காலரா காலத்தில் காதல்
காப்ரியல் கார்சியா
மார்க்வேஸ் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவர் தான். அவருடைய ஒரு நாவலை நான் வாசித்திருக்கிறேன்.
ஆனால் யரேனும் என்னிடம் வந்து அந்த நூலை பற்றி கேட்டால் பப்பே தான். தமிழ் நூல்களை
மட்டுமே வாசிக்கும் போது நான் வாசித்த முதல் ஆங்கில நாவல் ஓரான் பாமுக்கின் My
name is red. அந்த சூட்டோடு வாசித்தது தான் கார்சியா மார்க்வேஸின் One hundred
years of solitude.
என் நண்பர் ஒருமுறை
என்ன என்ன ஆங்கில நாவல்கள் வாசித்திருக்கிறாய் என்றவுடன் கார்ஸியா மார்க்வேஸின் நூலை
சொன்னேன். அவருடைய நண்பர்களும் அந்த நூலை வாசித்திருக்கிறார்கள் போல ஆனால் அவர்களுக்கு
சலிப்பினையே கொடுத்திருக்கிறது. என்னை வாசித்தமைக்கு பாராட்டினார்.
இங்கே இதை குறிப்பிடுவதற்கு
காரணம் சமீபத்தில் என் ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னது. ஒரு எழுத்தாளர் சொன்னதாக
சொன்னார் - “18 இலிருந்து 25 வரை கண்டமேனிக்கு வாசிக்க
வேண்டுமாம். 25 இலிருந்து 40 வரை தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டுமாம். 40க்கு பின் எழுத
வேண்டுமாம்.” அவர் கணக்கு படி பார்த்தாலும் நான் ஒரு
மார்க்கமான வாசிப்பில் இருந்திருக்கிறேனோ என சந்தேகம் வருகிறது.
நான் அதிகம்
மீள்வாசிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. நான் உலக இலக்கியம் அறிந்தவன் என்பதை காட்டவே
என் ஆரம்ப கால வாசிப்புகள் அதி வேகமாக இருந்திருக்கிறது. ப்யூகோவ்ஸ்கியின் women நாவலை
பற்றி எழுதிய போது என்னை ஒருவர் இண்டலெக்சுவல் முகமூடி அணிய யத்தனிக்கிறேன் என்று சொன்னார்.
அவர் சொன்னது முழுக்க உண்மை தான். ஆனால் அவர் சொன்ன காலத்தில் அல்ல. என் ஆரம்ப கால
வாசிப்பில்.
கண்டதை கற்றால்
பண்டிதன் ஆவான் என்னும் மிதப்பில் இருந்தேன். இப்போது அந்த எண்ணம் சிறிதும் இன்றி இருக்கிறேன்.
சின்ன உதாரணம். மாக்சிம் கார்க்கியின் படைப்புகள் கோர்வையாக இருந்த ஒரு நூலை வாங்கினேன்.
அதில் முதல் நாவல் my childhood. அவருடைய ஆங்கிலம் படு வேகமக இருப்பதாக அப்போது உணர்ந்தேன்.
அது எழுநூறு பக்க நூல். நான்கு நாவல்கள் சேர்ந்தது. இந்த முதல் நாவல் நூறு சொச்ச பக்கங்களே
இருந்ததால் முடித்து வைத்துவிட்டேன். அதன் பிறகு இன்று வரை மாக்சிம் கார்க்கியை எடுக்கவில்லை.
இன்னமும் கொஞ்சம்
தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இப்போது பசியெடுத்து உண்கிறேன். எனக்குள்ளே பசியை உண்டு
செய்யும் அளவு என் சுற்றம் இருக்கிறது. கார்க்கியை வாசிக்காமல் இருக்க மாட்டேன். அதே
நேரம் இப்போது வாசிக்க மாட்டேன். He is absent right now!
அப்படி ஒரு பசியால்
நான் வாசித்த நூல் தான் Love in the time of cholera - Gabriel Garcia Marques. இந்த
நூலை வாங்கி இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது. இப்போது தான் வாசித்தேன்.
அவர் ஸ்பானிய
எழுத்தாளர். இப்போதும் என் நினைவில் One hundred years of solitude நாவலில் நான் எதிர்கொண்ட
பிரச்சனையை நினைவில் கொண்டு வர முடிகிறது. அதிலிருந்த மொழி. அயற்சியை தரக்கூடியதாய்,
எதிர்த்து வாசிக்க வேண்டியதாய் உணர்ந்தேன். அதே பயம் தான் இந்நாவலை எடுக்க சிறு தாமதத்தையும்
கொடுத்தது. இந்நாவலோ மிக சரளமாக செல்கிறது.
