எடை போடப்படும் இலக்கியம்

So... U r goin for it b'coz of Charu?
சில விஷயங்களை நான் என் இணையத்தில் எழுதாமல் இருக்கிறேன் கொஞ்சம் வருத்தம் சார்ந்தது. என் இணையத்திலேயே நான் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் லேபிலில் சில பதிவுகளை இட்டு வருகிறேன். ஆரம்பத்திலிருந்து வாசிப்பவர்களுக்கு அது தெரியும். அப்படி தெரியாதவர்களுக்கு சின்ன முன்னோட்டம்.

நான் இரண்டு ஆண்டுகளாக சாரு நிவேதிதாவின் நூல்களை வாசித்து வருகிறேன். அவர் தான் முதன் முதலில் எனக்கு தெரிந்து இலக்கிய வாசனையினை அளித்தவர். அவருக்கு முன் நான் வாசித்ததெல்லாம் பாக்கெட் நாவல்கள் மட்டுமே. மீதியினை அந்த லேபிலினை க்ளிக்கி வாசித்துக் கொள்ளுங்கள்.

அப்படி அவரை தொடர்ந்து வாசிக்கும் போது அவரின் எழுத்தினை சிலாகிக்க நினைத்தேன். ஆட்களுக்கு எங்கே போவது ? மணமகள் தேடுவதை விட கொடூரமான தேடலினை கொண்டது இந்த இலக்கிய நண்பர்களை தேடுவது. அப்போது ஃபேஸ்புக்கில் அவருடைய வாசகர் வட்டம் தெரிந்ததால் அதில் இணைந்தேன். அங்கே எனக்கு தெரிந்த சாரு நிவேதிதாவை நான் புரிதல் கொண்ட அவரின் எழுத்துகளை பதிவுகளாய் இட்டேன். பல மாதங்கள் வட்டத்தில் இருந்து ஒரு வாசகர் வட்ட சந்திப்பிலு கலந்து கொண்டமையால் என்னை அந்த வட்டத்தின் அட்மின்கள் நெருங்கிய வட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். 

இப்போது அடுத்த விஷயத்திற்கு வருவோம். இதுவரை சொன்னது கடந்த கால சமாச்சாரங்கள். சமீபத்தில் அவர் கோவை வருவதாக இருந்தது. அவரை சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தேன். அவரை சந்திக்க ஈரோட்டிலிருந்து ஒரு அன்பரும் வந்தார். அவரிடம் தான் சாரு வரும் இடங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் விடுதியில் வெளியில் போக பாஸினை வாங்கிக் கொண்டு காலையிலிருந்து காத்திருந்தேன். ஒரு மணி அளவில் அந்த ஈரோட்டு அன்பரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆவலுடன் நானும் எடுத்தேன். அவர் சொன்ன பதில் - உங்கள சாரு வர வேண்டாம்னு சொல்லிட்டாரு கிமு.

அப்படியே சந்தேகத்தில் ஆழ்ந்தேன். சாருவிடமே மின்னஞ்சலில் ஏன் எனை வரவேண்டாம் என அந்த ஈரோட்டு நண்பர் மூலம் சொன்னீர்கள் என கேட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் இரு வட்டத்திலிருந்தும் நீக்கப்பட்டேன். இவை அனைத்து நடந்தது சமீபத்தில்.

ஒரு மாதம் முன்பு சாரு அறிமுகப்படுத்திய நூல் தருண் தேஜ்பால் எழுதிய the alchemy of desire. அந்நாவல் அவர் எழுதிய எக்ஸைல் நாவலினைப் போலவே உள்ளது என ஒரு பதிவில் சொல்லியிருந்தார். எக்ஸைல் எனக்கு அவர் எழுதியதிலேயே மிகவும் பிடித்தது என்பதனால் அவர் சொல்லிய அடுத்தநாளே இந்நாவலினை வாங்கினேன். அப்போது எனக்கு செமெஸ்டர் இருந்தமையால் வாசிக்காமல் இப்போது விடுமுறையில் வாசிக்கிறேன். என் கெட்ட பழக்கம் எந்த நாவல் வாசித்தாலும் அதில் என் மனதினை கவரும் வரிகளை டை செய்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வேன்.

இப்போது இந்த பத்தியின் முதல் வரியினை வாசித்துக் கொள்ளுங்கள்.

இதைக் கேட்க ஃபேஸ்புக் நண்பரான கிருஷ்ணகுமாருக்கு எப்படி மனம் வந்தது ? 

இதே போல் தான் சாரு அறிமுகப்படுத்தி சில வாரங்களுக்கு முன் ப்யுகோவ்ஸ்கி எழுதிய வுமன் நாவலினை வாசித்து பக்கம் பக்கமாக பகிர்ந்தேன். என் புரிதல் சரியில்லை நான் இன்டலெக்சுவல் முகமூடி அணிய யத்தனிக்கிறேன் என மிக நிண்ட பின்னூட்டம் இட்டிருந்தார் ஹல்பின் ஃப்ரேசர் என்பவர். சாரு வட்டத்தில். அதனை என் பதிவு ஒன்றிலும் பகிர்ந்திருக்கிறேன். அப்போது எங்கே போனார் இவர் ? அப்போதும் சொல்ல வேண்டியது தானே நான் சாருவிடம் அதிகம் நெருக்கம் கொள்ள காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறேன் என ?

ஆதவன், ஜி.நாகராஜன், ப.சிங்காரம், கரிச்சான் குஞ்சு, அசோகமித்திரன். சுஜாதா, மௌனி, ஓரான் பாமுக், தாஸ்தாயெவ்ஸ்கி, ப்யூகோவ்ஸ்கி, வி.எஸ்.நைப்பால், கார்ஸியா மார்க்கேஸ், கஸான்சாகிஸ் என அனைவருமே நான் அவர் மூலம் அறிந்து கொண்டது தான்.

சுஜாதாவையெல்லாம் சொல்கிறாயே ஒனக்கு ஓவரா இல்லை என கேட்கலாம். பல புத்தகங்கள் எழுதி ஜனரஞ்ஜக அளவில் நான் குறிப்பிட்டவர்களில் ரீச் ஆனவர் அவர் தான். ஆனால் நானோ இரண்டு மாதங்கள் முழுக்க சாருவினை மட்டுமே ஒருநாள் விடாது வாசித்து அவருக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தேன். அவருடைய சினிமா புத்தகங்கள் மட்டுமே இதுவரை நான் வாசித்ததில்லை. அவர் அறிமுகப்படுத்தும் சினிமாவையெல்லாம் எப்போது நான் பார்க்க முடியும் என எனக்குள் நம்பிக்கை வருகிறதோ அப்போது வாசிப்பேன். அப்படியிருக்கையில் ஒரு முறை சுஜாதா விருதுகளின் போது சாரு சுஜாதாவினைப் பற்றி பேசினார். அதில் அவர் அறிமுகப்படுத்திய கனவுத் தொழிற்சாலை நாவலும் கணையாழி கடைசி பக்கங்கள் நூலும் வாங்கி வாசித்தேன்.

அவர் எழுத்தின் மூலம் நான் சிலரை நானாக தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். இன்னும் லிஸ்டில் நிறைய பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். உலக இலக்கியவாதிகளும் அடக்கம்.

கிருஷ்ணகுமாருக்கு,
ஏற்காடு  சந்திப்பில் சாரு என்னிடம் சொன்னது - உன் கதைகளை என்னிடம் அனுப்பாதே. எனக்கு வாசிக்க நேரமில்லை. நான் நல்ல வாத்தியாரும் இல்லை என.

துரோணாச்சாரியார் நீ அந்தணன் அதனால் உனக்கு வித்தையினை கற்றுத் தரமுடியாது என சொன்னவுடன் அவன் அவரை வெறுக்கவில்லை. அப்படியும் அவரையே குருவாகக் கொண்டான். சாருவே நான் மானசீகமாக கொண்டுள்ள குரு.

எனது நாவலின் வெளியீட்டின் போது இளங்கோவும் மயூராவும் சாருவினை தலையாய் கொள்வது தவறு என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தூற்றுவார் தூற்றட்டும். எனக்கு தமிழில் இலக்கியங்களையும் உலகின் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியவர் அவர்மென் நிலையில் யார் இருந்தாலும் சாருவை உலகை அறிமுகப்படுத்திய தாயாகவே பார்ப்பார்கள். அப்படிப்பட்ட அவரை என் குரு என சொல்வதில் நான் எப்போதும் கவலையோ அருவருப்போ கொள்ள மாட்டேன்.

மேலும் காரணம் தெரியாமலேயே நான் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். இனி அழைத்தாலும் அங்கு சேரப்போவதில்லை. அவரின் இணையத்தினை வாசிக்கும்  வாசகர் வட்டத்தில் அல்லாத ரசிகர்களில் நானும் ஒருவன். இனி அவர் ஏதேனும் நூல்களை அறிமுகம் செய்தால் அதனையும் வாசிப்பேன். பகிர்வேன். எழுதுவேன்.

