ஹன்சிகாவின் ஆடை
//தமிழகத்தின்
ஃபேசன் ,உடை
கலாச்சாரம் பற்றிய என் பார்வை .....
சீரியசான
நடையில் தான் எழுத நினைத்தேன் ..பட் இந்த
லொள்ளு என்ன விட்டு போகவே மாட்டேன்குது
முதலில்
நடிகர் விஜயின் பாடல்களையும்,முப்பொழுதும்
உன் கற்பனைகள் படத்தில் வரும் ‘ஓ! சுனந்தா…’பாடலையும்,ஹிந்தியின் தூம்-2 படத்தின்
பாடல்களையும் நினைவில் ஓட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்..இல்லாட்டி
யூடியூப் இருக்கே……பாத்துட்டு
படிச்சா இன்னும் நல்லாருக்கும்…
தமிழகத்தின்
மிடில் கிளாஸ் வீட்டு பையனாக என்றுமே நான் பார்த்து வியந்தது ஹிந்திக்காரர்களையும்,பெங்களூருக்காரர்களையும்
தான். ‘நாம
போடுற பேண்ட்டு சட்டயத் தான அவங்களும் போடுறாங்க…..???!!’ அவங்க மட்டும் எப்படி இந்த
மாறி எல்லாம் ட்ரெஸ் பண்ணுறாங்க என்று கேள்வி எழும் .அப்படியான சமயங்களில்
எல்லாம் , ‘அவிங்கெல்லாம் பணக்காரங்க!!’என்று நினைத்து சமாதானம் கொள்வேன்.-இது
ஸ்கூல் மாணவனாக இருந்த போது…
ஃபேசன்
டிசைனிங் படிக்கணும் என்ற போது என் வீட்டை ரொம்ப சமாளிக்க வேண்டியிருந்தது. ஃபேசன் என்றாலே எஃப் டி.வி , கவர்ச்சி,‘அறையுங் கொறையுமா அலையிறது….’ போன்ற
பொது புத்தியை உடைக்க வேண்டியிருந்தது..இத நோட் பண்ணிக்கங்க .
ஃபேசன்
டிசைனிங் மாணவனாக கிளாஸி அமர்ந்திருந்த போதும்,சொந்தமாக ப்ராஜெக்ட்,அசைன்மெண்ட் செய்யும் போதும்,எனக்கு ஹிந்தி சினிமாவையும் ஹாலிவுட் சினிமாவையும் தான் மேற்கோள் காட்டினார்கள்.தூம்-2 ஹிருத்திக்
டிசர்ட்டையும்,வேறொரு
படத்திலிருந்து பேண்ட்டையும் வைத்து டிசைன் செய்து முடிப்பேன்.நிற்க.
தமிழகத்தில்
மிடில் கிளாஸ் என்றாலும்,அப்பர்
கிளாஸ் என்றாலும்,உடை
விசயத்தில் கவனம் செலுத்தியவரே இல்லை.மேற்தட்டு மக்கள் உடையின்
வழியே தங்களது பணக்காரதனத்தைestablish செய்ய
மட்டுமே முற்படுகின்றனர்.ஏழு பவுனுல காசு மாலை,25 ஆயிரத்துக்கு
பட்டுச் சேலை,மைனர்
செயினு,என்று
உடைகள் பணத்தைத் தான் பேசும்.மிடில் கிளாஸ் அதற்கு
சளைத்ததல்ல,…..கல்யாணிக்
கவரிங்..சிந்தட்டிக்
சாரிஸ்,ஒன்
கிராம் கோல்டு..என மேற்சாதிக்காரர்களை இமிட்டேட் செய்யத் துணிவார்களேயன்றி ,புதிதாக
யோசிக்க மாட்டார்கள். ‘அந்த பிரிண்ட்டிங் காரங்க வீட்டம்மா போட்டுட்டு வந்த காசுமாலைய மாறி
கெடைக்கும்ன்னு பாக்குறேன்…கெடைக்கவே
மாட்டிக்குதே…………...’
ஏன்
எனக்கு ஹாலிவுட் சினிமா பாரு என்று அறிவுருத்தப் பட்டது???,ஏன் ஃபேசன் டிசைனிங் சேர
நான் வீட்டைச் சமாளிக்க வேண்டியிருந்தது.?எப்படி ஒரு பெங்காளியோ,மலையாளியோ எந்த சங்கோஜத்தையும் சமாளிக்காமல்,இயல்பாக இந்த படிப்பில் சேர
முடிகிறது?ஏன்
என்னால் தமிழ் சினிமாவைப் பார்த்து ஃபேசன் கற்றுக் கொள்ள முடியவில்லை..??????என்பதையெல்லாம்
கண்டுபிடிக்க முயன்ற போது தான் உரைத்தது.
