அனைத்து நேரமும் சந்தோஷத்துடன் வாழ முடியுமா ?
இந்தக் கேள்வியானது அனைவர் மனதிலும் எப்போதும், இன்றைய தலைமுறையினரிடம் மட்டுமில்லை நமது தாத்தா காலத்திலிருந்து இருக்கத் தான் செய்கிறது. அவர்களுக்கும் இப்போது இருக்கும் தலைமுறைக்கும் என்ன வித்தியாசம் எனில் அதன் பிண்ணனியில் அல்லது அந்த கேள்விக்கான பதிலை ’ஆம்’ ஆக அமைக்க தடையாக இருக்கும் விஷயங்களே. இது மாபெரும் உளவியல் சார்ந்த விஷயம். இந்தக் கேள்விக்கு சரியான பதில் ‘ஆம் எப்போதும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்’ என யாரேனும் கூறினால் உடனே தங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ? சொல்பவனை சாமியாராக்கும் வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது தனிக்கதை.
இதை சொல்வதற்கு முன் ஹெடோனிஸம் என்னும் தத்துவத்தினை சொல்லியே ஆக வேண்டும். நமது திருவள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக என சொல்லியிருக்கிறாரே ஞாபகம் இருக்கிறதா கிட்டத்தட்ட அதன் மேம்படுத்தப்பட்ட ஒரு விஷயமே இந்த இந்த தத்துவம். இதன் ஆரம்பம் அரிஸ்டிபஸ் என்னும் கிரேக்க தத்துவவாதியால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் சாராம்சம் ஒன்றே ஒன்று தான் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு மட்டுமே உரியது.
இதில் கொண்டாட்டம் என்னும் விஷயம் நமக்கு அடுத்த கேள்வியாக அமைகிறது. சொல்லப்போகும் எடுத்துக் காட்டினை நான் முன்னரே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சுஜாதாவின் கடவுள் புத்தகம் எனக்கு ஆகப்பிடித்த ஒரு பொக்கிஷம். அதில் ஒரு இடத்தில் அவர் சொல்லியிருப்பார் “நீ சந்தோஷமாக இருக்கிறாய் என வைத்துக் கொள்வோம் அதனை உன்னால் நிரூபிக்க முடியுமா ? அப்படியே நிரூபிக்க முடியும் என சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு செயற்கையான ஒரு மீடியத்தினை தேர்ந்தெடுத்துக் கொண்டு நிரூபித்தாலும் நிரூபனம் இருக்குமே தவிர சந்தோஷம் இருக்குமா ?” இதிலிருந்து முதல் கேள்வியினை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம். அதனை சிறிது மாற்றி சந்தோஷத்தினை அந்த கணத்தில் உணர்ந்திருக்கிறோமா ? என நான் கேட்கிறேன். இது என்ன கிறுக்குத் தனமான கேள்வி என நினைக்க வேண்டாம். நாம் இதுவரை அனுபவித்த சந்தோஷத்தினை நினைத்து பார்க்கும் அப்போது சந்தோஷமாக இருந்தோம் என கடந்த காலத்தில் சொல்கிறோம் ஆனால் அனுபவிக்கும் போது அதனை உணருவதில்லை. கடந்தகாலத்திலிருந்து சந்தோஷத்தினை கொணர்கிறோமே தவிர நிகழ்காலத்தில் நாம் அனுபவிப்பவை வெளித்தோற்றத்துடன் மட்டுமே அமைகிறது. இது தான் நான் சொல்ல வருவது.
வெளித் தோற்றம் மட்டும் எனில் உள்தோற்றம் என ஏதாவது இருக்கிறதா என்பது அதிலிருந்து வரும் அடுத்தக் கேள்வி. இதைதான் நான் சொன்ன ஹெடோனிசம் என்னும் தத்துவத்தின் தத்துவவாதிகள் வெளித்தோற்றமான தேகம் மட்டும் சந்தோஷத்தினை உணராமல் உள்தோற்றமான ஆன்மாவும் சந்தோஷத்தினை உணர்ந்து வாழ்வதே ஹெடோனிசம் என வகுத்தனர்.
இப்போது இதிலிருந்து அடுத்த கேள்வி வருகிறது அதனை எப்படி உணர்வது என. இந்த பிரபஞ்சமே பல புதிர்களை கொண்டது. அந்தப்புதிர்களை நாம் தினம் தினம் காண்கிறோம் அனுபவிக்கிறோம். சிருஷ்டி எப்படி உருவானது ? நாம் ஏன் பிறந்தோம் ? பெருவெடிப்பில் தான் பிரபஞ்சம் தோன்றியது என்பது உண்மையா ? எழுதிய தேர்வில் நாம் தேறிவிடுவோமா ? 47ஆம் நம்பர் பஸ்ஸில் வரும் பெண் இன்றாவது நம்மை பார்ப்பாளா ? என எத்தனையோ கேள்விகள் நம்மை துரத்துகிறது. நமக்கோ எதற்கும் பதில் தெரியாது. ஆனால் அந்த கேள்விகளின் சிந்தனையில் தான் இருக்கிறோம். அப்படியொரு நிலையில் தேனீர் அருந்துகிறீர்கள் இல்லை அருந்துகிறோம். அப்போது தேனீரின் சுவையினை மட்டுமே உணர்ந்து எத்தனை நாள் அருந்திருப்போம் ? தேனீரின் சுவை இது தான் என நமக்குள்ளேயே ஒரு கட்டமைப்பினை வைத்துள்ளோம். இது தேனீருக்கு மட்டுமல்ல அனைத்து விஷயத்திற்கும் நாமாக ஒரு கட்டுமானத்தினை வைத்துள்ளோம். ஆக அந்தந்த இடங்களில் அதனை முழுதும் உணராமல் நமக்குள் இருக்கும் கட்டமைப்பிலிருந்து அதன் உணர்வினை எடுத்து புரிதலை கொள்கிறோம். உணர்தல் இந்த இடத்தில் கற்பிதம் ஆகிவிடுகிறது. இந்த கற்பிதம் என்னும் விஷயம் என்று உடைகிறதோ அன்றே நாம் ஹெடோனிசத்தினை மேற்கொள்ள முடியும்.
தத்துவவாதிகள் எதற்காக இந்த கொள்கையினை தத்துவத்தினை கொண்டுவந்தார்கள் எனில் அதன் மூலம் கடவுள் என்னும் பிம்பத்தினை உடைக்க. உடைக்க என்பது கூட சரியானதா என தெரியவில்லை. வேண்டுமெனில் இப்படி சொல்லலாம் அதன் மூலம் கடவுள் என்னும் சக்தியினை சித்தரிப்பது. இதனை நம் சூழலுக்கு ஏற்றவாறு விளக்க இப்படி சொல்லலாம் பொதுவாக கடவுளிடம் சென்றால் நாம் என்ன வேண்டுகிறோம் இதைக் கொடு அதைக் கொடு என்றே. அதுவும் கடந்தகாலத்தின் நிறைவேறாத ஆசைகள் என்னவோ அதனை அவர் தான் கொடுக்காமல் நிராகரித்தார்போல குற்றம் சொல்லி வேண்டுவோம். இதில் இருப்பது கடந்தகாலமும் எதிர்காலமும். ஆனால் கடந்தகாலமோ ஒரு பிம்பம். எதிர்காலமோ கற்பனை. நிகழ்காலம் என்பது மட்டுமே உண்மை. அந்த நிகழ்காலத்தினை அனுபவிக்க இருத்தல் என்னும் விஷயம் தேவைப்படுகிறது. எந்த இடத்தில் இருக்கிறாயோ அந்த இடத்தில் மட்டுமே கண்ணாய் இருப்பது இதைத் தான் Zorba the Greek என்னும் நாவலில் வரும் ஸோர்பா
when i am sleeping i say to myself sleep well
when i am kissing a girl i say to myself kiss well என்கிறான்.
அந்த நாவல் தான் என்னை இப்படி கிறுக்க வைக்கிறது. இதனை எழுதியவர் நிகோஸ் கஸான்சாகிஸ். கிரீட் என்னும் தீவினை சேர்ந்த எழுத்தாளர் தத்துவவாதி. நான் மேலே சொன்ன அனைத்தினையும் அப்படியே கதாபாத்திரமாக்கியிருக்கிறார்.
நான் என்றொரு கதாபாத்திரம் நாவலினை தொடங்குகிறது. அவனை சுற்றிலும் சோகம் கடந்த கால நினைவுகள் மற்றும் எதிர்கால ஏக்கங்கள் சூழ்ந்திருக்கிறது. அதனை விட்டு மீளத் தெரியாமல் இருக்கிறான். அப்போது அவன் தன் நண்பன் ஒரு போராட்டத்திற்கு அழைக்கும் போதும் கிரீட் தீவில் ஒரு வேலை இருக்கிறது என கிரீட் செல்கிறான். அந்த பயணத்தில் அவனுக்கு கிடைக்கும் நண்பன் தான் ஸோர்பா. அறுபது அவனுடைய வயது. முற்றிலும் மாறுபட்டவன். அனைத்தினையும் புது விதமான கோணத்தில் அணுகுபவன். எதையும் சந்தோஷத்தின் வெளிப்பாடாக மாற்றும் சூத்திரத்தினை அறிந்தவன். அப்படியே சோகமாக இருந்தாலும் அதனை நடனத்தின் மூலமாகவோ சந்தூரி என்னும் அவனின் இசைக்கருவியின் மூலமாகவோ சந்தோஷமாக மாற்றும் திறனை அறிந்தவன். நாவலிலேயே சொல்லப்படுகிறது சோர்பாவிற்கு நடனத்தினை போல் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று இருக்கிறது அதனை அறிந்து கொள்ளுங்கள். Know thyself. உள்ளிருக்கும் சந்தோஷம் உணரப்படும்.
ஸோர்பா சொல்லும் இன்னுமொரு விஷயம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாத்தான் அல்லது தீய சக்தி இருகிறது. அது தான் ஆசை. பௌத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொல்கிறார். அப்படியெனில் அதிலிருந்து மீள்வது எப்படியெனில் அனுபவிப்பது மூலமே என்பது ஸோர்பாவின் வாதம். அவனை பொறுத்தவரை அனைத்தும் அன்று தான் ஆராம்பிக்கிறது அன்று தான் பார்க்கிறான் அன்று தான் அனுபவிக்கிறான்.
இதனை அஃதாவது ஸோர்பாவின் முறைகளை வார்த்தைகளை elixir of life என்று சொல்வதிலும் நிச்சயம் தவறில்லை. அதனை நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் எண்ணம். தமிழர்களின் முழு சிந்தனையும் ஏதோ சோகக் கடலில் மூழ்கி இருப்பது போலவே இயந்திரத்தனமான வாழ்க்கையாக இருக்கிறது(என்னையும் சேர்த்து தான்). சுருங்கச் சொன்னால் இந்நாவலினை வாசித்தல் எளிது ஆனால் புரிதல் அரிது. அப்படி நான் சொல்ல வரும் புரிதல் நடந்தால் நிச்சயம் நம் முன்னோர்களை போல் நமது ஆயுளும் நீடிக்கும்.
இனி இந்நாவலினை பற்றி சொல்லும் அளவு என் சிற்றறிவில் இடமில்லை அதனால் கொஞ்சம் ஸோர்பாவின் வரிகளை பகிர்கிறேன் - சிலது தமிழில் சிலது ஆங்கிலத்தில். . .
ஸோர்பாவின் தாத்தா பாதாம் மரத்தினை நடும் போது ஸோர்பா தாத்தாவினை கேட்கிறான் என்ன செய்கிறாய் என தாத்தாவோ நான் அழியாமல் இருக்கும் வழியினை தேடி அதன் வழியில் வாழ்கிறேன் என்கிறார். ஸோர்பாவோ நான் எப்போது வேண்டுமென்றாலும் சாவேன் என்னும் வழியில் வாழ்கிறேன் என்கிறான். இதனைத் தொடர்ந்து ‘நான்’ கதாபாத்திரத்திடம் இதில் எது சரி என்னும் கேள்வி வருகிறது. அக்கேள்வி வாசகனுக்கும். . .
I don't believe in anything or any one; only in Zorba. Not because Zorba
is better than the others; not at all, not a little bit! He's a brute like the rest! But I
believe in Zorba because he's the only being I have in my power, the only one I know.
All the rest are ghosts. I see with these eyes, I hear with these ears, I digest with
these guts. All the rest are ghosts, I tell you. When I die, everything'll die. The whole
Zorbatic world will go to the bottom!

religion is opium for
the masses
Each man has within
him an element of the divine whirlwind and that is how he can convert bread
water and meat into thought and action
death is nothing -
just pff! and the candle is snuffed out. but old age is a disgrace
every man has his own
smell. We don’t notice it much because smells mingle all together and we can't tell
which is yours and which is mine, really. . . all we know is that there is a foul smell and that’s what we
called 'humanity'. . i mean the 'human stench'
Daytime is a man. The
night-time's for enjoying yourself. Night is a woman. You mustn't mix them up!(இந்நாவலில் முழுக்க வாழ்வின் புதிர்களை மட்டுமே கஸான்சாகிஸ் எழுதியிருக்கிறார். அதில் தனியாக பெண்களின் சிருஷ்டியினை சார்ந்த விவாதம் நாவலின் ஊடாக ஓடுகிறது. அது அலாதியான விஷயம்.)
The proud quixotic reaction of mankind to conquer Necessity and
make external laws conform to the internal laws of the soul, to deny all that is and
create a new world according to the laws of one's own heart, which are contrary to the
inhuman laws of nature - to create a new world which is purer, better and more moral
than the one that exists?
கடைசியான விஷயம். ஹெடோனிசம் மூலமாக கடவுள் என்னும் சக்தியினை சித்தரிக்கின்றனார் என சொல்லியிருந்தேன் அல்லவா. இந்நாவலில் அதற்கென சரியான வாக்கியம் வருகிறது. காலத்தால் அழியாத ஒன்று. . .
god must like fun and
laughter
CONVERSATION