கபடவேடதாரியின் காலக்குறிப்புகள்


சாம் நாதன் என்பவருடன் எனக்குண்டான நட்பு முழுக்க இலக்கியம் சார்ந்தது எனில் யாராவது நம்புவார்களா ? உண்மையில அப்படித் தான் ஆரம்பித்தது. யதேச்சையான அழைப்பொன்றின் மூலம் நட்பு ஏற்பட்டது.

நகுலன், தஞ்சை பிரகாஷ், லா.ச.ரா, ஜெயமோகன் ஆகியவர்களின் வாசிப்பனுபவத்தை தன்னுள் திரளவிட்டு போதையில் இருப்பவர். பலமுறை பேசிய பின்னரே அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ளவில்லையே என அறிந்து கொண்டேன். அதன் பிறகு அதில் நாட்டம் செல்லாமல் பைத்தியக்காரனைப் போல் எப்போது இலக்கியம் சார்ந்த புலம்பல்களையும் பிதற்றல்களையும் அவரிடம் கொட்ட ஆரம்பித்தேன். அவருக்கு புளிக்கவில்லை. எனக்கும் சலிக்கவில்லை.

அப்போது தான் அவரின் களவு காமம் காதல் நாவல் வெளிவந்தது. வெளியீட்டிற்கு செல்ல ஆசைபட்டேன். கல்லூரியில் தேர்வு நடந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. 

கோவை புத்தக கண்காட்சி நிகழும் தருணமொன்றில் நூலை வாங்கினேன். காந்திபுரத்திலிருந்து என் விடுதி வருவதற்குள் வாசித்து முடித்தேன். அப்போதே எழுதிய கட்டுரை இந்த "கபடவேடதாரியின் காலக்குறிப்புகள்".

எஸ்.ராவின் நிமித்தம் நாவலுக்கு எழுதியிருந்த அதே வார்த்தை இக்கட்டுரையிலும் இருப்பதை இப்போதே கண்டேன். அந்த வார்த்தை
'முடிக்கையிலேயே அறிந்து கொண்டேன் என் தோல்வியை நானே கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என'.
என்ன செய்ய இலக்கியம் என்னை தோல்வியடிப்பதில் எப்போதும் வெற்றிகொள்கிறது.

கட்டுரைக்கான லிங்க் - http://malaigal.com/?p=3869

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்புக்கு நன்றி...

Post a comment

கருத்திடுக