வெகுநாட்களுக்கு முன் அஃதாவது நீதானே என் பொன்வசந்தம் வெளிவந்த இரண்டாவது நாளே நானும் என் நண்பனும் அப்படத்திற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு அரங்கின் ஓர இருக்கையினை அளித்திருந்தார்கள். என் நண்பன் தான் அந்த கடைசி சீட்டில் அமர்ந்திருந்தான். அவனுக்கு திரை தெரியவில்லையோ என ஒரு சின்ன சந்தேகம். இருந்தும் என்னிடம் இடம் மாற்றிக்கலாமா எனவும் கேட்டான். படம் ஆரம்பித்தவுடன் திரையரங்கில் கூட்டம் இல்லை என்பதால் நாங்களே இடம் மாறி உட்கார்ந்து கொண்டோம்.
படத்தினை பரிகசிப்பதற்காக சொல்கிறேன் என உடனே நினைக்க வேண்டாம். அந்த தியேட்டர் ஒரு சராசரிக்கும் கீழே இருக்கும் ஒன்று. வீட்டிற்கு அருகில் இருப்பதால் அங்கு சென்றோம். படம் முடியும் தருவாயில் இருக்கும் போது அவன் தான் சொன்ன சீட்டு பிரச்சினையினை நினைத்து தன்னையே நொந்து கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும். படம் எங்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை.
அவன் அதை முகநூல் ஸ்டேட்டசாகவெல்லாம் போடவில்லை. நான் பிடிக்காததன் காரணத்தினை இட்டிருந்தேன். ஆச்சர்யகரமான விஷயம் என்னவெனில் அப்படம் முடிந்த உடனே நாங்கள் கும்கி படத்திற்கு சென்றிருந்தோம். அது எனகு இரண்டாவது முறை. நீ தா எ பொ எங்கள் இருவருக்கும் ஆக மொக்கையாக இருந்தது. அந்த நோகடிக்கப்பட்ட உணர்வுடன் அங்கு உட்கார்ந்திருக்கும் போது என் நண்பனிடமிருந்து குறுந்தகவல் - nep touches the heart !!!!!!
இது அவனிடம் மட்டும் இருந்து வந்திருந்தால் நான் அவனுடன் மட்டும் என் பட அனுபவத்தினை சொல்லியிருப்பேன். ஆனால் நிறைய பேர் என்னிடம் படம் ஏன் பிடிக்கவில்லை படம் அவ்வளவு அருமையாக இருந்ததே என கேட்க ஆரம்பித்தார்கள் என்று. அவர்களுள் என்னை கடுப்பாக்கிய கேள்விகள்
- நீ மிடில் க்ளாஸ் கிடையாது அதனால தான் படத்த உணர முடியல ?
- உனக்கு காதல் படங்களே பிடிக்காம இருக்கும் அதுக்கு இயக்குனர் என்ன செய்ய முடியும் ?
- இசைய குத்தம் சொல்ற இதவிட சூப்பரா யார் போட முடியும் ???
அவர்கள் தொடுத்த இன்னுமொரு கேள்வி நகைச்சுவை நிரம்பியது. அதனை பின் கூறுகிறேன்.
எனக்கு ஏன் பிடிக்கவில்லை எனில் நான் கௌதம் மேனனின் அதி தீவிர ரசிகன். நடிநிசி நாய்கள் ஊரே காரி உமிழ்ந்த போதும் பார்த்தேன். எதிர் அழகியல் என நண்பர்களிடம் புகழ்ந்தேன். அதே வாரணம் ஆயிரம் அது வெளி வந்த நேரத்தில் எனக்கு பிடிக்கவில்லை. இப்போது பிடித்திருக்கிறது. ஆனால் மூன்று முரை பார்த்தும் பிடிக்காமல் என் மனதினை அரிக்கும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா ? ஊரே புகழ்கிறது ஆனாலும் எனக்கு படம் பிடிக்கவில்லை. பிடித்த விஷயங்கள் என படத்தில் நிறைய இருக்கிறது எனினும் மொத்தமாக என்னிடம் படத்தின் பாச்சா பளிக்கவில்லை. அப்படி இருக்கையில் நீதானே என் பொன்வசந்தத்தினை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி சென்றேன்.
காரணம் விண்ணைத் தாண்டி வருவாயில் எனக்கு விழுந்த அடிதான். படத்தின் ஆரம்பம் என்னை உண்மையில் அவ்வளவு சந்தோஷத்தினை அளித்தது. கல்லூரியில் ஒரு விழா நடப்பது போல் ஒரு காட்சி வரும். அங்கிருந்து என்னை துரத்த ஆரம்பித்த அசூயை படம் முடியும் என்னை விடவில்லை.
முதல் விஷயமாக சொல்ல நினைப்பது நாம் படத்தினை படமாக பார்க்க எப்போது கற்றுக் கொள்ளப்போகிறோம் என தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் இன்று முகநூலில் இப்படத்தினை பற்றி எழுதியிருந்தார். என்னையும் படத்தினை பிடிக்க செய்ய கொஞ்ச நேரம் போராடினார். அதற்கு தான் இந்த பத்தி. அவர் எழுதியதாவது
“நேற்று நீதானே என் பொன் வசந்தம் பார்த்தேன் . ஆனால்
படம் பற்றி சொஷியல் நெட்வொர்க்கில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது.
கதை யென்று பார்த்தால்
வருண், நித்யாவின் சைல்டு லவ், அடலசண்ட் லவ், காலேஜ் லவ், கொஞ்சம் மெச்சூர்டான லவ் யென
4 காலகட்டத்திற்கான லவ் அன்ட் ஈகோ ப்ராளபளம் தான் . . .
