நான் ஒரு முட்டாளுங்க. . .

கருந்தேளுக்கும் எனக்கும் இருக்கும் கருத்து முரண்பாடாக கூட இப்பதிவினை எடுத்துக் கொள்ளலாம். கருந்தேள் யாரென இந்த பதிவுதளத்திலேயே சொல்லியிருக்கிறேன் இருந்தாலும் ஒரு சின்ன வெள்ளோட்டம். தமிழ் நாட்டில் வெளி வரும் அபத்த சினிமாக்களை. . . அபத்தமா ? அப்படி என்ன சினிமா வந்தது ? என கேள்வி கேட்காதீர்கள். தமிழ்நாடே இப்போது துப்பாக்கியினை உன்னதமாக கொண்டாடுகிறது. தமிழில் இனி வர இருக்கும் உன்னத படைப்புகள் பரதேசி, கடல், விஸ்வரூபம் போன்றவை. சரி பழைய விஷயத்திற்கு வருவோம். இது போன்ற ஏற்கனவே பல உன்னதம் மிகு சினிமாக்கள் தமிழில் வந்துள்ளது. இவரோ அதை எதையும் பாராட்டியதே இல்லை. பல கோடி ரூபாய் செலவு செய்து பட்ஜெட்டில் நாங்கள் தான் முதலிடம் என மார்தட்டிக் கொள்ள ஆசைப்படும் போது அங்கங்கு சில விஷயங்களை சுடத் தான் வேண்டி வரும். இதில் தவறு என்ன இருக்கிறது. அப்படி என்ன சுடுகிறார்கள் கதையினை மட்டும் தானே! அப்படி கதைகளை சுட்டு சிலபல மசாலாக்களை திணித்து அதில் நடிகைகளின் ஆடைகளை குறைத்து திரையிடுகிறார்கள். தமிழகமே குடும்பம் குடும்பமாக அதனை சென்று கண்டு களிக்கிறார்கள். அதில் யாரும் இது தங்கள் குழந்தைகளுக்கு தகுந்த படமா என்று கூட சிந்திப்பதில்லை. முதல் நாள் ரசிகர் மன்ற ஷோவிற்கு மனைவியினை அழைத்து செல்ல வேண்டும். ஏனெனில் அது தான் அந்த பண்டிகையில் அவன் தன் மனைவிக்கு தரும் பெரும் பரிசு! அப்படி அலைமோதி இவர்கள் கொண்டாடும் திரைப்படங்களை இவர் கொச்சைப்படுத்துதலோடு மட்டுமல்லாமல் அதன் மூலப்பட்த்தினையும் போஸ்டரோடு தன் பதிவுதளத்தில் போட்டுவிடுகிறார். இந்த வரட்டு தார்மீகம் எதற்கு ? இவர்கள் திருந்தப் போகிறார்களா ? (இந்தக் கேள்வியினை நன்கு நினைவில் கொள்ளுங்கள்).

சரி இவர் எந்தப் படத்தினையும் புகழமாட்டாரா எனில் அது மேலே சொன்னதை விட மோசம். நான் அனுபவித்ததை சொல்கிறேன். இவர் மற்றும் இன்னும் சில பேரும் மற்றும் நேஷ்னல் அவார்ட் கிடைத்ததே என ஆரண்ய காண்டம் பட்த்தினை வாங்க சென்றேன். அது மோசர் பேரிலேயே வந்திருக்கிறது என்பது எனக்கு தெரியும். சேலத்தில் இருக்கும் பெரிய சீடி கடை பாரதி ம்யூசிக் வேர்ல்ட். அங்கேயாவது இல்லை என பத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார்கள். அதே புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அபிநயா ஆடியோ செண்டர் என்னும் பெரிய கடைக்கு சென்றால் அவர்கள் அப்படி ஒரு படம் வரவேயில்லை என சொல்லிவிட்டனர். அப்போது எனக்கு கருந்தேள் தான் நினைவிற்கு வந்தார்!!!

இப்போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. இவரை நியாயப்படுத்துவதா அல்லது இண்டலெக்சுவல் சமூகத்தின் பிரதிநிதி என அர்த்தம் கொள்வதா எனத் தெரியவில்லை. இவரால் எனக்குள் ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறேன். என்னையே நான் பரிசீலனை செய்து கொண்டேன் என்பது தான் உண்மை. அவரின் விம்ர்சனங்களை நன்கு கவனித்தால் அது டெக்னிகல் விமர்சனமாக இருக்கும். அஃதாவது அப்படத்தினை பற்றிய பின்புலங்கள், அதில் உபயோகப்படுத்திய தொழில்நுட்பங்கள் என. ஆனால் என் விமர்சன்ங்கள் அனைத்தும் கதையினை ஒப்புவிப்பது போலவே இருக்கிறது. நான் இண்டலெக்சுவல் உலகில் நுழை செய்யும் அபத்த போராட்டமாகவே எனக்கு இப்போது அதனை வாசிக்கும் போது தோன்றுகிறது. விமர்சனம் செய்வதென்பது சாதாரணமான விஷயம் கிடையவே கிடையாது. அவரின் விமர்சனத்தினை நன்கு வாசித்துப் பாருங்கள். உதாரணம் சொல்லி விளக்குகிறேன். உண்மையில் அது தான் இப்பதிவின் பிரதானமே.

அண்மையில் முகநூலில் நான் சிலாகித்த திரைப்படம் தலாஷ்”. அது அடுத்த கணம் என்ன நடக்கும் என யூகிக்க முடியாமல் வரும் த்ரில்லர் வகை திரைப்படும். எனக்கு இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கும் பழக்கம் ஒரு படத்தினை ரசிக்கிறேன் எனில் அடுத்த கணமே அதற்கு கருந்தேள் என்ன எழுதுவார் என சிந்திப்பது. இம்முறை நான் அவரை முந்திவிட்டேன். அஃதாவது அவருக்கு முன் படத்தினை பார்த்துவிட்டேன். அவருக்கு மின்னஞ்சலில் படத்தினை பார்த்து கருத்தினை பகிருமாறு கேட்டிருந்தேன்.

ஆமிர் கானின் படங்கள் நான் அதிகமாக பார்த்த்தில்லைஃபனா,தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ்ரங் தே பசந்தி, லகான், தலாஷ் என விரல்விட்டு எண்ணும் அளவே. அதில் எனக்கு பிடித்த்து ஃபனா இப்போது தலாஷ். அவரின் கருத்தோ. .
கருந்தேளின் தலாஷ் விமர்சனம்
இதில் அவர்
சஸ்பென்ஸ் படங்களை எப்படி எடுக்கவேண்டும்? படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் எழும் அவநம்பிக்கைகளை உடைத்துத் தகர்த்து அவர்களை வாயைப் பிளக்கவைக்கவேண்டும். Suspension of Disbelief என்று இதற்குப் பெயர். 
அதே கான்ஸெப்டில் வெளிவந்திருக்கும் தமிழ் பீட்ஸாபடம் இறுதிவரை அலுத்தாலும், அதன் க்ளைமேக்ஸ் என் மண்டையில் ஓங்கி ஒரு அடி வைத்தது என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுதான் சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப. 

இந்த புது கோட்பாடு தான் எனக்கு எழுத வேண்டும் என தோன்றச் செய்தது. அவரின் முழு விமர்சனத்தினையும் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் என்னால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

என் விடுதியில் காலை எட்டு மணி ஆனால் தண்ணீர் வராது. ஒரு முறை குளிக்காமல் கொள்ளாமல் கல்லூரிக்கு சென்றுவிட்டேன். அங்கே ப்ரின்சியோ ஏன் தாமதாம் எனக் கேட்டார் நான் தண்ணீர் வரவில்லை என்றேன். அவரோ மற்ற மாணவர்களை விசாரிக்கிறேன் என்றார். நான் சொன்னேன் நாலாவது மாடியில் வரவில்லை கீழ் போர்ஷனில் தான் தண்ணீர் வருகிறது என்று. உடனே அவர் இதே வரிகளை அதெப்படி கீழ் போர்ஷனில் தண்ணீர் வரும் நாலாவது மாடியில் வராது என பாவனையினையும் குரலினையும் மாற்றி கேள்வியாக கேட்டார். இந்த நிலையில் தான் தங்களின் கட்டுரையினை அணுக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்.
உண்மையில் இந்தப் படத்துக்கு, இன்ஸ்பெக்டரின் துயரப் பின்னணி தேவையே இல்லை. அது ஒரு அனாவசிய விஷயமாக, படம் முழுக்க வந்து ஆடியன்ஸை அழுத்துகிறது. மகனின் மரணம் அதனால் பெற்றோர்கள் துயறுருதல் என்பது இந்தப் படத்தில் சொல்லப்படும் விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் இருப்பதால் அது படு செயற்கையாக இருக்கிறது. படத்தை முழுதும் பார்த்தவர்கள், இந்தத் துயரம் படத்தின் க்ளைமேக்ஸுக்காக அவசியம் தேவை என்று வாதிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படிப் பார்த்தாலும், க்ளைமேக்ஸுக்காக வலியத் திணிக்கப்பட்ட பின்னணி என்பது மிக மிக எளிதாக விளங்கிவிடுவதால், இந்த ஒட்டுமொத்த செண்டிமெண்ட்டும் பணால் ஆகிவிடுகிறது.

