mixed feeling!

what is mixed feeling ?
இந்தக் கேள்வியினை நான் பன்னிரெண்டாம் வகுப்பில் இரண்டு மார்க் கேள்வியாக வாசித்த ஞாபகம். அதன் பதிலும் என்னுள் இருக்கிறது. அஃதாவது சந்தோஷாத்தினையும் சோகத்தினையும் ஒருங்கே உணர்வது தான் இந்த mixed feeling. இதனை இப்போது பரிபூரணமாக உணர்கிறேன்.

சந்தோஷத்தின் விளிம்பிற்கு செல்லும் அளவு ஒரு விஷயம் அல்லது செய்தி எனக்கு கிடைத்தது. ஆனால் உடன் சோகத்தினையும் தூக்கிக் கொண்டே அந்த செய்தி என்னிடம் வந்தது.

போன ஏப்ரலுக்கும் முந்தின ஏப்ரலில் இருந்து நான் எழுதுகிறேன். தினமலரில் அப்போது சிறுகதை போட்டி ஒன்று இருந்தது. அதற்கு ஐந்து சிறுகதை எழுதினேன். ஒன்றும் தேர்வாகவில்லை என்பதெல்லாம் தனிக்கதை. அதன் பின் தொடர்ந்து எழுதினேன். டைரியினை போல் சிறு நோட்டில் கட்டுரைகளையும் எழுதினேன். ஒரு நான்கு பேர் வாசிப்பார்கள். அப்போது தான் என் நண்பர் ப்ளாக்கினை எனக்கு அறிமுகப்படுத்தினார். என் கட்டுரைகளை அதில் எழுதலாம் என முடிவெடுத்து  கட்டுரைகளை அதில் எழுதி கொண்டிருக்கிறேன்.

என் சிறுகதைகளுக்கு பத்திரிக்கையில் இடம் கிடைக்குமா என அனைத்து சிறுகதைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதில் என் மனம் நிறைந்த பத்திரிக்கை காலச்சுவடு தான். நிறைய பத்திரிக்கைகளுக்கு அனுப்பினாலும் தங்களின் கதை தேர்வாகவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் என சொல்பவர்கள் இவர்கள் மட்டுமே.

இந்த ஆசை, அஃதாவது என் கதை பத்திரிக்கையில் வர வேண்டும் என்பது தீவிரமடைந்தது எப்போது எனில் என்னை பார்த்து என்னவாக விரும்புகிறாய் எனும் போது எழுத்தாளன் என்பேன். உடனே அடுத்த கேள்வி எழுதுகிறாயா ? ஆம் என்றவுடன் அடுத்த கேள்வி எந்த நூலில் வருகிறது ? நூலில் வந்தால் தான் எழுத்தாளனோ என தீவிரமாக எதையாவது நூலில் பத்திரிகையில் வரவைக்க வேண்டும் என அனுப்ப ஆரம்பித்தேன்.

இப்போது சொல்லலாம் நான் எழுத்தாளன் என்று. எனது இரண்டு கதைகள் வெளிவந்திருக்கிறது. எந்த பத்திரிக்கையில் எனில் திருவாரூர் மாவட்டத்தின் “இதயத்தூது” என்னும் நூலில்.

அங்கு வசிக்கும் என் உடன் படிப்பவனும் அறைப்பங்காளனுமான மதன் என்பவனின் மூலம் என் கதை பிரதியினை அவரிடம் கொடுத்திருந்தேன். அவர் மதனுக்கு தெரிந்தவர். அவன் மளிகைக்கடை வைத்திருப்பவன். அதுவும் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு அருகில். அநேகம் பேருக்கு அவனின் கடை நன்கு தெரியுமாம்.

அவனிடம் எப்போதோ என் பிரதியினை கொடுத்திருந்தேன். என்ன கதை கொடுத்தேன் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அதில் ஒரு கதை எப்போதோ வெளியாகிவிட்டதாம் மற்றொன்று வரும் வாரம் வெளியாகிறதாம். எந்த கதை எனத் தெரியவில்லை ? பத்திரிக்கைக்கு இடையில் சிக்கியிருக்கும் என் பெயரினை என்னால் பார்க்கவும் முடியவில்லை ? பார்க்க அதிக ஆசையாக இருக்கிறது. திருவாரூரிற்கே போகலாம் என துடிக்கிறது. ஆனால் அவன் எங்கோ வெளியூர் செல்கிறானாம்!

முதல் கதை வெளியாகியிருந்த பத்திரிக்கையினை கேட்டு அவனுக்கு போன் செய்து கொடுத்த உளவியல் பிரச்சினை. . . போன் செய்யக் கூடாது என நினைத்தாலும் செய்து விடுகிறேன். பாவம் மதன்.

பிரதி கிடைத்தவுடன் போட்டோ பிடித்து வலைதளத்தில் போடலாம் என நினைத்தேன். அவன் ஊருக்கு சென்றுவிட்டான்!!!!

Share this:

CONVERSATION