Insomnia - 2002

ஏற்கனவே சொல்லியிருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். ஏற்காட்டில் நடந்த சந்திப்பில் ஒருவர் என்னிடம் ஒரு இயக்குனரின் படங்களை பார்க்கிறோம் எனில், அது பிடித்து போய்விட்டால் அவரின் வேறு படைப்புகளை தேடி செல்வோம். எழுத்தும் சினிமாவும் இந்த வகையில் இரு போதை என்றார். ஏற்க வேண்டிய ஒன்று.

மனித மனம் எப்போதும் பிம்பங்களுக்காக அலைவது தான். அதில் ஊறப்பட்ட நானும் இப்படி யாருடைய படங்களையாவது பார்க்க வேண்டும் அதை பிறரிடம் சொல்ல வேண்டும் என தீயாய் துடித்தேன். அசரீரியாய் dark knight rises படம் போகவே அதன் இயக்குனரான நோலனின் படைப்புகளை வீம்புக்கு தேடினேன். இரண்டு படங்கள் இப்படி போனபின் தான் அவரை தேடி வாசிக்கவும் ஆரம்பித்தேன். என் பிம்ப வேட்டைகள் உடைந்து உண்மையாக நோலனின் திரை திறமைக்கு அடிமையானேன்.

அப்படி ஆன பின்பும் அவர் எடுத்ததில் பார்க்காததாக ஒரு படம் இருந்தது. அது தான் Insomnia. இந்த படம் எனக்கு கிடைக்கவேயில்லை. என் நண்பனிடம் சொல்லி வைத்திருந்தேன். நேற்று சென்னை சென்று திரும்பும் போது வீட்டிற்கும் செல்லாமல் நண்பனிடம் வாங்கி வந்து அந்த அதீத களைப்பினிலும் பார்க்க ஆரம்பித்தேன்.


இப்படத்தினை பற்றி சொல்ல நானே இருவேறாக பிரிய வேண்டி இருக்கிறேன். ஒன்று சாதாரண சினிமா பார்வையாளனாக மற்றொன்று நோலனின் ரசிகனாக.

சாதாரண சினிமா பார்வையாளனாக சொல்ல வேண்டுமெனில் சீட் நுனியில் அமர வைக்கும் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம். கே கானல் என்பவளின் கொலையினை துப்பறிய வரும் நாயகன். இல்லை நாயகர்கள். ஒருவர் டார்மர். இவர் தான் கதையின் நாயகன். இன்னொருவர் ஹாப். குற்றவாளியினை தேடிப் போகும் போது சந்தர்ப்ப வசமாக டார்மர் ஹாப்பினை குறி மாறி சுட்டுவிடுகிறார். அது கதையில் இரண்டாவது கேஸாகிறது. இவ்வளவு தான் நான் கதையினை சொல்லுவேன். ஏனெனில் இதன்பின்னும் முன்னுமே துப்பறிவது தான். அதனை திரையில் பாருங்கள்.

இதற்கு Insomnia என ஏன் பெயரிட்டார்களெனில் டார்மர் கதை நடக்கும் இடமான நைட்ம்யூட் என்னும் இடத்தில் வந்து சேர்ந்ததிலிருந்து தூக்கமின்றி பலவித காரணங்களால் தவிக்கிறார். அந்த இடத்தில் வெளிச்சம் மட்டுமே இருக்கும் என்பது கதையில் சொல்லப்படுகிறது. இந்த வியாதியினை திரையில் மெய் சிலிர்க்க வைக்கும் அளவு நடித்திருக்கிறார் அல் பசினோ. அவர் யாரென தேடி பார்த்தால் அவார்ட்களை குச்சி மிட்டாய் போல குவித்திருக்கிறார். . .

இப்போது நோலனின் ரசிகனாக சொல்கிறேன். அவர் எடுத்ததிலேயே மொக்கையாக நான் உணர்வது Insomnia வைத் தான்.இந்தப்படம் நோலனின் எந்த திறமையினையும் வெளிப்படுத்துவதாக தெரியவில்லை.

நோலனின் திறமைதான் என்ன ?
நோலனின் கதை அவ்வளவு சீக்கிரம் புரியாது. இது தான் அவரின் திறமையே. புரியாமல் இருப்பதை எப்படி மக்கள விரும்புவார்கள் என்பது உங்களின் கேள்வி சரியா ? அந்த கேள்விக்கு பதில் தருகிறேன்.

