையும் சொல்லவில்லை. கதை மட்டும் முடிந்துவிடுகிறது.
முராகமி எங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலும்
அவர்கள் இந்த புதிரையே கேட்கிறார்களாம்.
கிழவன் அந்த பெண்ணிற்கு கொடுத்த
பரிசு என்ன என்று. அதற்கு
முராகமியின் பதிலோ அதை அப்பெண்ணிடம்
தான் கேட்க வேண்டும். அவள்
வந்து சொன்னால் தான் எனக்கே தெரியும்
என்பது தான் அது.
பெண்ணுடல்
ஆணிற்குள்ளே கற்பனையாக மட்டுமே இருக்கிறது. அதே
போலத் தான் ஆணுடலும் பெண்ணுக்குள்ளே.
இந்த கற்பனைகள் முக்கால்வாசி நேரங்களில் காமத்தால் கட்டமைகப்படுகின்றது. இந்த கட்டமைப்பை உடைக்கின்றவர்
ஹருகி முராகமி என்கிறார். பெண்கள்
சார்ந்து நவீன கோணத்தை தன்
கதைகளில் உருவாக்குகிறார் என்றார்.
ஹருகி
முராகமியிடமிருந்து ஆஸ்திரேலிய எழுத்தாளரிடம் பேச்சு சென்றது. எஸ்.ரா ஆஸ்திரேலியா சென்ற
போது பூங்காவின் மையத்தில் ஒரு எழுத்தாளரைக் கண்டாராம்.
அவர் எழுத்தாளார் தானே என்று அருகில்
இருந்தவரிடம் கேட்கிறார். அவரும் ஆமாம் என்றவுடன்
அவருக்கு அருகில் சென்று அமர்ந்து நண்பர் இவரை எழுத்தாளர் என்று
அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது
பேசலாமா என்று கேட்டவுடன் பேச
வேண்டுமெனில் என் ஆஃபீஸில் அப்பாயிண்ட்மெண்ட்
வாங்குங்கள். மேலும் அதற்கு தாங்கள்
நூறு டாலர் தர வேண்டும்.
அப்படி கொடுத்தால் அடுத்த வருடம் மே மாதம் தங்களுக்கு நாள் கிடைக்கலாம் என்றாராம்.
இது தான் அங்கே இருக்கும்
எழுத்தாளர்களின் நிலை என்கிறார். இங்கே
எஸ்.ரா ஏதேனும் அரசியல்
ஆசான்களிடம் சென்று தன் ஒரு
எழுத்தாளன் என்று அறிமுகம் செய்து
கொண்டால் அப்ப நான் யாரு
என்னும் பதிலே வருகிறதாம்.
எஸ்.ரா நிறைய கல்லூரிகளுக்கு சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். ஆனால் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான கூட்டத்தில் ஐம்பதோ நூறோ தான் கவனிக்கிறார்கள். இந்த ஐம்பது அல்லது நூறை மட்டும் பிரித்தெடுக்க முடியுமெனில் அதுவே எனக்கு போதுமே என்று கேட்டிருக்கிறார் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பனிடம். அதற்கு உருவானவர்கள் தான் என்னைப் போல வந்திருந்த 160 சொச்சம் பேர்.
பேச்சு
உலக இலக்கியவாதிகளினூடே தடம் புரண்டு சென்று
சடாரென நின்றது இனி கேள்விகளை
கேட்கலாம் என. அப்போதும் எஸ்.ரா சில விஷயங்களை
பதிலினூடக சொன்னார். அஃதாவது சில சிறுகதையினின்று
சில வரிகளை மட்டும் எடுத்து
அருமை அட்டகாசம் என்று சிலர் புகழ்வது
எல்லோரும் அறிந்தது. அடியேனும் விதிவிலக்கல்ல. அது பாயாசத்தில் இருக்கும்
முந்திரியைப் போல. யாரும் முந்திரிக்காக
பாயாசத்தை குடிக்கமாட்டார்களே என்று அசோகமித்திரனின் சிறுகதையிலிருந்து
சில வரிகளை சொல்லிக் காட்டினார்.
தமிழில்
வந்துள்ள புனைவின் களம் சுழற்சியாக மாறிக்
கொண்டு வருகிறது என்கிறார். இது கலாச்சார ஆவணமும்
கூட. எண்பதுகளிலும் அதற்கு முன்னரிலும் மென்
உணர்ச்சிகளையே மையமாக்கி புனைவுகள் வந்து கொண்டிருந்தன. பின்
எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் காலத்தில் வெறுமைகளை முன்வைத்து புனைவுகள் புனையப்பட்டனவாம். சமகாலத்திற்கு சற்று முன்பு சொல்ல
முடியாத உணர்வுகளை உதாரணமாக காமத்தை மையமாக்கியே புனைவுகள்
உருவாகின. இப்போதோ மீண்டும் மென்
உணர்ச்சிகளின் பால் நம் இலக்கியம்
நகர்ந்து செல்கிறது என்றார்.
மேலும்
இளைஞன் இலக்கியத்தை எப்படி எதிர்பார்க்க்கிறான் என்பதற்கு
ஒரு விளக்கம் கொடுத்தார். அறிவுரைகளை கேட்க எல்லா இளைஞர்களும்
தயாராக இருக்கின்றனர். ஆனால் சொல்லும் விதமே
அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதை மாற்றக் கூடிய
புனைவை தேடுகிறார்கள் அதுவே அவர்கட்கு அனுபவமாகிறது
என்றார்.
ஹேம்லெட்டில்
வரும் ஒரு வரியைச் சொல்லி
அதன் விளக்கம் சமகாலத்திற்கு பொருந்துமா என்று ஒருவர் கேட்டார்.
அவ்வரி life is a tale
told by an idiot full of sound and fury. இதில்
வாழ்க்கை ஒரு கதை சொன்னவன்
முட்டாள் எனில் எழுத்தாளன் முட்டாளா
என்னும் கேள்வியே எழுந்தது. மீண்டும் புதுமை பித்தனின் வரிகளுக்கே
சென்றார். அங்கீகரிக்கப்பட்ட பொய். மேலும் இடியட்
என்பது ஒரு நிலை. அந்நிலையில்
வாழ்க்கை கதையாகிறது நாம் கதாபாத்திரமாகிறோம். நாம்
எல்லோரும் ஏதேனும் கதாபாத்திரமாகவே முயன்று
கொண்டிருக்கிறோம் என்றார். நாம் நடந்து செல்லும்
போது நமக்கு பின்னே நம்மை
கதாபாத்திரமாக்கி ஊரார் கதை புனைந்து
கொண்டு தானிருக்கிறார்கள். எவ்வளவு உண்மையான விஷயம்!
பி.கு 1 : முந்தைய பதிவுகளை வாசிக்க பின்வரும் லிங்குகளை சுட்டவும்
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)
பி.கு 2 : இத்தொடரின் ஒரு பகுதியில் உலகை சுற்றி வந்த ஒருவரின் கதையை சொல்லியிருந்தேன் அல்லவா. அவர் பெயர் சதீஷ் குமார். அவரைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணனே தன் இணையத்தில் எழுதியுள்ளார். அதை எனக்கு சொன்ன பிரபு ராஜேந்திரனுக்கு நன்றி. அந்த லிங்க் - http://www.sramakrishnan.com/?p=374
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக