நான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக்கலில் எப்படி போனது என தெரியவில்லை நான் எழுதி வைத்திருந்த கவிதைகள் என்னை விட்டு காணாமல் போய்விட்டன. அதன் பின் நான் கவிதைகளை சிந்தித்து எழுத முடியவில்லை. இந்த வார்த்தையே தவறு. சிந்தித்து எழுதுதல் கவிதையே ஆகாது என நம்புபவன் நான். கவிதை ஒரு சிருஷ்டி. முன்முடிவுகளும் கட்டமைப்புகளும் தீர்மானம் செய்து கொண்டு உருவாக்கப்படும் பிரதி அல்ல.
மேலும் எனக்கு கவிஞர்களின் மேல் பொறாமை இருப்பதுண்டு. எத்தனையோ விஷயங்களை அப்படியே சில வரிகளுக்குள் பொதித்து அதில் சொல்லமுடியாத தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தினையும் அளிக்கிறார்கள். எனக்கு அவ்வப்போது கனவுகள் போல், எங்காவது சென்று கொண்டிருக்கும் போது கவிதைகள் தோன்றும். அப்படி தோன்றியதை செல்போனில் வைத்துக் கொள்வேன் அல்லது அதனை எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வரும் போது எழுதிவிடுவேன். சமீபத்தில் கூட என் நண்பனொருவன் என்னிடம் ஒரு கவிதையினை கேட்டான். தலைப்பு மறுஜென்மம் வேண்டாம் என. இதனை முகநூலில் பகிர்ந்திருந்தாலும் இங்கே ஒரு சின்ன பகிர்வு
என் முதல் கதையினை போல் இதுவும் தோல்வியில் முடிந்தது. என் நண்பன் தேர்வாகவில்லை.
என்ன ஆனதோ தெரியவில்லை நேற்று இரவு ஒரு தனிப்பட்ட போதை. சினாஸ்கியின் நினைவுகள். என்னையறியாது சில கவிதைகளை எழுதினேன். எனக்குள்ளே சிருஷ்டிக்கப்பட்ட ஒரு பெண்(நீ). காமத்தின் பேரில் அவளுடன் நான் கொண்ட வேட்கை. அது உண்மையில் வேட்கையா காமமா கனவா உண்மையில் கவிதையா என சொல்ல முடியாத புதிர்களால் என்னுள் தோன்றிய வார்த்தைகள். பரிசீலனையின்றி தங்களுக்கு கொடுக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை தூண்டியது இதனை எழுத. அதனை கவிதைக்குள்ளேயே தேடுகிறேன். தேடிக் கொண்டே இருக்கிறேன். அந்த வார்த்தைகள். . .
கவிதை தீர்ந்தது.
மேலும் எனக்கு கவிஞர்களின் மேல் பொறாமை இருப்பதுண்டு. எத்தனையோ விஷயங்களை அப்படியே சில வரிகளுக்குள் பொதித்து அதில் சொல்லமுடியாத தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தினையும் அளிக்கிறார்கள். எனக்கு அவ்வப்போது கனவுகள் போல், எங்காவது சென்று கொண்டிருக்கும் போது கவிதைகள் தோன்றும். அப்படி தோன்றியதை செல்போனில் வைத்துக் கொள்வேன் அல்லது அதனை எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வரும் போது எழுதிவிடுவேன். சமீபத்தில் கூட என் நண்பனொருவன் என்னிடம் ஒரு கவிதையினை கேட்டான். தலைப்பு மறுஜென்மம் வேண்டாம் என. இதனை முகநூலில் பகிர்ந்திருந்தாலும் இங்கே ஒரு சின்ன பகிர்வு
பாட்டியின் மறுஜென்ம கதை கேட்டு
எனக்கொரு மறுஜென்மத்தினை
வேண்ட கோயிலுக்கு சென்றேன்
ஆள் அரவமற்ற கோயிலில்
அனாதையான குருக்களை பார்த்தவுடன்
காஞ்சிபுரம் ஞாபகம் பற்ற
முடிவு செய்தேன்
மறுபிறவி வேண்டாம். . .
ஆணாகப் பிறந்தால் அதிகாரம்
பெண்ணாகப் பிறந்தால் பாலியல்
திருநங்கையாக பிறந்தால் தீட்டு
திருந்தாத சமூகத்தில் எதற்கு பிறவி
மீண்டும் சொல்கிறேன்
மறுபிறவி வேண்டாம். . .
சுதந்திரமில்லா சூழலில்
பார்ப்பது சரியா ?
கேட்பது சரியா ?
கண்டறிவது சரியா ?
காதல் பொய்யா ?
கடவுள் பொய்யா ?
??????????????
ஆயிரம் கேள்வியுடன்
கழிக்க வேண்டிய களத்தில்
மறுபிறவி வேண்டாம். . .
அன்பிற்காக அலையும் மாந்தர்கள்
வாழும் நரமாமிச தெருவில்
எனக்கொரு பிறவி
இனி வேண்டாம். . .