ஒரு சினிமா பார்க்கிறோம் எனில் அது வேகமாக செல்ல வேண்டும். நான் குறிப்பிடப்போவது தமிழ் ரசிகர்களை மட்டும் தான். இந்த கணிப்புகள் கூட என் உடன் படிக்கும் மற்றும் என் தோழர்களின் எண்ணங்களால் தான். ஆங்கிலப்படங்களெனில் அதில் சண்டை இருக்கலாம் பயமுறுத்தும் பேய்கள் இருக்கலாம், இருக்கக்கூடாத ஒன்று வசனம்!

இது உங்களின் நண்பர்களை கேட்டால் கூட சொல்வார்கள். அப்படி இல்லையெனில் இதனை என் தனிப்பட்ட அனுபவமாக எடுத்துக் மேற்கொண்டு வாசியுங்கள்.

நோலன் தான் எடுக்க வேண்டிய கருவினை அப்படியே தொடர் காட்சிகளாக எடுக்காமல் அதனை திரைப்புதிர்களாக மாற்றுவார். இதனை இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஏதேனும் கொலை படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கதையின் ஆரம்பத்திலிருந்து அந்த கொலைக்காரன் வந்து கொண்டே தான் இருப்பான் ஆனால் யாரென தெரியாது. இதனை அனைத்து விதமான கதைகளிலும் செவ்வனே செய்பவர் நோலன்.

உதாரணம் கொண்டு விளக்கினால் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அவர் இயக்கிய படம் தான் மெமெண்டோ.


இதனை கேவலமாக தமிழிலும் ஹிந்தியிலும் கஜினியாக எடுத்திருக்கின்றனர். அதை கேவலம் என்றே இதனை பார்த்தபின் தான் உணர்ந்தேன். இந்த கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே. கதைப்படி எந்த வித ட்விஸ்டும் வைக்க முடியாது என்பதை நோலனே உணர்ந்திருப்பார் என்பது என் எண்ணம். அதனால் தான் தமிழில் ஃப்ளாஷ் பேக் வைத்தே ட்விஸ்ட் வைத்துள்ளார் போலும்! இந்த இயக்குனரோ கொஞ்சமும் யோசிக்காமல் படத்தினை தலைகீழாக ஓடவிட்டுள்ளார். ஆரம்பம் க்ளைமாக்ஸ் கடைசி ஆரம்பம்.

இதனால் என்ன திகில் கிடைக்கும் எனில் அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயம் தெரியாது. புதிது புதிதாக நிறைய பாத்திரங்கள் வரும், காட்சியமைப்பிற்குள் நடக்கும் சம்பவங்கள் ஒன்றுமே புரியாமல் செல்லும். ஆனாலும் படத்தினை பார்த்து கொண்டுதானிருப்போம். ஒரு விதத்தில் seducing and arresting. பார்த்தால் மட்டுமே அதனை உணர முடியும்.

following படத்தினை மட்டுமே நான் ஒரு பதிவாக இட்டேன். சந்தோஷத்திற்குரிய விஷயம் அதனை அநேகம் பேர் அதனை வாசித்தனர். அதன் லிங்க் - க்ளிக்கி வாசிக்கவும்.

இப்படி சொல்லும் அளவு எதுவுமே இப்படத்தில் இல்லை. சாதாரண இயக்குனர்கள் எடுக்கும் திகில் படங்களை போல மட்டுமே தெரிந்தது. இப்படம் அதிகம் கொலையினை பற்றி பேசாமல் நாயகனின் வியாதியினையே ஓட்டத்தில் சித்தரிக்க ஆரம்பிக்கிறது. இது நாவலிலிருந்து எடுக்கப்பட்டதால் நோலன் தன் திறமையினை காண்பிக்க இடம் கிடைக்காமல் திண்டாடினாரோ ? ஒரே ஒரு காட்சியினை மட்டும் மீண்டும் மீண்டும் காண்பித்து நோலனின் அம்சத்தினை காண்பிக்க முயற்சித்திருக்கிறார்.

நோலனை யாரோ சிறைபிடித்து கட்டாயத்தால் அவர் எடுத்த படம் மாதிரி எனக்கு படுகிறது. இவரின் மற்றைய படங்களை பார்த்து இதனை பார்த்தால் இப்படம் அலுப்பு தட்டும், அதே இப்படத்தினை பார்த்து மற்ற படங்கள் பார்த்தால் மற்ற படங்கள் அநாயாசமாக இருக்கும். நோலனையே பார்க்காதவர்களுக்கு இது ஒரு க்ரைம் விருந்து.

Share this:

CONVERSATION