வெள்ள வூடு கீழ - 2013

விஜயகாந்தின் அநேக படங்களில் பார்த்திருப்பீர்கள். காப்பாற்ற வேண்டியவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்புகளில் இருப்பினும், அவர்களுக்கு தனியாக காவலர்கள் இருப்பினும் கதாநாயகனான விஜயகாந்தே அந்த முக்கிய பொறுப்பில் இருப்பவரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவார். இது விஜயகாந்த் மட்டுமல்ல தேசியம் சார்ந்து எடுக்கப்பட்ட அநேக படங்களில். சின்ன உதாரணம் வல்லரசு படம் இறுதிக்காட்சி. இது மக்களை காப்பாற்றுவது. அவர் நினைத்திருந்தால் மக்களின் உதவியோடு காப்பாறியிருக்கலாம். ஆனால் அவரே முயன்று அந்த பாமை காப்பாற்றுவார், சீ மக்களை காப்பாற்றுவார்.

இது மட்டும் தானெனில் ஒரு விஷயம் பலகாலமாக சினிமாக்களில் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்திலிருந்து வில்லன் பெரிய ஆளாக இருப்பினும் கடைசியில் ஹீரோவை அந்த வில்லன் பெரிய ஆள் ஆக்கிவிடுவான். சிறந்த உதாரணம் துப்பாக்கி க்ளைமாக்ஸ்.

இப்படி கமர்ஷியலாகவே காண்பித்து கொண்டிருக்கும் ஆக்‌ஷன் படங்கள் ஆங்கிலத்தில் இல்லையா என்றொரு சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. இந்த சந்தேகத்திற்கு காரணம் ஆங்கிலப்படங்கள் யாவும் இங்கு வ்ருவதில்லை. வெளிநாடுகளில் வெளியாவது எனக்கு தெரிவதும் இல்லை. ஒரு செலெக்‌ஷனை எப்போதும் நான் செய்து கொண்டே இருக்கிறேன். அதில் எப்படியும் அழகியல் சார்ந்து ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் அங்கு வரும் படங்களில் மிகக் குறைந்த பகுதியே நான் காண்பது.

சூப்பர்ஹீரோ படம் எடுத்துக் கொண்டால் அங்கு ஒரு நிபந்தனை நம் முன்னே வைக்கப்படுகிறது - அது ஒரு உலகம் என்பது போல். அவனுக்கு இருப்பது நாம் காண்பவைக்கு அப்பாற்பட்ட சக்தி. ஆனால் அதிலும் ஒரு குளறுபடியை செய்தது மேன் ஆஃப் ஸ்டீல்!

இப்படி இருக்கையில் முழு நீள கமர்ஷியல் ஆங்கில படத்தை இன்று தான் பார்த்தேன். ஒரே வெறுப்பு தான் இருக்கிறது எனக்குள் ஏன் சென்றோம் என. நான் பார்க்க சென்றது மரியான். அதற்கு டிக்கெட் கிடைப்பது சந்தேகம் என்பதால் பசிபிக் ரிம் மற்றும் பாக் மில்கா பாக் படங்களை அடுத்தபடியாக வைத்திருந்தேன். என் விதி எதற்குமே கிடைக்கவில்லை!!!

வேறு வழியின்றி நான் சென்றபடம் தான் WHITE HOUSE DOWN(வெள்ள வூடு கீழ)இந்த இயக்குனரின் எண்ணம் அழகாய் இருக்கும் அந்த வெள்ளை மாளிகையை உடைத்து அது எப்படி உடைகிறது என்பதை பார்க்க வேண்டும், அல்லது அப்படி ஏதேனும் அவருக்கு வந்த கனவை பிறருக்கு படமாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக முதல் அறை மணி நேரம் ஒவ்வொரு சீன் முடியும் போதும் வெள்ளை மாளிகையை ஹெலிகாப்டரில் கேமிராவை வைத்துக் கொண்டு சுற்றி சுற்றி காண்பிக்கிறார். விதவிதமாக காண்பிக்கிறார் எனினும் பரவாயில்லை அவரோ ஒரே ஷாட்டை இடைவேளை விட்டு விட்டு காண்பிக்கிறார்!

அவர் ஆசைப்படியே வெள்ளை மாளிகை உடைகிறது ஆனால் கதை ?
இதே கேள்விக்குறி தான் என்னிடமும். கதையின் நாயகன் கைல். அவனுக்கு ஜனாதிபதியின் சீக்ரெட் பாதுகாப்பு வேலை கிடைக்கவில்லை. நிராகரிக்கப்படுகிறது. அவனுடைய மகளுக்கு அப்பாவை பிடிக்கவில்லை. தற்காலிக கோபம். அதை சரி செய்ய வெள்ளை மாளிகையை சுற்றிப் பார்க்க தரப்படும் பாஸை அவளுக்காக வாங்கி வந்து அவளை அழைத்து செல்கிறார். மகளிடம் தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று பொய் சொல்கிறார். அவள் மூத்திரம் பெயப் போன நேரத்தில் ஹைஜாக் ஆரம்பித்துவிடுகிறது. அதை செய்பவர்கள் யார் என்பதே கதை. இதற்கு ஒரு அரசியல் பிண்ணனி வேண்டுமல்லவா. அதற்கு இயக்குனர் எடுத்துக் கொண்ட நாடு மத்திய கிழக்கு நாடுகள்.

சூது கவ்வும் படம் வந்த போது நாகராஜன் என்ற என் நண்பர் அப்படத்தை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். தாஸ் ஆட்கடத்தல் செய்ய ஐந்து விதிமுறைகளை காண்பிக்கிறான் அல்லவா அதை பார்க்கும் போது நாம் கூட இந்த தொழிலில் இறங்கலாம் போலிருக்கிறதே என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு சூது கவ்வும் படத்தை விட இந்த படத்தில் அப்படி தோன்றுகிறது. பத்து ஆட்கள் இருந்தால் போதும் வெள்ளை மாளிகையை அசால்டாக அபேஸ் செய்து விடலாம்!

படம் முழுக்க அவர்கள் சீரியஸாக எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அருவருப்பே வந்து கொண்டிருக்கிறது. இதைவிட அமேரிக்க ஜனாதிபதியாக நடித்திருக்கும் ஜேமி ஃபாக்ஸ் அவ்வளவு சிரிப்பு மூட்டுகிறார். எதற்கு இந்த கேலிச்சித்திரம் என்று தெரியவில்லை. ஒரு வேளை காமெடி மிஸ்ஸிங் என்று வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

அதற்கு ஒரு உதாரணம் எனில் ஹீரோ தான் காப்பாற்றுகிறார் ஜனாதிபதியை. அப்போது ஒரு தற்காப்பில் ஃபாக்ஸின் ஒரு ஷூ போய்விடுகிறது. ஒரு காலில் ஷூ மற்றொரு காலில் சாக்ஸுடன் நடந்து செல்கிறார். அதை கேமிரா ஃபோகஸ் செய்கிறது. அதோடு நிற்காமல் அந்த பிரச்சினைக்கிடையில் கூட அமேரிக்க ஜனாதிபதி(ஃபாக்ஸ்) தன் அலமாரியிலிருது ஷூவை நிறம் பார்த்து தேர்ந்தெடுப்பார். கடைசியில் தேர்ந்தெடுப்பது வெள்ளை நிற ஷூ!!! தியேட்டரே சிரிப்பில் கமழ்ந்தது.

பெருத்த சந்தேகம் வந்துவிட்டது இப்படத்தினால். தீவிரவாத தாக்குதல்களின் போது ஜனாதிபதி தான் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு அளிக்க வேண்டும். இது ஏற்றுக் கொள்கிறேன். அப்படி ஜனாதிபதி இறந்தால் ஆக்டிங் ஜனாதிபதியாக துணை ஜனாதிபதியை நியமிப்பர். அவரும் இறந்தால் செனேட் யாரை ஆக்டிங் ஜனாதிபதியாக நியமிக்கலாம் என்று சொல்வர். இந்த படத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு நான் தான் ஜனாதிபதி என்று பதவி ஏற்றுக் கொள்வது சிரிப்பு மூட்டும் அளவு காட்சியாக்கபட்டுள்ளது.

படம் நிச்சயம் பலநூறு கோடிகளில் புரளும். அப்படி முதலீடு செய்யும் இடத்தில் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதே இப்பதிவு எழுத காரணம். அவர்கள் தான் தோன்றித் தனமாக ஜனாதிபதியின் பதவியை ஸ்பூஃப் செய்ய நினைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அமேரிக்க ஜனாதிபதி போல் முட்டாள் யாரும் இல்லை என்று நம்ப வைக்கிறது இந்தப்படம்.

சுருங்க சொல்ல வேண்டுமெனில் அமேரிக்க ஜனாதிபதி செய்யும் சேட்டையே இந்த வொயிட் ஹவுஸ் வேட்டை(தமிழ் தலைப்பு இதான்பா!!!)

இதில் நல்ல விஷயங்கள் இல்லையா எனில் இரண்டு.
1. இந்த படத்தின் முதல் அரை மணி நேரத்தில் அவர்கள் வெள்ளை மாளிகையை காட்டும் விதம். வெள்ளை மாளிகையை பற்றி அறிந்திராதவர்களுக்கு நன்றாக இருக்கும்.
2. படத்திற்கு முன் இந்த டிரைலர் போட்டார்கள். பார்த்து ரசியுங்கள். ஒரு குடும்பப் படம். . . .ஹி ஹி ஹி (வசனங்களை நன்கு கவனியுங்கள்)


Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விஷயங்கள் சொன்னீங்களே, அதற்கு நன்றி...

Post a comment

கருத்திடுக