ஏதோ எப்பவாவது நாம சொல்லும் கணிப்பு சரியா இருக்குமோன்னு அவராண்ட சொன்னேன் அதுக்கும் பெரிய. . . ஆப்பு

கருந்தேளை எதிர்ப்பதற்காக எழுதும் பதிவு அல்ல இது. காது கேளாதோர் மந்தையில் இசைக் கலைஞன்(ஐய்ய்யோ நாவல்லருந்து காப்பி அடித்தேன் என்று சொல்லிவிடுவார்கள்) காது கேளாதோர் மத்தியில் கைதட்டும் சத்தம் போலத் தான் அவரின் காத்திரமான கட்டுரைகள் இருக்கிறது. அவர் கட்டுரைகளின் மூலமாக என்ன சொன்னாலும் திரைப்படம் என்னும் கலைக்குள் வரும் படங்களை சரியாக தெரிவு செய்ய முடியவில்லை. நான் அவரின் தலாஷ் படம் பற்றிய கட்டுரையினை ஆதரிக்கிறேன் என சொல்லியிருந்தேன் ஆனால் பாருங்கள் செமெஸ்டர் லீவில் ஊருக்கு போகும் போது மீள்பார்வை!!!

கருந்தேள் எதிர்க்கும் அந்த சிறு கூட்டத்தின் விசிலடிச்சான் குஞ்சுகளில் அடியேனும் ஒருவன் தான். நாளையே விஜய்யோ அஜித்தோ நாற்பது மாடி கட்டிட்த்திலிருந்ந்து பறப்பது போல் காட்சி வந்தால் கத்த வேண்டிய சமுதாய கடமை இருக்கிறது. இவ்வளவு ஏன் இப்போது வர இருக்கும் சிவாஜி 3டியில் ஸ்ரேயாவின் அரைகுறை ஆம்பலுக்கு கத்தித் தான் ஆக வேண்டும். நான் சொல்ல வரும் விஷயம் ரொம்ப சாதாரணம். கருந்தேள் எழுதும் கட்டுரைகளை எப்படியாவது அந்த குழுவினர் வாசிக்குமாறு செய்ய வேண்டும். இங்கிருக்கும் மக்கள் அநேகம் பேர் அவர் தன் வலைஉலகில் குறிப்பிடும் அளவு எஸ்பநோல் படம் பார்க்க முயற்சி செய்யப் போவதில்லை. என் முகநூல் நண்பர் ஒருவர் தேவ் டி பட்த்தினை பார்க்காமலேயே அது மாடர்ன் டே தேவதாஸா எனக் கேட்கிறார். கருந்தேளிடம் அப்படியொரு கேள்வி கேட்கப்பட்டால். . .? இது தான் எங்களின் நிலை.

கருந்தேளின் வலைதளத்தில் இருக்கும் திரைவிமர்சனங்கள் எனக்கு ஆகப்பிடித்த்து. நான் அதில் பாதி வாசித்திருக்கிறேன். திரைக்கலையினை பிடிக்காதவர்கள் கூட பார்க்க ஆசைப்படுவார்கள். அவர் தன் வலைதளத்தில் திரைக்கதை எழுதுவது எப்படி என ஒரு தொடர் எழுதினார். அது திரைத்துறை சார்ந்த விஷயம். வளரும் கலைஞர்களுக்கு உதவலாம். அவரின் எபிசோட் போகிறதே தவிர விரல்விட்டு எண்ணும் அளவுதான் நல்ல சினிமா வருகிறது. அதனால் அடியேனின் சின்ன வேண்டுகோள் திரைப்படத்தினை அணுகுவது எப்படி என ஒரு தொடரினை எழுதுங்கள். அப்போதாவது அவரின் மொழியில் திராபைகளை அதிகம் ரசிக்க மறுத்து திரைத்துறைக்கும் அத்திராபையினை எடுத்த டீமுக்கும் நஷ்ட்த்தினை ஏற்படுத்தி அதனால் அந்த இயக்குனரினை நன்கு யோசிக்க வைத்து அப்போதாவது தமிழகத்துக்கு ஏதேனும் தேறுமா என பார்க்கலாம். என்னை போன்ற முட்டாள்கள் அப்போதாவது திருந்தட்டும்.

சந்திரபாபு சும்மாவா பாடினார். . .

பி.கு: இனியாவது நல்ல விமர்சனங்களை முன்வைக்க முயற்சிக்கிறேன்

Share this:

CONVERSATION