ஆங்கில அகராதி
இல்லையெனில் எந்த ஒரு ஆங்கில நாவலையும் நான் தொடவே மாட்டேன். இந்நாவல் எளிமையான மொழி
நடை என்பதால் ஒரு பக்கத்திற்கு ஒருமுறை மட்டுமே அகராதியை காண வைத்தது!
மேலும் ஒரு நாவலின்
அதி முக்கிய தன்மை அது முதல் பக்கத்திலேயே வாசகனை உள்ளிழுக்க வேண்டும். இந்நாவல் அதை
அட்டகாசமாக செய்கிறது. ஜெரெமியா டி செயிண்ட் அமொர் என்பவரின் மரணத்துடன் கதை ஆரம்பிக்கிறது.
அவருடைய நண்பர் டாக்டர் ஜுவினல் உர்பினோ இது உண்மையில் மரணமா என்று தன்னுள்ளே யோசிக்கிறார்.
இதை சித்தரிக்கும் எழுத்து வடிவங்கள் அதி சுவாரஸ்யமாக இது உண்மையில் காதல் கதையா என்பது
போல் கேள்வி கேட்க வைக்கிறது. இப்படி செல்லும் போதே ஒரு மரக்கிளையின் மேல் இருக்கும்
தன் கிளியை பிடிக்க போய் இறந்துவிடுகிறார். இறந்தவுடன் இன்னுமொரு கதாபாத்திரம் கதைக்குள்
வருகிறது. அதன் பெயர் ஃப்லொரென்டினோ அரைசா. அவன் உர்பினோவின் மனைவி ஃபெர்மினா தாசாவிடம்
சென்று இப்போதாவது தன் காதலை ஏற்றுக் கொள் என்கிறான். இப்போது இந்த நூலின் பின்னட்டையில்
இருக்கும் வரிகளை கொடுக்கிறேன் இந்த இடத்தின் ஆழத்தை அழகுற புரிந்து கொள்ள முடியும்…
When Fermina’s
husband is killed by trying to retrieve his pet parrot from a mango tree. Florentino
seizes his chance to declare his enduring love. But can young love find new
life in the twilight of their lives ?
கிட்ட்தட்ட இது
தான் இந்த நாவலின் சாராம்சமே. இந்த கேள்விக்கான பதிலே இந்நாவலின் முடிவு. ஃப்ளொரென்டினோ
முதலிலேயே அவளை காதலித்தான். அவர்களின் காதலை அவளின் அப்பா எதிர்க்கவே நீண்ட ஒரு பயணத்தை
அவளுடன் மேற்கொள்கிறார். அதனால் அவள் அவனை மறந்துவிடுவாள் என்று. மீண்டும் அங்கு வரும்
போது காலரா நோய் பரவலாக இருக்கிறது. அங்கு வந்த டாக்டர் தான் உர்பினோ. அவரும் தன் காதலை
சொல்ல அந்த காதல் வெற்றி கொள்கிறது. இப்போது அவருடைய இறப்பிற்கு பின் ஃப்ளொரெண்டினோ
வரும் போது ஏதோ ஒரு இரகசியம் சொல்கிறார் போல ஆசிரியர் கொண்டு செல்கிறார். அந்த ரகசியம்
என்ன ? அவனுடைய காதல் மீண்டும் மலர்ந்ததா ? என்பதே இந்நாவலின் முடிவு.
எனக்கு இந்நாவலில்
அதிகம் பிடித்த கதாபாத்திரம் ஃப்ளொரெண்டினோ அரைசா தான். இரு எல்லைகளுக்கும் அவனுடைய
உணர்வுகள் எழுதபட்டிருக்கிறது. காதலிக்கும் போது அவளுக்கு அவன் எழுதும் காதல் கடிதங்கள்.
அது மட்டுமில்லாமல் அவன் அவளுக்காக வாசிக்கும் வயலின் இசை. குறிப்பிட்ட ஒரு இடத்தில்
யாருமே இல்லாமல் அவனுடைய இசை மட்டுமே நிற்பது போல் வரும். அங்கு என்னையே நான் மறந்து
இருந்தேன். அப்படியொரு க்ளாசிக்கான காட்சிப்படிமம் அது. மேலும் உர்பினோவுடன் மணம் ஆனவுடன்
ஃப்ளொரெண்டினோ பல பெண்களுடன் காதல் கொள்ள யத்தனிக்கிறான் ஆனால் அவனின் ஒரே ஆசை ஃபெர்மினா
மட்டுமே. அவனுள் இருக்கும் ஒரு தீ ஃபெர்மினாவை அடைந்தால் மட்டுமே அணையும் என்னும் நிலை.
அப்போது அவன் தனக்குள் செய்யும் முடிவு உர்பினோ இறந்தால் மட்டுமே தனக்கு இன்னுமொரு
வாய்ப்பு கிடைக்கும் என்று. இதை தான் இரு எல்லைகளை காண்பிக்கிறார் என்று சொல்லிய்ருந்தேன்.
இதைத் தாண்டி
எனக்கு இதில் பிடித்த விஷயம் இந்நாவல் எழுதப்பட்டிருக்கும் முறை. ஒரு இடத்தின் முழு
விபரத்தையும் கொடுக்கிறார். வரைந்தால் அப்படியே அதை ஒரு ஓவியமாக்கிவிடலாம். அப்படியொரு
நுணுக்கமான விவரணை. சம்பவம் என்று வரும் போது it is logically right என்று சொல்ல வைக்கிறார்.
ஆனால் அதன் பின் ஒரு சம்பவம் மறைந்து இருக்கிறது. அதை பின்வரும் அத்தியாயங்களில் சொல்கிறார்.
இந்த முறையே எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு திடல் முழுக்க புதைகுழிகளாக இருக்கிறது.
நாம் நடந்து கொண்டே இருக்கிறோம். நடப்பது தரையிலா புதைகுழிகளுக்குள்ளா ? எப்படி இருக்கும்
என்று சிந்தித்து பாருங்கள். அப்படி தான் இந்த நாவலும்.
இந்நாவலில் குறையாக
நான் கண்ட ஒன்றும் இருக்கிறது. ஃப்ளொரென்டினோ மற்றும் ஃபெர்மினாவின் காதலை சொல்லும்
இடங்களில் எல்லாம் எனக்கு தாஸ்தாயெவ்ஸ்கியின் poor folk நாவலே நினைவிற்கு வந்தது. கடிதம்
கடிதம் என்று சொல்லி சென்று விடுகிறார் மார்க்வேஸ். அந்த கடிதங்களையும் கொடுத்திருந்தால்
நாவலின் தாக்கம் இன்னமும் பன்மடங்காக இருந்திருக்கும். அது மிஸ்ஸிங்!!!
இந்த நாவலின்
க்ளைமாக்ஸ் எனக்கு ஆகப்பிடித்தது. அட்டகாசமானதும் கூட. அதை அறிய நாவலை தான் வாசிக்க
வேண்டும்! இதை படமாகவும் எடுத்திருக்கிறார்களாம். வாசித்து முடித்தவுடன் இந்த க்ளைமாக்ஸிற்காகவே
இப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. வாசியுங்கள் பிறகு தெரியும் காலரா காலத்தில்
காதல் எப்படி இருந்தது என்று. . .
நாவலிலிருந்து….
"I understood
this man was a saint"
"something
even rarer. An atheistic saint. But those are matters for God to decide"
the scalpel
is the greatest proof of the failure of the medicine
Each man is
master of his own death, and all that we can do when the time comes is is to
help him die without fear of pain
There was
no innocence more dangerous than the innocence of age
wisdom
comes to us when it can no longer do any good
death was
not only a permanent probability, as he had always believed, but an immediate
reality
most fatal
diseases had their own specific odor, but that none was as specific as old age
the people
one loves should take all their things with them when they die
weak would
never enter the kingdom of love, which is harsh and ungenerous kingdom
it was
difficult to imagine the number of things that men left after love
One does
not love one's children just because they are one's children but because of the
friendship formed while raising them
The problem
with marriage is that it ends every night after making love, and it must be
rebuilt every morning before breakfast
Life in the
world, which had caused her so much uncertainty before she was familiar with it
was nothing more than the system of atavistic contracts, banal ceremonies,
preordained words, with which people entertained each other in society in order
not to commit murder. The dominant sign in that paradise of provincial
frivolity was fear of unknown
The problem
in public life is learning to overcome terror ; The problem in marriage life is
learning to overcome boredom
the only
frustration i carry away from this life is that of singing at so many funerals
except my own
என்னை திணர அடித்த
வரி
“At eighty-one years of age he had
enough lucidity to realize that he was attached to this world by a few slender
threads that could break painlessly with a simple change of position while he
slept, and if he did all he could to keep those thread intact, it was because
of his terror of not finding god in the darkness of death”
பின் குறிப்பு : இது கிமு பக்கங்களின் இரு நூறாவது பதிவு. இதுவரை வாசித்து, கருத்து சொல்லி, தவறிருக்கும்
இடங்களில் என்னை திருத்தி, என்னால் சிலர் சில நூல்களை அறிந்து கொண்டு வாழ்த்தி இப்படி
சகல சௌபாக்யங்களுடன்(எவ்வளவு பெரிய வார்த்தை!) இருநூறாவதை எழுத வைத்த அனைத்து வாசகர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக