π - 1998

THERE WILL BE NO ORDER ONLY CHAOS
பள்ளிப்படிக்கும் போது நான் டியூஷன் செல்வேன். அங்கு எனக்கு எடுத்தவர்கள் கல்லூரி பேராசிரியர்கள். அதனால் கொஞ்சம் ஆழமாகவே  விஷயங்களை எடுத்தனர். நிறைய விஷயங்கள் எனக்கு புரிந்தது. அப்போது அங்கு எனக்கு இயற்பியல் எடுத்தவர் அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்வார். இயற்பியல்வாதி வேதியியல்வாதி அல்லது உயிரியல்வாதி என யாரிடம் சென்று கேட்டாலும் அவரவர்கள் துறையினால் தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது என்பார்கள். அதற்கு தக்க சான்றுகள் அவர்கள் வசம் இருக்கும். அங்கே சண்டையே நிகழ்ந்தாலும் அதில் ஆச்சர்யமில்லை.

காரணம் உலகம் சக இயலையும் தன் வசம் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த உலகின் பிரபஞ்சத்தின்  இயக்கமும் ஒரு அமைப்பு. அதில் ஒன்று பிசகு கொண்டாலும் உலகம் தன் மறு திசையில் இயங்கக் கூடும். இந்த அமைப்பை நம்மால் எப்படி அறிந்து கொள்ள முடியும் ?

புயலிலே ஒரு தோணி என்னும் நாவலின் முன்னுரையில் மிலோராத் பாவிக்கின் வாசகம் ஒன்றை உரை எழுதியவர் குறிப்பிட்டிருப்பார். அது அறிவியலால் கனவு மட்டுமே காண முடியும். அதை சொல்லத் தெரியவில்லை. அதை சொல்வது தான் இலக்கியம் என்று. இலக்கியம் என்பது எளியோர்களுக்கு புரிய வைப்பது என்று தற்போது நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம் உலகம் இயங்கும் அந்த அமைப்பை விளக்குவதற்கு ஒரு மொழி இருக்கிறது. அது தான் கணிதம். மேல்தட்டு மொழி என்று சொல்லலாம்.

கணிதம் இல்லையெனில் நிச்சயம் அறிவியல் ஊமையாகத் தான் இருந்திருக்கும். அங்கு சில constants இருக்கிறது. அவை என்ன ஆனாலும் தனக்கான இடத்தை அளவை விட்டுத்தாராது. அப்படிப்பட்ட ஒரு constant தான் பை. இந்த பையை தலைப்பாக வைத்து எடுக்கப்பட்ட படத்தை தான் எழுத இருக்கிறேன்.


கோல்டன் ரேஷியோ என்ற ஒன்று உள்ளது. அதை நிர்மலின் பதிவுகளில் தேடி வாசித்தேன். அதை அப்படியே பகிர்கிறேன்

"To understand Golden Ratio, first we need to understand Fibonacci sequence. The first number of the sequence is 0, the second number is 1, and each subsequent number is equal to the sum of the previous two numbers of the sequence itself. So a Fibonacci sequence will look like 
0,1,1,2,3,5,8,13,21,34,55,89,144,233,377……….

Ok
So what’s special about this?

Now let us do some simple Mathematics. Take Ratio of the successive numbers of the Fibonacci sequence.

Numbers 1/0 1/1 2/1 3/2 5/3 8/5 13/8 21/13 34/21 55/34 89/55 144/89 233/144 377/233
Ratio Infinity 1 2 1.5 1.667 1.6 1.625 1.615 1.619 1.618 1.618 1.618 1.618 1.618

Can you find that the ratio started with infinity had settled to a constant value of 1.618? In fact this is not a constant value, it is an irrational number same like our PI (3.142…..)

This ratio 1.618 is called Golden ratio.

Interesting thing about the Golden Ratio is the Application in various fields and existence in Nature. Golden ratio is being used right from Art, Literature, Music, Architecture, Aesthetics etc……."


இதை ஒரு செவ்வகத்தில் பிரதியிடுவார்கள். அதை Golden rectangle என்கின்றனர். அந்த செவ்வகத்தை இரு சதுரமாக பிரித்தால் ஒரு செவ்வகத்தை மீதக் கொடுக்கும். மேலும் ஒவ்வொரு பாகமும் நிர்மல் சொல்லியிருக்கும் கோல்டன் ரேசியோவை ஏற்கும். இது தொடர்ந்து கொண்டே செல்லும். கடைசியில் எல்லா சதுரங்கங்களின் முனைகளையும் சேர்த்தால் அது ஒரு ஸ்பைரலை கொடுக்கும்.

இப்பொது தான் விஷயமே. இந்த ஸ்பைரலை நீங்கள் எங்கும் எதிலும் காணலாம். இது தனக்குள் ஒரு மாபெரும் புதிரைக் கொண்டுள்ளது. இதை வேறு ஒரு கிரேக்க எழுத்தால் குறிக்கிறார்கள். அது ரோ என்று. ஆனால் கணித வகைகளில் இந்த ரோவும் பையும் ஒன்று தான் என்பது தெரியவருகிறது. பின்வருவதை கணித ஆர்வமுடையவர்கள் வாசியுங்கள் இல்லையெனில் ஒரே ஜம்ப் அடுத்த பத்திக்கு

"Phi is also written as ρ. It's used in the spherical cordinate system. There's cartesian where we use the x,y plane, then polar where we use r,θ. And r=squareroot of(x^2+y^2) , also y=rsinθ, and x=rcosθ. Then we go to cylindrical cordinates where we use x,y,z. and x=rcosθ, y=rsinθ, and z = z."இணையத்தில் கிடைத்தது.


திரைப்படத்திற்கே இப்போது தான் செல்கிறோம். இந்த சூட்சுமத்தை தன் மண்டையின் ஒவ்வொரு மூளையிலும் ஆணி அடித்ததைப் போல் வைத்து பித்தனாக சுற்றிக் கொண்டிருப்பவன் தான் பை படத்தின் நாயகன் மாக்ஸ் கோஹன். பை என்பது தான் இந்த உலகம் முழுக்க கலந்திருக்கிறது. சூரியனை அதிகம் அவனுடைய அம்மா பார்க்காதே என்று கூறுகிறாள், திரவத்தில் ஒரு பொடியை கலக்கும் போது இந்த ஸ்பைரல் வருகிறது, சங்கின் மேல், ஒரு பூச்சியின் திரவத்தில், உலகமே இதில் தான் அடங்கியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம் அவனுக்கு எழுகிறது.

இந்த பையின் பின் ஒரு அமைப்பு இருக்கிறது. பையின் பின் மட்டுமல்ல எந்த ஒரு நிலையான எண்களின் பின்னாலும் ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் தான் இந்த உலகமே அடங்கியிருக்கிறது என்கிறான். ஆனால் அது என்ன என்பதுதான் அவனுடைய ஆராய்ச்சி. அவன் எதைஎதையோ கண்டு பிடித்து அதை தவறு என நினைத்து தூக்கியெறிகிறான். அந்த தூக்கியெறிதலில் ஒன்று அந்த அமைப்பின் பாதி எண்களை கொண்டிருக்கிறது.

மேலும் வணிக சந்தையும் ஒரு கணித விளையாட்டு. அதுவும் பைக்குள் அடங்கும் என அவன் நினைக்கிறான். அவன் கண்டுபிடிக்க நினைக்கும் எண் வணிக சந்தையிலும் உதவலாம் என அவனிடம் சிலர் வருகிறார்கள். அவனின் கணினி பழுதடைகிறது. அந்த எண்ணை கொடுத்தால் கணினிக்கு தேவையானதை தருகிறோம் என்கிறார்கள். அவனும் ஒத்துக் கொள்கிறான்.

இன்னுமொரு கதை இதே எண்ணை யூத மதத்தவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அது தான் கடவுளின் பெயர் என. அவர்களிடமும் சிக்கிக் கொள்கிறான். என்ன ஆனது என்பது ஒருக்கதை. அவர்கள் சொல்லும் கதை வித்தியாசமானது.

இவ்வளவு நேரம் கூறிய இந்தக் கதை எனக்கு படத்தில் பிடிக்கவில்லை. காரணம் இது முழுக்க மண்டையான விஷயங்களை கையாள்கிறது. நான் தேடுவது இனி எழுதப்போவதில் தான் உள்ளது.

இந்த நாயகனை சொல்லும் போதே பித்தன் என்று சொல்லியிருப்பேன். இவன் கணிதத்திலேயே இருக்கிறான். மனைவியையும் பார்ப்பதில்லை. நேரம் கழிப்பதில்லை. அவன் வெளியுலகுடன் பேசுவது யாருடன் எனில் ஒரு வயது முதிர்ந்தவர். அவர் பையில் இவனுக்கு முன் வேலைபார்த்தவர். அவர் சொல்கிறார் இது ஒரு தீரா வியாதி என. அதன் எல்லை மரணத்தின் வாயில் என்று. காரணம் கணிதம் புதிருக்குள் புதிரைப் போன்றது. போனவழி மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அடுத்தடுத்து செல்வதால் வந்த வழியை மறந்து விடுகிறோம். மாட்டிக் கொள்கிறோம். அந்த நிலையில் உள்ளவன் தான் கோஹன். மேலும் அந்த முதியவர் மீண்டும் பையில் வேலை பார்க்க அவருக்கு நிகழும் சம்பவம் இந்த படத்தில் கையாளும் கருவின் ஆளுமை.

