பாவ ஸ்தலத்தில் புண்ணியம் தேடி. . .
நேற்று அம்மாவுடன்
அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வெகு நாடகாளுக்கு பின் நேற்று அப்படி பேசியது போல்
இருந்தது. அப்போது அம்மா இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். எங்கள்
ஏரியாவில் இரண்டு ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள். இருவரின் பொருளாதார நிலைக்கும் அப்பா
நிறைய உதவி செய்திருக்கிறார். அதனாலோ என்னவோ எங்கள் வீட்டில் அவர்களுக்கு தனிப் பாசம்.
அம்மா ஆட்டோக்காரர்களில்
ஒருவரை அழைத்து அவர்களின் ஆட்டோவில் சென்று வீட்டிற்கு மாத சாமான் வாங்குவது ஆடி தள்ளுபடியில்
அனைவருக்கும் துணி எடுப்பது வழக்கம். அப்பா வீட்டில் இருந்தார் எனில் அவரும் ஆட்டோவில்
உடன் செல்வார். அம்மாவிற்கு அப்பாவுடன் வண்டியில் போக பயம்! அப்பாவோ விடுமுறை எடுக்கவே
ஆயிரம் முறை யோசிப்பார். அதனால் மாதாமாதம் அம்மா அந்த ஆட்டோக்காரருடன் சென்று மாத சாமான்கள்
வாங்கி வருவார். அப்பா உதவி செய்திருப்பதால் இலவசமாக என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கான
காசு கொடுக்கப்பட்டே போய் வருவார்கள் அம்மாவும் அப்பாவும்.
இம்முறை நான்
வீட்டில் இருப்பதால் அம்மாவுடன் நான் உடன் போய் வீட்டிற்கு தேவையான சாமான்களை அம்மாவுடன்
வாங்கி வந்தேன். அம்மாவிற்கு சின்ன சந்தோஷம்.
ஒருமுறை பக்கத்து
வீட்டுக்காரி அம்மாவிடம் கேள்வி கேட்டிருக்கிறாள் - அந்த ஆட்டோகாரர் கூடயே போகிறீர்களே
? அவர் நல்லவரா ?
அம்மாவிற்கு
கண்கள் கலங்கும் அளவு சென்றுவிட்டது. என் அம்மாவிற்கு சட்டென பதில் சொல்லத் தெரியாது.
நறுக்கென யாரேனும் கேள்வி கேட்டால் அம்மாவால் எதிர்கொள்ள முடியாது. பிறகே யோசிப்பார்.
இது முகத்தை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட ஒரு ஜீவனை இவர்களால்
எப்படி எப்படி புண்படும் அளவு பேச முடிகிறது ?
இப்படி ஏகப்பட்ட
முறை நிகழ்கிறது. ஆனால் நானும் அப்பாவும் இருக்கும் போது ஒருவரும் கேட்க மறுக்கிறார்கள்.
நான் இருக்கும் போது கேட்டிருந்தால் திமிர் பிடித்தவன் போல பதில் கேள்வி கேட்டிருப்பேன்.
அப்பாவோ எதற்கு ஊர் வம்பு என்று இருந்துவிடுவார். இந்த தெருக்காரர்களால் எனக்கோ அம்மா
அப்பாவ்விற்கோ ஒரு எறும்பு அளவு கூட பிரயோஜனம் இல்லை.
இவர்களை எறும்பு
கூட ஒப்பிடுவது எறும்பிற்கும் கேவலம், எனக்கும் நேரவிரயம். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட
குரூரமான ஆட்கள் இருக்கும் வரை நிலச்சரிவு பனிமலை இடிந்து விழுவது சுனாமி பூகம்பம்
நிச்சயம் வரும். ஜார்க்கெண்டில் வந்திருக்கும் ஆபத்தில் அப்பாவி மனிதர்கள் சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள். ஒன்றை நிச்சயம் சொல்வேன் அவர்களுக்கு வாழ்வின் மீதான இச்சையும்
மரணத்தின் மீதான பயமும் உண்டாகியிருக்கும். இன்னுமொரு உணர்வும் அவர்களுக்குள் எழுந்திருக்கும்.
என்னைப் போல எத்தனைப் பேர் அங்கே அவதியுற்றிருப்பார்கள் என்ற கருணை. இத்தனை நாள் அவர்களுக்குள்
துளிர்விடாத அன்பு. அதுவே வாழ்வின் ஆதாரம் என்று நம்புகின்றேன். அதை இவர்களுக்கு காலம்
புகட்டும்.