புணர் ஜென்மத்தில்
உன்னுடன் நான் கொண்ட கலவியினை
உன் கூந்தலின் அசைவு நினைவூட்டியது
கூந்தலை வெட்டினாய்
புருவங்களின் வளைவு
கலவிக்காக உன்னை தேட வைத்தது
புருவம் கண்ணுக்குள் தங்கிவிட
கரமைதுனத்தில் காலத்தினை கழிக்கிறேன்
எங்கிருக்கிறாய் கண்ணே. . .
**********
கண்ணே
மணியே
அழகே
தேனே
யாழினியே
தேன்மொழியே
மகரந்தமே
மரகதமே
சே அனைத்தும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்
மொழி தோற்றது அன்பே
நானும் வர்ணிக்க வார்த்தையின்றி நிராயுதபாணியாக நிற்கிறேன்
**********
காமத்தின் முதல் வரியினை
உன் இதழில் அறிந்து கொண்டேன்
இன்னும் எத்தனை நாட்களுக்கு முதல் வரியிலேயே நிறுத்தப்போகிறாய். . .
**********
காமத்தால் செய்த உடல் மெழுகு போல் உருகிக் கொண்டிருக்கிறது
காமம் நிறைந்த கனவுகள் தீயாய் துரத்துகிறது
காமம் கலந்த காதல் மனதிற்குள் வாட்டுகிறது
காமம் பொங்கும் காமம் உனக்காக காத்திருக்கிறது
சீக்கிரம் வா என் உயிரே.
. .
**********
உன் தேகத்தினை கடந்த தென்றல்
எனக்குள் நுழையும் போது
கிளர்ச்சி ஆகிறேன்
உன் ஸ்பரிசம்
என் தேகத்தினை அடையும் போது
உச்சம் அடைகிறேன் முத்தமளிக்க
இதழ் குவிக்கும் போது
ஈரப்பதத்தினை உணர்கிறேன்
நீ பேச ஆரம்பிக்கும் முன்பே
உன் குரலினை கேட்கிறேன்
சித்த பிரமையோ என யோசிக்கும் போது
நீயும் நானும்
மலையுச்சியில்
பௌர்ணமியின் வெளிச்சத்தில்
ஒரே ஒரு மரம் இருக்க
அதனடியில் முடியா கலவியில்
திளைத்து இருக்கிறோம்
உனது சத்தம்
காமத்தினை வார்த்தையாக்குகிறது
காமத்தினை இலக்கியமாக்குகிறது
காமத்தினை இசையாக்குகிறது
காமத்தினை கவிதையாக்குகிறது
நம்மை கவிதையின் வரியாக்குகிறது
**********
உச்சம் அடைய போராடிய
நீண்ட கலவியில்
எத்தனை முத்தம் என ஊடல் கொண்டாய்
ஊடலை தீர்க்க மீண்டும் கலவியினை ஆரம்பித்தேன்
மீண்டும் ஊடல்
மீண்டும் கலவி
மீண்டும் ஊடல்
மீண்டும் கலவி
மீண்டும் ஊடல்
கலவி கூடலானது
ஊடல் என்றும் தீரா தேடலானது
**********
எத்தனையோ யுகங்களுக்கு பிறகு
நாம் எதோ ஒரு உலகத்தில்
நம் காதலை கலவியின் உச்சத்தில்
வார்த்தையாய்
வாக்கியங்களாய்
கவிதையாய்
இசையாய்
இழைத்து கொண்டிருக்கும் போது
தன் காதலிக்கு
உனக்கு அனுப்பிய கவிதைகளை
எவனோ அனுப்பிக் கொண்டிருப்பான்
ஆனால் அவனுக்கும் அவனுடைய காதலிக்கும்
தெரியாது
இந்த வார்த்தைகளை சிருஷ்டித்தவன் நான்
என்னுள்
கவிதையை சிருஷ்டித்தவள் நீ
இன்னமும் சிருஷ்டித்து கொண்டே இருக்கிறாய்.
. .
**********
உன்னை வருணித்து கவிதை எழுத நினைத்து
கவிதை எழுத கரமைதுனம் செய்ய வேண்டும்
கரமைதுனம் செய்தால் கவிதை பிறக்கிறது
கவிதையினை பார்த்தால் கரமைதுனம் செய்ய தோன்றுகிறது
கரமைதுனம் கவிதை கரமைதுனம் கவிதை கரமைதுனம் கவிதை
கரமைதுனம் கவிதை கரமைதுனம் கவிதை கரமைதுனம் கவிதை
கரமைதுனம் கவிதை கரமைதுனம் கவிதை என
வாழ்க்கையினை உன் ஒரு ஸ்பரிச நினைவால் இழந்து கொண்டிருக்கிறேன்
என் அழகான ராட்சசியே. . .
**********
கவிதை தீர்ந்தது.
1 கருத்திடுக. . .:
Nice
Post a comment
கருத்திடுக