கிருஷ்ணகுமார் கேட்ட கேள்வி உண்மையில் வலிக்கிறது. அந்த நாவல் அவ்வளவு உன்னதமாக இருந்தது என்பது அவருக்கு தெரியுமா என எனக்கு தெரியவில்லை. நானோ ஆங்கிலத்தில் அப்படியொரு நாவலை இப்போது தான் வாசிக்கிறேன். என் ஆங்கில வாசிப்பே குறைவு தான். அதில் உன்மத்தமான அனுபவம். நிச்சயம் எழுதுவேன். சில காரணங்களால் காலம் பொறுத்தே வரும்.

இது போல் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் (கிருஷ்ணகுமார் மட்டுமல்ல). இதை விட இலக்கியத்தினையும் யாரும் அசிங்கப்படுத்த முடியாது.

Share this:

CONVERSATION

4 கருத்திடுக. . .:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அவமானப்படுங்கள். இலக்கியவாதியாவதற்கு இதுவே முதல் தகுதி. வாழ்த்துகள். இன்னும் வளருவீர்கள். புலம்புவதைமட்டும் தவிர்த்துவிடுங்கள்.

titansatheesh.blogspot.in said...

அன்புள்ள கிமு
உங்களின் இந்த பதிவை படிக்கும்போது சற்று வருத்தம் மட்டுமல்ல பரிதாபம் கூட ஏற்படுகிறது. நானே உங்களை பலமுறை சீண்டியும் கேலி செய்தும் இருக்கிறேன் .அவையெல்லாம் உங்களை சங்கட படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல .தெரிந்தோ தெரியாமலோ உங்களையும் அவ்வபோது சிலர் வாசிக்கும்போது ,அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடாது .நீங்கள் எழுதும் அனைத்தும் உங்கள் டயரியில் என்றால் யாரும் விமர்சிக்க போவதில்லை .பொதுவாழ்வில் யாராக இருந்தாலும் விமர்சனத்தை நேரிட தைரியம் வேண்டும் .நீங்கள் எழுதும் எல்லா பதிவையும் அவசியம் நீங்கள் முதலில் படிக்கவேண்டும் .அப்போதுதான் உங்கள் தவறை திருத்திக்கொள்ள முடியும் .நான் சென்ற கடிதத்தில் கூறியதுபோல 80% சாருவை போல தான் எழுதுகிறீர்கள் .இனியும் பணம் அனுப்ப சொல்லி எழுதவில்லை ,இந்நிலை நீடித்தால் அதையும் செய்வீர்கள் .உங்கள் பல பதிவை கண்டு எரிச்சல் பட்டுள்ளேன் .அதை சொன்னால் சாருவை போல " என்னை பிடிக்காதவர் ஏன் என் எழுத்தை படிக்கணும் என்று கேட்டு விடுவீர்கள் . உங்களை திருதிக்கொல்லாவிட்டால் இப்போது சாருவை மட்டுமே இழந்த நீங்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் இழக்க நேரிடும் .

Kimupakkangal said...

சதீஷ் தங்களின் கூற்றினை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீண்டும் வாசியுங்கள். சாரு என்னை ஏன் தன் அமைப்பிலிருந்து நீக்கினார் என எனக்கு தெரியவில்லை ? எனக்கு கிருஷ்ணகுமாரின் மீது கோபமே நாவலை வாசிக்க கூட சிலரிடம் அனுமதி கோருங்கள் என்பது போல் எனக்கு பட்டது. அது தான்.

என்னை பிடிக்காதவர் ஏன் என் எழுத்தை படிக்கணும் என்று கேட்டு விடுவீர்கள் // இது எப்போதும் நடக்காது நண்பா. தாராளமாக தோன்றிய கருத்துகளை சொல்லலாம். தவறிருப்பின் திருத்திக் கொள்வேன்.

சாருவினையே தொடர்ந்து வாசிப்பதன் காரணத்தால் அப்படி இருக்கலாம். நான் தாஸ்தாயெவ்ஸ்கியினையும் ப்யூகோவ்ஸ்கியினையும் வாசித்தவுடன் நான் எழுதினேன் சாரு மாதிரியே இருக்கு என ? சற்று மாடுலேஷன் மாற்றியிருந்தால். . . சமகால இலக்கியத்தில் எழுதுபவனுள் விஷயங்கள் தோன்றுகிறது ஆனால் எழுதப்படும் வார்த்தைகள் கடத்தப்பட்டவைகளாகவே உள்ளது. தவறினை தாராளமாக சுட்டிக் காட்டலாம். :)

titansatheesh.blogspot.in said...

very good kimu ,I wish you all the best


satheesh

Post a comment

கருத்திடுக