சொன்னால் நம்ப
மாட்டீர்கள் நான் இந்த ஒரு மாத காலத்ட்தில் அதிகம் மாறியிருப்பது போன்ற ஒரு புத்துணர்ச்சி
எனக்குள் இருக்கிறது. இம்மாதத்தின் ஆரம்பத்தில் எனக்கும் கிருஷ்ணகுமார் என்பவருக்கும்
இடையில் ஒரு கருத்து மோதல் நிகழ்ந்தது. அது கருத்து மோதல் என்று கூட சொல்ல முடியாது
நானாக எழுதிய ஒரு வசை கட்டுரை. அதை எழுதிய உடன் எனக்குள் எப்போதும் இராத ஒரு குற்றவுணர்ச்சி
இருந்து கொண்டே வந்தது. உடனே மன்னிப்புக் கட்டுரையை எழுதினேன்.
எனக்கு திட்டுவது
பிடிக்கவில்லை. வீண்வம்பை சம்பாதிப்பது போல் உள்ளது. ஓருவேளை எனக்கு கோபம் ஏற்படுவது
போல் சாட்டோ பதிவோ நிகழ்ந்தால் அங்கிருந்து நகர்ந்து விடுகிறேன். நானே பிருஹன்னளை நாவலில்
எழுதியிருந்தேன் ஒரு துர்சம்பவம் நிகழ்கிறதெனில் அந்த திடலிலிருந்து போவதனால் மட்டும்
தீர்வு கிடைக்கப் போவதில்லை. நமக்கான அதிகார வெளியில் அதை கடக்க வேண்டும் என்று. எனக்கு
அதிகார வெளி என் புனைவுகள். அந்த இடத்திலிருந்து நகர்ந்தாலும் புனைவினில் அதை கொண்டு
வருவேன்.
புனைவு எழுதுவதில்
நான் அதிகம் சந்தோஷம் கொள்கிறேன். பிற எழுத்தாளர்கள் அடையும் உன்னத தன்னை மறந்த நிலையை
நானும் சில நேரங்களில் அடைகிறேன். நற்றிணை நாவல் போட்டிக்காக எனது நாவலை மிக அழகாக
செய்து கொண்டிருக்கிறேன். அதன் அழகை கண்டு உருவாக்கும் நானே பொறாமை கொள்கிறேன். தங்களுக்கு
தெளிவாக்க வேண்டுமெனில் ஒருவர் சமீபத்தில் கூறிய வார்த்தையை சொல்ல விரும்புகிறேன் -
வெளியில் நிறைய பேருக்கு தங்களின் நாவல் கடினமாக இருக்கிறது என்றார். அவரைப் போன்றவர்களுக்கு
ஒரு குறிப்பு இப்போது எழுதி கொண்டிருக்கும் நாவல் புரிந்து கொள்ளுதலில் கடினமாகவே இருக்கும்.
சீக்கிரமே நாவலை
முடித்து எடிடிங் வேலையில் இறங்கி இன்னமும் அழகு சேர்க்க நினைக்கிறேன். இதுவரை செய்த
வேலைகளை கண்டும் செய்யப்போவதை நினைத்தும் என் சந்தோஷம் பன்மடங்காக உயர்கிறது.
இதனால் தான்
அடுத்த வீட்டு பிரச்சனைகளில் நுழைய மறுக்கிறேன் என்னால் செய்ய முடிந்தது அம்மாவை சமாதானம்
செய்வது. அதைச் செய்தேன். தினம் பேசுகிறேன். அம்மாவின் முகத்தில் சந்தோஷம். நாவல் எனக்கு
கொடுப்பதை அம்மாவிற்கு வேறு ரூபமாக அளித்துக் கொண்டிருக்கிறேன்.
இதில் எனக்கு
இன்னுமொரு சந்தோஷமும் இருக்கிறது. எழுத்தாளன் என்பதைக் காட்டிலும் ஒரு நாவலை வாசித்து
அதை மற்றவர்களிடம் பகிர்வதில் நான் அதீத ஆர்வமுடையவன். இம்முறை நான் பத்து நூல்களை
அறிமுகம் செய்திருக்கிறேன். நான் இருக்கும் இடமே மேலே சொன்னது போல பாவ ஸ்தலமாக இருக்க்கிறது.
ஊர் வம்பிற்கு ஆள் கிடைக்கவில்லையெனில் ஊர் சண்டைக்கு விதை போடுகிறார்கள். அந்த நரகலிலிருந்து
நான் வாசிக்கும் நூல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதில் வரும் புண்ணியம் எனக்கே
சேரும். யாருக்கும் பங்கு கிடையாது(சுயநலவாதி!!!!)
அந்த பகிர்தலின்
லிங்குகள். . .
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_4.html (வாக்குமூலம்)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_19.html (சதுரங்கக் குதிரை)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_16.html (எட்டு திக்கும் மதயானை)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_11.html (சூடிய பூ சூடற்க)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_12.html (சேவல்கட்டு)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_9.html (தூப்புக்காரி)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_3519.html (கரைந்த நிழல்கள்)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_4.html (ஏழிலைக் கிழங்கின் மாமிசம்)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_27.html (உறுபசி)
- http://www.kimupakkangal.com/2013/06/blog-post_9744.html (யாமம்)
- http://malaigal.com/?p=2359 (The Alchemy of Desire)
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக