அறிவியல் - தத்துவம்
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ? என நான் எழுதியிருந்த கட்டுரைக்கு சில வியத்தகு பின்னூட்டங்கள் எனக்கு முகநூலில் கிடைத்தது. அதனை பகிரலாம் என இங்கே பதிவிடுகிறேன். பின்வருவது சுப்ரமணியம் வேந்தன் என்பவரின் பின்னூட்டம்.
//நான் சமீப காலத்தில் முகநூலில் எழுதியிருந்த விஷயம் அறிவியல்
யூகங்களில் தான் ஆரம்பிக்கிறது என்பது. அதன்படி அறிவியலில் நடந்த ஒரு மாபெரும்
யூகம் ஹிக்ஸின் யூகமே. இந்த எடையானது எப்படி வந்தது என அவர் சொன்னது. அணுவின்
பகுதிகள் போல போசான் என்றொன்று இருக்கிறது. அது தான் எடையினை
தருகிறது என்றார். மேலும் அது துகள் கிடையாது. அது ஒரு வெளி(field).///
my reading
& view :தற்போது போசோனும்
துகளாகத் தானே அறியப்படுகிறது, கண்டறிய பட்டுள்ளது ? , போசொனுக்கும் முந்திய
நிலையே வெளி , ஆற்றல் தரும் வெளியை அறிவியலால் நிரூபிக்க முடியாது , அதுவும் வெறுமனே யூகித்துக்கொள்ளலாம் , போசோன்
உடபட சுழலகூடியது , சுழலாத நிலையில்(வெளி ) இருந்து வந்தது சுழலும் அணுக்கள் அணைத்தும் என
யூகிகலாம் , உண்மையில் அணுகலுக்குள்ளும் வெளி தான் அணுவுக்கு வெளியும் வெளிதான் , ஆற்றல் ,இருப்பு , காலம் அனைத்தும் வெளியே மற்ற நாம் காணும் அனைத்திலும் என்ன இருக்கிறது
? அதை நம் முன்னோர்கள் " மாயை " என்று சொல்லிவிட்டார்கள் ,நாம் அதை மாயை என்று சொல்லாமல் நிலையிருந்து எழுந்த நிலையற்ற அலை இந்த உலகம் எனலாம் , வள்ளுவர் வெளியை
" பொருள் " என்றார் மற்ற அனைத்தும் பொருள் அல்ல பொருள் அல்லாதவற்றை பொருள் என கொள்ளும் " என்ற குறளின் உள்ளர்த்தம் இது
தான் , உரை எழுதுபவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது , அப்படி தான் அனைத்து மத நூல்களும் கால போக்கில் மாறிவிட்டது என்ற கருத்தும் நிலவுகிறது, இப்போது ஹிக்ஸ் சொல்லும் வெளி பல காலங்களுக்கு முன்பே சித்தர்கள் வெட்ட வெளியை
குறித்து சொல்லிவிட்டார்கள் , மேலும் அல்லா ,
சிவன் , பரம பிதா , புத்தர் சொல்லும் சூன்யம் அனைத்தும் ஹிக்ஸ் சொல்லும் இந்த வெளியே எனலாம் , என்ன ஹிக்ஸ் அறிவியலால் யூகித்தார் , இறை துதர்கள் ,மகான்கள் என நம்பப்படுபவர்கள் உணர்ந்ததாக நாம் யூகிக்கலாம் , மேலும் வெளியை உணர்தவர்கள் மறுபடியும் அணு அளவுக்கு மீண்டும் நுணுக்கி இருக்கவும் முடிந்தது சிலரால் ,ஒளவை போன்றோர்கள்
நமது உயிர் துகளின் அளவை கூட பாடி இருகிறார்கள் , பரிணாமத்தை
பற்றி நம் முன்னோர்கள் டார்வின்க்கு முன்னே விளக்கி இருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க உண்மைதான். மேலும் இந்த ஹிக்ஸ் போசான் என்பதை
நாம் முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம் என ஒதுக்கி விட முடியாது. கொஞ்சம் தத்துவம்
சார்ந்த விஷயமும் கூட. இது கூட நிர்மலுடன் இன்று கொண்ட மிகக் குறுகிய சாட்டினில் அறிந்து
கொண்டேன்.
ஆசிய மற்றும் இந்திய தத்துவ போக்கில் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால்
ஆனது என்றிருக்கிறார்கள். அது நிலம் நீர் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம். ஆனால் ஐரோப்பிய
தத்துவங்களில் இந்த ஆகாயம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த ஆகாயம் என்பது சூன்யம் மற்றும்
வெளி ஆகிய இரண்டினையும் குறிக்கும் விஷயம். அதைத்தான் ஹிக்ஸ் போசான்ஸ் நிரப்பியுள்ளது.
தத்துவங்கள் சொல்லாத ஒரு வெளியினை ஐரோப்பியர்கள் அறிவியல் மூலமாக தேடுகிறார்கள். அந்த
தேடலில் தான் இருத்தலின் வித்தும் அமைந்திருக்கிறது.
மேலும் இந்திய மற்றும் ஆசிய தத்துவத்திலும் பௌத்த மதத்திலும்
சூன்யம் ஒரு பகுதியாக இருப்பினும் அது சுயத்தினால் ஏற்படக்கூடிய தெரிவு என்பது போலவே
இருக்கிறது.
ஒரு வேளை அந்த விஞ்ஞானிகள் இந்த தத்துவங்களை வாசித்திருந்தார்கள்
எனில் போசானினை எப்போதோ கண்டுபிடித்திருப்பார்களோ ? அணுவுக்கே வெளிச்சம்!
4 கருத்திடுக. . .:
நல்ல பதிவு... இன்னும் ஆழமாக எழுதலாம்... இந்த டாப்பிக் பத்தி...
http://en.wikipedia.org/wiki/The_Tao_of_Physics
பிரம்மம் என்கிற எல்லையற்ற சத்தியம் எப்போதுமே கட்டுப்படாத மோக்ஷமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது - பிரபஞ்சத்தில் ஆகாயம் ( space ) எங்கு பார்த்தாலும் கட்டுப்படாமல் இருக்கிற மாதிரி இந்தப் பிரபஞ்சத்திலேயே பல பானைகளை வைத்திருக்கிறோம் என்றால், அவற்றுக்குள் இருக்கிற காலியிடத்திலும் எப்போது அந்த ஆகாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்று எங்கும் பரந்து விரிந்த மஹாகாசம், மற்றது பானைக்குள் (கடத்துக்கள்) உள்ள கடாகாசம் என்று நம் பார்வையில் வேண்டுமானால் பிரித்துச் சொல்லலாமே தவிர, இரண்டு ஆகாசமும் வாஸ்தவத்தில் ஒன்றேதான். பானை என்கிற ரூபத்தை உடைத்துப் போட்டுவிட்டால் நம் பார்வைக்குக்கூட இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. இப்படியே பிரம்மத்தில் தனித்தனி பானைகள் மாதிரி நாம் மாயாசக்தியால் தோன்றியிருக்கிறோம் ஆனாலும் நாம் பிரம்மமேதான். மாயையின் பந்தத்தால் இது நமக்குத் தெரியவில்லை. அதை உடைத்து விட்டால் நாமும் அகண்டமான பிரம்மமே என்ற அநுபவம் வந்துவிடும்.- தெய்வத்தின் குரல் (அத்வைதம்)
Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/
நன்றிகள் பல...
நம் குரல்
Post a comment
கருத்திடுக