என் சாரதிக்கே முதல் பிரதி

சொல்வதற்கு வார்த்தையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். மகிழ்ச்சி என்பதனை விட யூகிக்க முடியாத ஒருவித எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகளுக்கு முன் இருவரை பற்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் இந்த மகிழ்ச்சிக்கு வித்து என சொல்லலாம்.

தமிழ்ச்செலவன். இவர் நாவலின் பதிப்பாள்ர். முதன் முதலில் இவரிடம் நாவலினை கொடுத்தவுடனே தன் விமர்சனத்தினை வாசித்து முன்வைத்துவிட்டார். அது இந்நாவல் ஆழமே இல்லாத படைப்பு என. முழு விபரங்களையும் நேரில் சொல்கிறேன் என்றார் ஆனால் அதன் பிறகு சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

அடுத்து நறுமுகை தேவி. இவரிடம் என் நாவலினை பற்றி வெளியீட்டின் போது பேச முடியுமா என கேட்டேன். அவர் சற்றும் யோசிக்காமல் நான் குறைகளையும் சொல்லுவேன் என்றார். இந்த கேள்வி தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சமிபத்தில் சூர்யகுமார் என்பவர் கூட நான் இந்த மாதிரி விமர்சனம் செய்தீர்களெனில் தாங்குவீர்களா என அவர் செய்திருந்த விமர்சனத்தினை காண்பித்து கேட்டிருந்தார். நான் விமர்சனங்களை முழுதும் வரவேற்கிறேன். நானே ஆரம்பத்தில் ஒரு படத்தினை பார்த்து அதனை புகழ்ந்து பேசினால் விமர்சனம் என நினைத்திருந்தேன். ஆனால் விமர்சனம் ஒரு காரணியினை நிச்சயம் கொண்டிருக்க வேண்டும். சில படைப்புகள் ஏதேனும் புதிய கருவினை அல்லது புதிய விஷயங்களை சொல்லலாம். அல்லது பல குறைகளை தம்மில் கொண்டிருக்கலாம். இது இரண்டினையும் விட நல்ல படைப்புகளுக்கான அறிகுறிகளை தன்னுள் கொண்டிருக்கலாம். அங்கு எதிர்விமர்சனங்கள் அதிகம் எழும். ஆனால் அவை நன்மைக்கே. ஒரு விஷயம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்வது போல் இருக்க வேண்டுமே என்று தான். பாலாவினை ஒருவர் எதிர்விமர்சனம் செய்கிறார் எனில் அதற்கு காரணம் பாலாவிற்கான ஒரு கலைசார்ந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் படைப்பில் இருக்கும் சில தேவையற்றதை எடுத்தால் தமிழிலிருந்து படைப்புகள் அடுத்த நிலைக்கு செல்லும் என்னும் எதிர்பார்ப்புதான் விமர்சனங்கள். அப்படி இருவரின் விமர்சனங்களையும் நான் எதிர்பார்க்கிறேன்.

எனக்கு என் எழுத்துகள் இந்த கடைசி ரகம் தான். விமர்சனங்களையும் நான் அப்படியே உள்வாங்குகிறேன். யாரும் விமர்சனம் செய்யவோ குறைகளை கூறவோ தயங்க வேண்டாம். தயங்கும் அளவு நானும் அதிகாரத்தில் இல்லை. தங்களை போலவே நானும் ஒரு சாமான்யன்.

இப்போது அந்த சாமான்யனின் முதல் புனைவு வெளி வர இருக்கிறது. முதல் புனைவா ? ஆம் இதுவரை என் இணையதளத்தினில் எந்த புனைவினையும் எழுதவில்லை. சிறுகதைகள் கூட பத்திரிக்கைகளில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதன்படி பிருஹன்னளையே என் முதல் புனைவு.

இதன் வெளியீட்டினை நான் கோவை வ.உ.சி பூங்காவில் வரும் மே 5 ஆம் தேதி வைக்கலாம் என்றிருக்கிறேன். எரியும் பனிக்காடு நாவலை எழுதிய இரா.முருகவேள் வெளியிட இருக்கிறார். எரியும் பனிக்காடு மொழிபெயர்ப்பு என்பதால் தமிழில் அவர் எழுதியது என சொல்லியிருக்கிறேன் - இந்த வரி அறச் சீற்றம் மிகு பதிவர்களுக்கு! அவர் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் காலை பத்திலிருந்து பதினொன்றரை வரை.

என் நாவலை பற்றி சிலர் பேச இருக்கிறார்கள். அவர்கள்
மயூரா ரத்தினசுவாமி
நறுமுகை தேவி
சுஷில்குமார்
தமிழ்ச்செல்வன்

இப்போது தான் இதில் ஒரு புது பிரச்சினை எழுந்தது முதல் பிரதி யாருக்கு என.  இதனை இதுவரை யோசிக்கவில்லை. இப்போது சொல்கிறேன் முதல் பிரதியினை வாங்கப்போவது யார் என. ஆரம்பத்தில் என் கதைகளை பத்திரிக்கை போட்டிகளில் தேர்வாகவில்லையே என முடங்கிக் கிடந்த போது, அப்பா அம்மாவிற்கு நான் ஷக்திமான் போகோ பவர் ரேஞ்சர்ஸ் போல் எழுத்தினையும் விளையாட்டாய் செய்கிறான் என என்னிடமே சொன்ன போது, நண்பர்கள் திண்டுக்கல் சாரதி பாஸ்கர் வசனத்தினை சொல்லி என்னை அசிங்க படுத்திய போது கூட நான் ஒருவனுக்கு எழுத்தாளனாய் தெரிந்தேன். என் எழுத்து ஏனையோருக்கு எப்படி இருந்தது என தெரியவில்லை ஆனால் அவனுடைய ஆசை சுஜாதாவுடன் நான் போட்டியிட வேண்டும். என் வளர்ச்சி, எனக்கான முதல் விமர்சனம், என் விமர்சனங்களில் அவன் கொள்ளும் பார்வை என என் எழுத்தில் எழுத்தாகவும் இருக்கும் மாஸ்டர் என்னும் நாகஹரி கிருஷ்ணன். என்னை எப்போதும் எழுது என மனதினிலும் நேர்வாழ்க்கையிலும் தூண்டிக் கொண்டிருக்கும் ஒரு வெகுளியான சாரதி. அந்த சாரதிக்கே முதல் பிரதியினை முருகவேள் கொடுப்பார். . . 


குறிப்பு : இணையதளத்தில் என் எழுத்துகள் சார்ந்து குறைகள், அசூயை, அவதூறு இருப்பின் தாராளமாக அன்று கேட்கலாம். மீண்டும் சொல்கிறேன் எழுத்து எப்போதுமே விமர்சனத்திற்குரியது.

நாவலினை நான் தான் அங்கு கொண்ட் வர இருக்கிறேன். எத்தனை நாவல் வேண்டும்(ஒரே பிரதியாகினும் கூட) என சொல்லுங்கள். அதனுடன் கொஞ்சம் அதிகமாகவே கொண்டு வருகிறேன். விரைவில் என் நாவல் எங்கெங்கு கிடைக்கும் என்பதனை சொல்கிறேன்.

பின் குறிப்பு :


நாவலை வாங்க விரும்புவோர் இந்த வங்கி கணக்கிற்கு பணத்தினை செலுத்தலாம். நாவலின் விலை 60. உடன் பத்து ரூபாய் மட்டும் சேர்த்து அனுப்பவும்(மீதி கூரியர் சார்ஜினை நான் பார்த்துக் கொள்கிறேன்). அனுப்பிவிட்டு என் ஃபேஸ்புக்கிற்கோ அல்லது கிமுபக்கங்கள் பக்கத்திற்கோ krishik10@gmail.com என்னும் மின்னஞ்சலிற்கோ அனுப்பிய விபரத்தினையும் அனுப்ப வேண்டிய முகவரியினையும் அனுப்பி வைக்கவும். மே 4 நாவல்களை அனுப்ப இருக்கிறேன். வெளியீட்டிற்கு வருபவர்கள் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம்.

Account holder : Krishna moorthi.G
Account number : 20111113363
IFSC code : MAHB0000375
Bank : Bank of Maharashtra(salem branch)

Share this:

CONVERSATION

4 கருத்திடுக. . .:

N.Parthiban said...

Congrats Krish...All the best...

Nondavan said...

வாழ்த்துகள் நண்பா...மென்மேலும் வளர வாழ்த்துகள்...

Anonymous said...

யோவ்... நானும் வருகிற்றேன்.

Muruganantham S said...

Congrats and best wishes friend.... not able come, sorry for that.... surely will read and give my feedback.....

Post a comment

கருத்திடுக