ஆனால் அது மட்டுமில்லை . . .
லவ்வில் ஏற்படும் சின்ன சின்ன தான நுணுக்கமான
பல விஷயங்கள் படம்
முழுக்க நிறைய இருக்கிறது . . .
.
வழக்கமாக காதல் படம் யென்றால் உணர்வுபூர்வமாக
இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி , அல்லது கதாநாயகனை
பலியிடுதல் நிகழும் .
அது போலியானது.
இயல்பா எடுக்கனும் யென
நினைப்பதில்லை .
அந்த விஷயத்தில் கௌதம் வாசுதேவ்
கவனமாக இருக்கிறார் .
" விண்ணை தான்டி வருவாயா " படத்திலும்
இதை கவனிக்கலாம் .
காதலில் சின்ன சின்ன
சுவராசியங்களை ரசிப்பவர்களுக்கு இந்த படம் பொன் தான்.
மத்தவங்களுக்கு இதில்எதுவும் கிடைக்காது.”
நானும் காதல் படங்களை ரசிப்பவன் தான் இருந்தும் இப்படம் எனக்கு எதையும் தரவில்லையே! இது நட்சத்திரா என்னும் கவிஞனரின் பதிவு. ஆனால் இதை நான் தமிழர்களின் பொது வெளிப்பாடாக பார்க்கிறேன்.
நிறைய பேர் யதார்த்த வாழ்க்கைல நடப்பது போல இருக்கு என்கின்றனர். அப்போது என் கேள்வி அக்கதை அல்லது படம் புதுமையாக என்ன அளித்தது ? யாரிடமும் பதில் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயின் இரண்டாவது பகுதியினை நான் அதிகம் விரும்பினேன் ஏனெனில் அது என்ன என யூகிக்க முடியாமல் வரும்.
எதற்காக ஒப்பிடுகிறேன் எனில் எந்த படமாக இருந்தாலும் பார்வையாளன் செல்வது ஏதேனும் புது கதையினை எதிர்பார்த்து, தூக்கம் வராமல் படம் முடிய வேண்டும் என்னும் பயத்துடன் தான் வருகிறான். இது இரண்டினையுமே இப்படம் நிறைவேர்த்தவில்லை!
கதை நான்கு பகுதிகளாக அக்கவிஞர் சொன்னது போல் நடக்கிறது. ஆனால் நான்கிலுமே ஒரே கதையெனில் எப்படி ஐயா உட்காருவது ? ஈகோவின் பரிணாமம் காட்சியில் தெரியும் என்று மட்டும் சொல்லாதீர்கள். எந்த வெங்காயம் சொன்னாலும் நான் காட்சிகள் அனைத்தினையும் யூகித்து விட்டேன். இத்தனைக்கும் கதை எதனையும் கேட்காமல் போனேன்!
அடுத்த பிரச்சினை இசை. இது ஒரு படத்திற்கு அதி முக்கிய பண்டம். இது உயிர் என்றும் சொல்லலாம். ஒரு காட்சியில் மௌனம் தான் பிண்ணனியாக இருக்கிறது என்றாலும் அதனை மௌனம் என சொல்லாமல் இசை இல்லாமல் இருக்கிறது என்று தான் சொல்வேன். அதுவும் ஒரு இசை. சிலர் அதனை அதி அற்புதமாக கையாள்கிறார்கள்.
இப்படத்தில் கதை 2004 இனை சுற்றியும் அதற்கு முன்பும் நடந்தாலும் இசை ஒரு இருபது வருடத்திற்கு முன் அரங்கேறுகிறது. காட்சிக்கு சிறிதும் பொருந்தாமல் ஒரு இசை இருக்கிறது எனில் படத்திற்கு எப்படி ஐயா உயிர் இருக்கும் ? இதை சொல்ல நினைத்த போது என் நணபன் என்னிடம் சொன்னது “பாட்டு கரெக்டா வருதுடா”(ஸ்பீக்கர்லதான!!!)
சமந்தா ஒரு காட்சியினை எடுத்துக் கொண்டால் ஒரே நடிப்பினை ரீடேக் செய்வது போல் தான் எனக்கு பட்டது. தார்மீகமாக சொல்ல வேண்டுமெனில் இசை அறுபட்டு போன உடனேயே படம் எனக்கு பிடிக்காமல் போனது. அதற்காக அதி அற்புத கதையினை வெறுக்கலாமா எனில். . .
ஒரு படம் என்பது ஒரு அட்டைப்பெட்டி என வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தான் கதை வசனம் திரைக்கதை கட்டமைப்பு இசை கேமிரா என சகலமும் இருக்கிறது. ஒன்று தடம் மாறிப்போனாலும் அது ஒட்டு மொத்த படத்தினையும் பாதிக்கும்.
இதை இன்னமும் விரிவாக சாரு நிவேதிதா சொலியிருக்கிறார். அதன் லிங்க்
க்ளிக்கி பார்க்கவும்
பி.கு - 1 : கவிஞரின் வார்த்தையில் கும்கி படத்தினை சாடுவதாக எனக்கு படுகிறது. அது காதல் கதை என்றே சொல்ல மாட்டேன். பழங்குடியினர் கதையில் தமிழ் மக்களுக்கு காதல் தேவையே என்பதற்காக இணைத்திருப்பார் என்பது என் எண்ணம்.
பி.கு - 2 : அருமையான நாவல் - “தோல்” வாசித்து கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் இந்த பதிவு இடுகிறேன். இதை வாசித்து அந்த நாவலை வாசிக்க ஆரம்பியுங்கள். அருமையாக இருக்கிறது. கீழே வைக்க முடியாடதபடி திகில் கொடுக்கிறார் டி.செல்வராஜ்.

CONVERSATION