புரிந்திருக்கும். காரணம் ரொம்ப சிம்பிள்.வடநாட்டுக்காரர்
ஹிந்தி படம் பார்க்கின்றனர்.அந்த உடைகளை இமிட்டேட்
செய்கிறார்கள்.நாம் நமது படங்களை……தமிழகத்தைத்
தாண்டிய எல்லா மாநிலமுமே ட்ரெண்டியா இருக்கும் போது நம்ம மட்டும் ஏன் இப்படி
கட்டம் போட்ட சட்ட,மாடு
வெறிக்குற கலர்ல சீலைன்னு இருக்(கோம்)ந்தோம்ன்னு
யோசிச்சு பார்த்தால்..அதன் அடிநாத காரணம் சினிமா என்று தான் புலப்படுகிறது.
ரஜினி
சிகரட் பிடிப்பதைப் பார்த்து தானே நாமும் சிகரட் பிடிக்க ஆரம்பித்தோம்..கேன்சருங்கிறது
ஒரு குணப்படுத்த முடியாத வியாதிங்கிறதயே நமக்கு சினிமா தானே சொல்லிக் கொடுத்தது???எனில் நம்முடைய
உடையலங்காரத்தையும் அது தானே பாதிக்க முடியும்??சினிமா என்பது ஒரு மாஸ் மீடியா என்பதை நானா உங்களுக்கு அறிமுகப்
படுத்த வேண்டும்?
ஹிந்தி
சினிமாவில் பாருங்கள்..ஒவ்வொரு விசயமும் பல
கோணங்களில் இருந்து ரெஃபர் செய்யப்பட்டு,காட்சிக்கு கொண்டுவருகிறார்கள்.தூம்-2 வெளிவந்து 4,5 வருடங்கள்
ஆன பின்பும் கூட அதன் தரத்தை,நேர்த்தியை (only regarding the dressing ) முறியடிக்கும்
தமிழ் சினிமாவை நாம் இன்னும் பார்க்கவில்லை.ஹீரோவைத் தொழுகின்ற ஒரு
சமுதாயத்திற்கு ,ஹீரோ மட்டுமே போதும் அவர் நல்ல உடை அணிந்திருக்கிறாரா,பேண்ட் போட்டிருக்கிறாரா
சட்டை போட்டிருக்கிறாரா என்பதெல்லாம் தேவையற்றது.அதிகபட்சமாக
ரஜினி என்ன அணிந்து விட்டார்? கிழிந்த
பனியன்,ஷூவுக்குள்
நுழைத்து அணிந்த பேண்ட்,சட்டை
பட்டனைப் போடாமல் உள்ளிருக்கும் பனியனைக் காட்டுவட்டுவது…திரை பட விழாக்கள் என்றாலோ
படு மோசம் வேட்டி-சட்டை,தாடி,முகம் கூட கழுவாமல் வருவது,சாதாரண ,மிகச்
சாமான்ய தோற்றம்.எளிமையின் உருவம்.(விஜய்,தனுஸ்,சசிக்குமார்…இப்போது அடியொற்றிகள்)ஹிந்திக்காரர்கள்
திரைப்பட விழா ஒன்றிற்கு அணியும் உடை லட்சங்களைத் தாண்டுங்க!!!.அதை
விமர்சிக்க ரசிக்க மிகப் பெரிய வட்டம் வேற.சல்மான் கானைப்
பார்த்து,சாருக்கை
பார்த்து,கத்ரீனாவைப்
பார்த்து அவர்கள் உடையணிகிறார்கள்.நமது சினிமா பெரும்பாலும்
கதையில் கவனம் செலுத்திய சினிமா.மண்வாசனைப் படங்கள்,ராமநாராயணன் படங்கள்,தெலுங்கு டப்பிங்,என்று எதிலுமே உடையைப்
பற்றி யோசிக்க சந்தர்ப்பம் கிட்டவில்லை நமக்கு.கொஞ்சம் மாற்று சினிமா
எடுத்த மணிரத்னம்,கமல்
படங்களில் உடைகள் நன்றாக இருக்கும்.கமலும் மணியும் கதையையே
ரெஃபர் பண்ணித்தானே எடுத்தார்கள்…
சிலுக்கு
சுமிதா குத்துப் பாடல்களில் அணிந்த உடை இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.சுற்றிக்
கொண்டே இருக்கிறது.டிஸ்கோ சாந்தி,ரோஜா,நக்மா,ரம்பா,மும்தாஜ்,சோனா நமிதா(nami is very trendy in her real life) என
எல்லாரும் அதே உடை தான்(ப்ளவ்ஸ் ,ஸ்கர்ட்).இந்த
அளவில் கூட நாம் மாறவில்லை.ஹிந்தியில் சிக்னி ச்சமேலி
பார்த்திருக்கிறீர்களா?? இப்படி
நமக்கு இமிட்டேட் செய்ய கிடைத்த முன்னுதாரணங்கள் மோசமானவை..
மக்கள்
சினிமாவை கவனித்து ,உடைகளை
அதற்குதக்கனவாக மாற்றவில்லையோ???என்றால்
இல்லை.ஆட்டோகிராஃப்
கோபிகா சேலை,ஸ்னேகா
சேலை, சர்க்கரை
நிலவே பாடலில் விஜய் அணிந்த ஆரஞ்ச் சர்ட்,ப்ளூ ஜீன்,கில்லியில்
வந்த வெள்ளை சர்ட்,ப்ளு
ஜீன் எல்லாம் நாமும் அணிந்தோம் தானே.எனவே தமிழக ரசிகன் ஃபாலோ
செய்ய தயாராத்தான் இருந்தான்.அவன்க்கு தீனி தான் சரியாக
கிடைக்கவில்லை.
ஆனால்
தமிழ் சினிமா இப்பொழுது மாறி விட்டது.கஜினிக்குப் பிறகான சூர்யா,பில்லாவிற்கு பிறகான அஜித்,நன்பனுக்கு பிறகான விஜய், விக்ரம்,ஆர்யா,சிம்பு,அதர்வா ,கார்த்தி
விசால்,என
புதுமுகங்கள் உடையலங்கார விசயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள்.’பையா’ படம் ஒரு
மிகச் சிறந்த உதாரணம்.நுணுக்கமான கவனத்துடன்
உடைகள் தேர்வு செய்யப் பட்டு .க்ளாஸ்
ஆக வந்த படம்.டைரக்டர்களை எடுத்துக் கொண்டால் லிங்குசாமி,சங்கர்,முருகதாஸ்,கே.வி.ஆனந்த்,விஸ்ணுவர்தன் ஆகியோர் fashion conscious ஆக
இருப்பவர்கள்.
ஃபேசன்
என்பது திரை வழி மட்டுமே நம்மைச் சேரும் சாத்தியம் கொண்டது.அப்படியானதை
நாம் செய்யத் தவறியது தான் தமிழர்கள் ட்ரெண்டியாக,conscious ஆக இல்லாததன் காரணம்,ஆகவே யாரையும் தப்பு
சொல்லக் கூடாது.நொந்து கொள்ளலாம்.அவ்வளவே…!! மேலும்
ட்ரெண்டியாக இல்லாதது ஒன்று செய்யக் கூடாத குற்றமல்லவே?மானம் மறைக்கத் துணி என்று
இருப்பதெல்லாம் குற்றமே இல்லை.இப்படி ஃபேசனை பக்கத்து மாநிலங்களில்,நாடுகளில் பார்த்துப்
பார்த்துப் பழகியதால் தான், ‘அரையுங்
கொறையுமா”,எஃப்
டிவி என்றெல்லாம் நமக்கு பொது புத்தி வந்தது.ரம்பா நக்மா,ரோஜா,சிம்ரன் ,பழைய
விஜய்,அஜித் ,விக்ரம்
போன்றவர்களைப் பார்த்து விட்டு ,இதையெல்லாம்
போட்டால் கண்றாவியா இருக்கும் என்று எண்ணி தான் அதே பட்டு சேலை கட்டம் போட்ட
சட்டையிலேயே தங்கி விட்டான் தமிழன்.தவிரவும் சென்னை,பாண்டிச்சேரி,கோவை,நகர இளைஞர்கள் ஆதி தொட்டே
ஒரளவு விசயம் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.பட் இப்ப
காலம் மாறிப் போச்சு,…….பென்சில்ஃபிட்
ஜீன்ஸ்,ஸிலிம்
ஃபிட் ஸ்ர்ட் போடாத இளைஞனையோ,குர்தி-ஜீன்ஸ்
போடாத ,லெக்கிங்ஸ்,போடாத
பெண்ணையோ பார்க்கவே முடியாது.மிடில் க்ளாஸ் இளைஞனும் ,சூர்யா
அதர்வாவைப் பார்த்து அட்டகாசமாக உடையணிகிறான்.பஸ்களிலிலும்,பாஸ்ட் ஃபுட் கடைகளிலும் , ‘த்தா!!! மாற்றான்ல சூர்யா செம
காஸ்ட்டியூம் போட்ருக்காண்டா.சான்சே இல்ல மச்சி’ என
ஃபேசன் விவாத பொருளாகிறது.ஃபீலிங் பெட்டர்..
இறுதியாக …….சுந்தர்.சி
படங்களில் வரும்
நக்மா,ரம்பா
எல்லாம் கிராமத்துக்கு போகும் போது,கிராம மக்கள் வாய் பிளக்க வேண்டும் என்பதற்காக சகலமும் தெரிகிற மாறி
உடையணிந்து கொண்டு அது தான் ஃபேசன் என்று சொன்னதற்கும் இன்று திரிசா, ’இது தான் ஃபேசன் ’என்ற
பிரகடனம் இல்லாமல் அணியும் உடைகளுக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டீர்கள்
என்றால்,எது
உண்மை எது மாய பிம்பம் என்பதை உணர்ந்து கொண்டால் நான் சொன்னது புரிந்துவிடும் .//
இது என் நண்பர் ப்ரவீன் ஃபேஸ்புக்கில் எழுதியது. இதை வாசிக்கும் போது தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் ஆடையே நினைவிற்கு வருகிறது.....
பின் குறிப்பு : The Alchemy of desire என்னும் நாவலைப்பற்றிய என் கட்டுரை மலைகள் இணைய இதழில் வெளியாகி உள்ளது. விரும்புபவர்கள் கீழே இருக்கும் லிங்கை க்ளிக்கி வாசித்துக் கொள்ளலாம். . .
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக