சிதைக்கப்படும் “நான்”
டிசம்பர் ஏழாந்தேதியிலிருந்து அந்த மாதம் முடியும் வரை எனக்கு விடுமுறையாகத் தான் இருந்தது. அந்த விடுமுறை முழுக்க நான் விவாதித்தது அசோகமித்திரன் க.நா.சு போன்ற எழுத்தாளர்களுடனே தான். இதில் சாருவின் நேனோவும் அடக்கம். இதை தனியாக ஏன் சொல்கிறேன் எனில். நேனோ ஒரு சிறுகதை. இருந்தும் இன்னமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் குறிப்பிட்ட படைப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது “நான்” என்னும் விஷயம். அசோகமித்திரன் மற்றும் க.நா.சு இந்த விஷயத்தினை வெளிப்படையாக கையாள்கிறார்கள். அதே சாருநிவேதிதாவோ மறைமுகமாக கையாள்கிறார். எப்படியாகினும் -இறுதியில் அதன் தாக்கம் மூவர்களிடமும் அருமையாக இருக்கிறது.
இந்த பிரதிகளையெல்லாம் விட்டு வெளியே வ்ந்து உண்மையில் நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் ? என் இணையதளம் எந்த நிலைமையில் இருக்கிறது என அறிய ஆசைப்பட்டேன் ?க்ஷீணமான நிலையினை அடைந்திருக்கிறது. உண்மையில் வாசகர்கள் எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதனை என்னால் இப்போது தான் புரிந்து கொள்ள முடிகிரது.
அந்த ஒரு மாதகாலத்தில் நான் சில வாசகர்களை சம்பாதித்தேன். அதில் அநேகம் பேர் நான் எழுதிய சினிமா மற்றும் இலக்கியம் சார்ந்த பார்வைகளை பார்த்து என்னுடன் நட்பு பாராட்டினார்கள். அப்போதும் என்னால் ஒரு விஷயத்தினை புரிந்து கொள்ள முடியவில்லை. சமீபகாலமாக மட்டுமே இந்த புரிதலை நன் கொண்டேன்.
நான் எனது இணையதளத்தில் நான்கு தலைப்பில் எழுதுகிறேன் என போன பதிவில் இட்டிருந்தேன். அதில் மூன்றினை விட்டுவிடுங்கள், மீதமிருக்கும் “என் பக்கங்களில்” தான் என் பிரச்சினையே. சின்ன உதாரணம் தருகிறேன். நான் போன மார்ச்சிலிருந்து இணையதளத்தின் உதவியினை கொண்டு எழுதிவருகிறேன். அதனை முகநூலில் லிங்கினை கொடுத்தும் வருகிறேன். முகநூல் மட்டும் இல்லையெனில் யாரும் என்னை வாசிக்கப்போவதில்லை. அதில் குரூப்கள் இருக்கிறது. இலக்கியத்திற்கென இருக்கும் குரூப்புகளில் இலக்கியம் சார்ந்த என் எழுத்துகளையும் சினிமாவினை பற்றி எழுதுவதை அதற்கென இருக்கும் பிரத்யேக குரூப்களிலும் லிங்கினை பகிர்வேன். இப்போது எனக்கு முகநூலில் கல்பனா என்றொரு தோழி இருக்கிறார். அவர் என்னுடன் அறிமுகமானதினை சொல்லத் தான் இந்த அறிமுகம். அவர் க.நா.சு எழுதிய அசுரகணம் என்னும் நாவலினை வாசித்திருக்கிறார். அவர் வாசிப்பதற்கு முன்னும் நான் எழுதியிருக்கிறேன் மேலும் அவர் இருக்கும் குரூப்பில் இருப்பதால் அதில் லிங்கினையும் அளித்திருக்கிறேன். அவர் அசுரகணத்தினை வாசித்தவுடன் என் கருத்துகள் எப்படி இருந்திருக்கிறது என யதேச்சையாக வாசித்திருக்கிறார். நன்றாக இருக்கிறது என்பதனால் என்னுடன் முகநூல் நட்பு கொண்டார்.
இந்த உதாரணம் மூலம் நான் சொல்லவரும் விஷயம் மிகவும் சிறியது. கல்பனாவினையோ இன்னமும் சிலர் அவரைப்போலவே என்னுடன் முகநூலில் நண்பராயிருக்கலாம். ஆனால் அவர்கள் என்னிடம் சொல்லாததால் எழுத முடியவில்லை. அப்படி இருக்கும் யாரையும் நான் குறையும் கூறவில்லை. ஆனால் அவர்களுக்கு என் எழுத்து ஏதோ ஒருவகையில் அசூயையினை ஏற்படுத்துகிறது என்பதனையே என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இலக்கியம் சினிமா அல்லது சாரு நிவேதிதா பற்றி எழுதினால் முப்பதினை தாண்டி வாசிப்பவர்கள் என் சொந்த அனுபவங்களை எழுதும் போது எங்கு செல்கிறார்கள் என்பதனை என்னால் யூகிக்கவே முடியவில்லை. ஒற்றை இலக்க எண்களாகவே என் சொந்த அனுபவ கட்டுரைகளை வாசிக்க வாசகர்கள் வருகிறார்கள். அதனால் தான் முகநூலில் கூட சுயத்தினை பிரதியாக்க வயது தேவையோ என பதிவினை இட்டிருந்தேன். அதற்கு சுஷில் என்னும் நண்பர் வயதினை கடந்தது தான் சுயம் என்றிருந்தார். கேட்க அருமையாக இருந்தது!
இந்த மனஉளைச்சல் இன்று ஆரம்பித்தது இல்லை. கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. மனதிற்குள்ளேயே போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தேன். அப்போது தான் சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களின் முதல் தொகுதியினை வாசிக்க ஆரம்பித்தேன். சாருவின் எழுத்துகளில் பழியாய் கிடந்த மாதங்களை எனக்கு அந்த பக்கங்கள் நினைவூட்டியது. அதில் நான் அறிந்த முதல் விஷயம் உன்னை நீயே முதலில் கொண்டாடு. இது தமிழர்கள் மறந்த விஷயங்களுள் ஒன்று. இங்கே அப்படி செய்வதும் தம்பட்டம் அடிப்பது போல் சிலாகிக்கப்படுகிறது. அதுவும் எழுத்து என வந்துவிட்டால் இங்கே அதை எழுதுபவன் சொன்னால் தான் வாசகனுக்கு தெரியப்போகிறது. அப்படியிருக்கையில் அவன் என செய்வான் ?
அதற்கேற்றாற் போல ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. அது யாதெனில் லெஸ் மிஸ்ரபில்ஸ் படம் பார்க்க போன வாரம் ப்ரூக்ஃபீல்ட்ஸ் சென்றிருந்தேன். படமோ மாலை மூன்றரைக்கு. நான் அங்கிருந்ததோ காலை பதினொன்றுக்கு. என் நண்பன் வருகிறேன் என சொன்னதோ இரண்டரை மணிக்கு. இடைப்பட்ட மூன்றரை மணி நேரம் என்ன செய்வது என தெரியாமல் திரிந்து கொண்டிருந்தேன். அப்போது தான் அங்கே ஒடிசியினை திறந்தார்கள். அந்த மாலிலேயே நூல்கள் இருக்கும் ஒரே இடம் அது தான். எப்போது அங்கு போகும் போதும் அதனை வாங்கும் அளவு பணம் என்னிடம் இருக்காது. எனினும் விலையினை பார்க்க அங்கே செல்வது வழக்கம். மேலும் அங்கு உட்கார்ந்து வாசிக்கும் அனுமதி இருக்கிறது. தாஸ்தாயெவ்ஸ்கியினை பார்த்தவுடன் அந்த நூலினை எடுத்துக் கொண்டு வாசிக்க அமர்ந்தேன். A christmas tree and a wedding என்னும் கதையினை அங்கேயே வாசித்தேன். நீண்ட நேரம் வாசிப்பதை போல ஒரு உணர்வு மேம்பட வேறு நூல்களை மேற்பார்வையிடலாம் என சென்றேன். அங்கு தமிழ்நூல்கள் அனைத்தும் சமையல் கலைஞரின் நூல்கள் என்பன போலவே இருந்தது. அதன் இடையில் உலகசினிமாவினை பற்றிய நூல் ஒன்றினை கண்டேன். எழுதியவர் திலகவதி. அதன் உள்ளடகத்தினை பார்த்தேன். அதில் The motorcycle diaries படத்தினை பற்றி எழுதியிருந்தார். வாசித்து சற்று சுயபரிசீலனை செய்யலாமே என வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒரு நீண்ட குப்பை என்றே சொல்ல நினைக்கிறேன்.
இப்படி சொல்வதற்கு ஒரு துணிவும் தைரியமும் எனக்கு வேண்டும். அதற்குகாரணமானவள் என் தோழி ஆஷா தான். அவள் நான் எழுதும் இலக்கியம் மற்றும் சினிமா பற்றிய பார்வைகளை நீ வெறும் கதைகளை மடும் ஒப்பிக்கிறாய் என சொல்லவில்லையெனில் நானும் இது போல் முழுபடத்தினையும் பிரதியாக்கிக் கொண்டிருப்பேன். அவள் அன்று சொன்னது ஒரு அசரீரியின் வார்த்தைகளை போல இப்போது என்னை என் எழுத்தினை மாற்றியிருக்கிறது.
இப்படி ஒரு எழுத்தாளரை அபாண்டமாக நான் குறை கூறுவதால் நான் என்னுடைய தரப்பினை நியாயமாக்க மாற்ற முற்படவில்லை. நான் எழுதிய The motorcycle diaries பற்றிய பார்வையில் அல்லது வேறு ஏதேனும் இலக்கியம் மற்றும் சினிமா கட்டுரைகளில் தவறு இருக்கலாம் ஆனால் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை. என்னிடம் இருக்கும் முப்பது நாற்பது வாசகர்கள் என் கருத்தினை வாசித்து அப்படியே விட்டுவிடுவதால் நான் தான் அவர்களை காட்டிலும் அறிவாளியானவன் என கர்வம் கொள்ளலாமா ?
ஒன்பதாவது திசை, நேனோ பற்றிய என் பார்வை, மெல்லிய இழை, மெய்தொட்டு பயில்தல் என்னும் கவிதையினை பற்றிய என் பார்வை, நான் இலக்கியம் சார்ந்து எழுதும் கட்டுரைகள் அனைத்தும் விவாதத்திற்குரியவை. ஆனால் அனைத்தும் இங்கு வாசிப்பிற்குரியவையாக மட்டும் இருக்கிறது. என் எழுத்துகள் உங்களை நோக்கி வரவேண்டும் என நினைக்கிறீர்களா ? அதற்கும் வழி செய்கிறேன். முகநூலில் ஒரு அகௌண்டினை அரம்பியுங்கள். https://www.facebook.com/kimupakkangal - இந்த முகவரிக்கு செல்லுங்கள். லைக் என்னும் பட்டனை தட்டினால் நான் எழுதும் பதிவுகள் தானாக உங்களை நோக்கி பயணியுக்கும்.
இத்தனை தூரம் முற்படுவதன் காரணம் பல எழுத்துகள் தங்கள் வீரியத்தினை வெளிப்படுத்தாமல் பதிப்பகத்தாரிடமே இருக்கிறது. மேலும் சில எழுத்துகளும் சினிமாவும் அறியப்படாமலேயே இருக்கிறது. நான் இன்று எழுதும் எழுத்துகள் வேறு ஒருவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதே போர் அவரின் எழுத்துகளை நான் எழுத வாய்ப்பில்லை. ஆனால் இரண்டிலும் புதுமை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த புதுமையினை கொண்டு சேர்க்க ஆசைப்படுகிறேன். அதன் சிறு தொடக்கமே இந்த முகநூல்.
பி.கு-1 : விடுமுறைக்கு வந்தால் எப்போதும் நண்பர்களை சந்திப்பது வழக்கம். இந்த முறை அது இதுவரை நிரைவேறவில்லை. நண்பன் ஆசிப் நாளை சந்திப்போமா என அலைபேசியில் கேட்டான். நானும் சரி என்றேன். பிறகு அவனே சொல்ல ஆரம்பித்தான் எப்போது வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் இருப்பதே இல்லை என லேசாக அவன் வீட்டில் திட்டியிருக்கிறார்கள். உடனே நான் அம்மாவினை ஏன் காயப்படுத்த வேண்டும் நாளை வீட்டிலேயே சந்திப்போம் என சொன்னேன். அணைப்பு சிறிய பேசுக்களுக்கு பிறகு துண்டிக்கப்பட்டது. ஆனால் அப்படி சொல்லும் போது எனக்கு அசரீரியினை போல ஒரு குரல் கேட்டது. எப்போது வந்தாலும் நூல், நண்பர்கள், சினிமா, லேப்டாப் என்றே இருக்கிறேன். அப்படியிருக்கையில் என் அம்மாவின் மனம் எப்படி இருக்கும் ? கண்ணாடியில் என்னைப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
பி.கு-2 : இந்தக் கட்டுரையும் “என் பக்கங்கள்”இன் கீழே வருவது தான்!

5 கருத்திடுக. . .:
dont worry about readership, hits, counts, keep writing , it will on its own will reach many
1st remove this 4 or 5 categories. just consolidate, easy for reading. also keep comments option open for books related posts
தாங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்கிறேன் ராம்ஜி. எனது இணையதளம் ஒரு நூலினை போல இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதில் இருக்கும் கமெண்ட் பகுதியிஅனி நீக்கினேன். அது இணையத்தில் எவ்வளவு பெரிய அறிவீன என உணர்ந்தபோது அதனை எடுத்துவிட்டேன். இப்போது எதில் வேண்டுமானாலும் கருத்துகளை பாதியலாம். மேலும் வாசிப்பதற்கு வழிவகுங்கள் என சொல்லியிருக்கிறீர்கள். அது தான் நான் இணையத்தில் வைத்திருக்கும்லேபில்கள். வாசகனுக்கு எதில் இஷ்டமோ அதனை வாசித்துக்கொள்ளலாம்.
அன்பு நண்பர் கிமு அவர்களே .தங்கள் படைப்புக்கள் மிக அருமைதான் அதில் எள்ளளவும் ஐயமில்லை , ஆனால் அதில் சாரு நிவேதிதா அவர்களது சாயல் அடிபடுகிறது . சாரு சாரு தான் .அவர் இந்த சமுதாயத்தில் எழுந்து வர மிகுந்த சிரமபட்டார் .30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவருகிறார் .
அதுபோல் உங்கள் எழுத்து உங்களின் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் . இன்றைய காலத்தில் இது சாதாரணம் , நம்மை போல 20 ஆயிரம் எழுத்தாளர்கள் BLOG இல் எழுதுகிறார்கள் .அனைத்தும் வாசிக்கப்படுகிறதா? என்று யாருக்கும் தெரியாது. எனவே தொடர்ந்து எழுதுங்கள் சுய புராணம் தவிர்த்து .
வாழ்த்துக்கள்
சதீஷ் மேனன்
கொச்சி
மிக்க நன்றி சதீஷ் மேனன். தாங்கள் மட்டுமின்றி நிரைய பேர் என் எழுத்துகளில் சாருவின் சாயல் தெரிகிரது என்றிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நான் காரணமில்லை. மேலு எந்த முன்முடிவுகளுமின்றியே நான் எழுதி வருகிறேன். காலப்போக்கில் என் எழுத்து சாருவினை ஒத்த இல்லாமல் ஆகிறதா என பார்ப்போம்.
Post a comment
கருத்திடுக