களமிறங்குகிறேன்

புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நற்றிணைப்பதிப்பகம் ஒரு நாவல்போட்டியைஅறிவித்திருக்கிறது. ப.சிங்காரத்தின் பெயரால் அமையும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.
முதல்பரிசு ரூ 50000
இரண்டாம் பரிசு ரூ 30000
மூன்றாம் பரிசு ரூ 20000

பிரதிகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள். செப்டெம்பர் 15.
அக்டோபர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்
டிசம்பர் 30 அன்று பரிசுவழங்கும் விழாவும் நூல் வெளியீடும் நிகழும்.

நிபந்தனைகள்
1. பக்கவரையறை இல்லை.
2. முதல்பதிப்புக்கான உரிமை நற்றிணைப்பதிப்பகத்துக்குச் சொந்தம். 1000 பிரதிகள்
3. மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது
4.பிரதி திருப்பியனுப்பபட மாட்டாது. ஆகவே நகல்களை அனுப்பவும்
5 தட்டச்சு அல்லது மின்னச்சு செய்யப்பட்ட வடிவில் அனுப்பவும்
6. பிரசுரமாகாத நாவலாக இருக்கவேண்டும்
7 தேர்வுக்குழு முடிவே இறுதியானது

முகவரி
நற்றிணைபதிப்பகம்
பழைய எண் 123 A
புதிய எண்
243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி
சென்னை.


இது வரை சில விஷயங்களை நான் மறைத்து வைத்தே வந்துள்ளேன். அதிகம் மனதில் சேகரம் செய்து வைத்தால் இதய நோய் வர வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சொல்லி விடுகிறேன். இந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ளப் போகிறேன். எழுத இருக்கும் நாவல் பிருஹன்னளையினை விட வீரியமானது. நாளைத் தொடங்க இருக்கிறேன். எனக்கு இருக்கும் காலக்கெடு 94 நாட்கள். பெயர் எதுவும் சொல்ல முடியாது. வெற்றி தான் என்னும் அகம்பாவம் எதுவும் என் வசம் இல்லை. இலக்கியப் போட்டிகளில் இதுநாள் வரை நான் தோற்றே இருக்கிறேன். இம்முறை என்னுள்ளிருந்து சிறந்ததை கொடுத்துப் போட்டியிட இருக்கிறேன். எழுதப்போகும் நாவல் எனது இலக்கிய மற்றும் இலக்கண அறிவிற்கான ஓர் சுயபரிசோதனை.

இன்னுமொரு விஷயமும் உள்ளது. போட்டியல்லாது அடுதத நூல் கைவசம் தயாராக உள்ளது. நாளை முதல் பதிப்பக வேட்டையினை தொடங்கப் போகிறேன். இம்முறை என் நூலினை நானே வெளியிடாமல் பதிப்பகம் மூலம் வெளிக் கொணர ஆசைப்படுகிறேன்.
என் பணியை இறைப்பணியாக கருதுகிறேன். நாஞ்சில் நாடன் சொல்வது போல் என்னை நான் காலியாக்கும் பணியில் இருக்கிறேன். பணி முடியாமல் இருப்பதே உசிதம்.  இரண்டு நூலும் நன்றாக வெளிவர வேண்டும் என ஆசை கொள்கிறேன்.

பின் குறிப்பு :  இது வரை காலச்சுவடு பத்திரிக்கைக்கு எழுதிய அனைத்துக் கதைகளையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர். கல்கியில் இருக்கும் அமிர்தம் சூர்யாவும் தினமலர் தென்பாண்டியனும் சொன்னார்கள் நீங்கள் எழுதுவது ஜனரஞ்சகத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையில் இருக்கிறது என. அளவுகோல்கள் எனக்குத் தெரியாது இம்முறை ஒரு ஜனரஞ்சக சிறுகதையினை காலச்சுவடிற்கு அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம் வெளிவருகிறதா என.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Kandhagiri said...

Vaazhthukkal, idhu ungaluku ubayogamaga irukkalam.....
https://www.facebook.com/FreshFacePublication

Post a comment

கருத்திடுக