ஒரு வசனத்தை சொல்லியே ஆக வேண்டும் அவர்கள் இருவரும் பேசும் போது அவர் அவனுக்கு சொல்கிறார்

"FRIEND : You remember Archimedes of Syracuse? Eh?
The king asks Archimedes to determine if a present he has received is actually solid gold. Unsolved problem at the time. It tortures the great Greek mathematician for weeks. Insomnia haunts him and he twists and turns in his bed for nights on end. Finally, his equally exhausted wife, forced to share a bed with this genius, convinces him to take a bath, to relax. While he's entering the tub, he notices the bath water rise. Displacement - a way to determine volume, and thus a way to determine density. Weight over volume. And thus Archimedes solves the problem. He screams "Eureka!" and he is so overwhelmed, he runs naked through the streets to the king's palace to report his discovery.
Now, what is the moral of the story?

MAX COHEN : That a breakthrough will come.

FRIEND : Wrong! The point of the story is the wife."

வாழ்க்கையின் மிக மிக முரண்பட்ட விஷயம் இது. கலைஞனின் உலகம் நிஜ உலகுடன் ஒன்ற மறுத்து அவன் மனதளவில் அனுபவிக்கும் ஒரு ஸ்கீஸோஃப்ரீனிக் வியாதி. இதை படமாக்க முடியுமா என்பதற்கான சிறந்த பதிலே இப்படம். ஏன் இது என்பதற்கு இதன் இயக்குனரை தான் சொல்ல வேண்டும்.

இதை எடுத்தவர் டாரென் அரனாஃப்ஸ்கி. இவரின் இரண்டு படங்களைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்
1. Requiem for a dream
2. Black swan

இந்த இரு படத்திலும் ஏன் இந்த படத்திலும் கூட மனிதனின் மன ஓட்டங்களை அப்படியே காட்சிபடுத்தியிருப்பார். அதை பிரித்தரிந்து புரிந்து கொள்ளுதல் என்பது கொஞ்சம் கடினமானது. ஆனால் காட்சிகள் சலிப்பில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். இது தான் திறமை என்பது. இன்னமும் சொல்ல வேண்டுமெனில் அவனுடைய வாழ்க்கை அப்படியே தத்ரூபமாகிறது. அகவுலகும் சரி புறவுலகும் சரி.

அரனாஃப்ஸ்கியிடம் எனக்கு பிடித்தது கதையும் கட்டமைப்பும் ஒரு சேர படம் முழுக்க பயணிக்கும். ரெக்விம் ஃபார் எ ட்ரீம் என்பது கனவுகள் சார்ந்த படம். போதை சார்ந்த படமும் கூட. திரையும் அதைப் போலவே கொண்டு சென்றிருப்பார். தலை கொஞ்சம் கிறு கிறு என்று வரும்.

இவையெல்லாம் சரியான அளவில் பை படத்தில் வந்தாலும் இப்படம் என்னை அதிகம் பாதிக்கவில்லை. காரணம் படத்தின் மையமாக இருப்பது அந்த ஸ்பைரல். படத்தின் அமைப்பும் அதே போல் தான் இருக்கிறது. படம் பார்க்கும் போதே இந்த ஸ்பைரல் கதையின் அமைப்பில் உள்ளதை காண  முடியும். அதற்கேற்றாற் போல நாயகனும் கணிதம் இயற்கையின் மொழி உலகையே கணிதத்தால் காட்ட முடியும், அளக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறான். ஒரு சுழற்சி முடிகிறது என்பதை காட்டுவதைப் போல் அந்த காட்சி அமைகிறது. ஆனால் படம் நிறைய விஷயங்களை செய்தி துணுக்கை போல் சொல்லிச் செல்கிறதே தவிர பூரணமான விஷயத்தை சொல்ல மறுக்கிறது. முழுமையடையாத் தன்மையையே கொடுக்கிறது. படத்தில் வரும் கணக்கு பகுதிகளுக்கு தான் இப்படி. எனக்கு புரியாமலும் இருக்கலாம். ஆனால் மனஉலகை காட்டும் பகுதிகள் மீண்டும் ஒருவகை கிறக்கம் தான்!!!

படத்தின் பிண்ணனி இசை தனி கிறக்கம். அங்கங்கு அவர் இசையை நிறுத்துகிறார். இந்த முறை இன்னமும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த டிரைலரில் கூட வரும் கேளுங்கள். காட்சியுடன் சக்கை போடு போடும் அவை. 


பி.கு : படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் நன்கு கவனியுங்கள்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக