அட்மிஷன் அரசியல்

http://charuonline.com/blog/?p=3231
மேற்கண்ட லிங்கினை சாரு என்ற செக்ஸ் எழுத்தாளர் எழுதியது என புறக்கணித்து விடாதீர்கள். இது பிரத்யேகமாக என் நண்பர்களுக்கு. அவர்கள் தான் அவரை அப்படியொரு பெயரில் அடைத்து வைத்துள்ளனர்.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த பதிவினை படித்தவுடன் தான் சென்ற வாரம் எனக்கு நடந்த அதிர்ச்சிகரமான விஷயம் நினைவிற்கு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் வாங்கப்படும் சமாச்சாரங்கள் அனைத்தும் சரியானதே என்பதும் என் வாதமாக இருக்கும். இதுவரை மேனேஜ்மெண்ட்டின் வழியாக நான் சென்றதில்லை.

இப்போது கல்லூரிக்கு நான் கட்டும் பணம் சரியானதாகவே இருந்தது. அண்ணா பல்கலைகழகத்தின் கலந்தாய்வில் ஐயாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என கூறினர். அது கலந்தாய்வுக்கு என்று நினைத்து கொண்டிருந்தேன். பின் தான் தெரிந்தது அதனை கல்லூரியின் பீஸில் கழித்துவிட்டனர். அது போக 27,500 என கல்லூரியின் தொகை வந்தது. மேலும் அப்போது தான் சேர்வதால் அட்மிஷனுக்கு 20,000 ரூபாயும் விடுதிக்கு 35000 ரூபாயும் என மேலும் யூனிபார்ம் மற்றும் புத்தகம் என போட்டு 10,000 விதித்தனர். சாதரணமாகத்தான் இருந்தது. கல்லூரி ஆரம்பித்து முதல் செமெஸ்டர் முடியும் தருவாயில் ரெக்கார்ட் மற்றும் ட்ராப்டர் என ஒரு 1000 த்தினை வாங்கினர். மேலே புத்தகத்திற்கு விதிக்கப்பட்டது எதற்கு என்றே தெரியவில்லை! இவையனைத்தும் எனக்கு எப்படி தெரியுமெனில் கல்விக்கடனுக்காக கொடுக்கப்பட்ட கொடேஷனில் இவையனைத்தும் இருந்தது.

இரண்டாவது வருடத்திற்கு வங்கிக்கு தேவையான கொடேஷனை வாங்க ஆபீஸ் சென்றேன். அவர்கள் கொடுத்ததில் கல்லூரிக்கு 32,500 உம் விடுதிக்கு 39,000 உம் போட்டிருந்தது. அதனை அப்பாவிற்கு கூரியர் செய்து வைத்தேன். அவரும் பணத்தினை எடுத்துக் கொண்டு வந்தார். செலுத்த பிரதான ஆபீஸிற்கு சென்றொம். அங்கு 91,500 கட்ட வேண்டும் என்றனர். தூக்கிவாரி போட்டது. ஏன் என்றதற்கு அட்மிஷன் பீஸாம்! என்னய்யா பகல் கொள்ளையாக இருக்கிறது அட்மிஷன் என்பது ஒருமுறைதானே நடக்கும் இவர்கள் என்ன ஒவ்வொரு வருடத்திற்கும் வசூலிக்கிறார்கள் என அவர்களிடமே கேட்டேன். அடுத்த அதிர்ச்சி அதன் பதிலில் தான் அடங்கியிருந்தது. அதாவது பில் தரப்படாத இந்த அட்மிஷன் என்ற பெயரில் வாங்கப்படும் தொகையினை வருடாவருடம் நாங்கள் கட்டுகிறோம் என்னும் தாளில் நானும் அப்பாவும் கையொப்பமிட்டுள்ளோம். ஆனால் அதனை இடும் போது எங்களிடம் கூறியது அட்மிஷன் பீஸ் கட்டிவிட்டோம் என்பதற்கான சான்று என்பதே!

இந்த சான்று இருப்பதால் இதனை அண்ணா பல்கலைகழக பார்வைக்கும் எடுத்து செல்ல முடியாது. உடனே நான் அவர்களிடம் கேட்டேன் நீங்கள் வசூல் செய்யுங்கள் அதனை கட்ட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கட்டுகிறோம் ஆனால் அந்த போனபைட்டினை தரும்போதே இதனை கட்ட வேண்டும் என்று கூறியிருக்கலாமே என்பது. அதற்கு அவர்களின் பதில் ஒரு 20,000 என்னும் தொகையினை கூட நினைவில் வைத்து கொள்ள முடியாதா என்பதே. என்ன கேவலமான கேள்வி இது. அங்கு என்னால் எதையும் கூற முடியவில்லை. சற்று பி.பி வந்தவனை போல் கத்திவிட்டேன். அதனால் அவர்கள் என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அதனை நிராகரித்து வெளியே வந்துவிட்டேன். என்னுடைய முதல் ஆண்டு விடுதி தொகைக்கும் இரண்டாம் ஆண்டின் தொகைக்கும் வித்தியாசமே 4000 வருகிறது. அவர்கள் கூறியது போல் அதனை நினைவில் வைத்து கூறியிருந்தால்? பணம் கட்டாதவர்களின் லிஸ்டில் என் பெயர் வரும்.

அதிகாரம் இருக்கிறது என கஸ்டமர்களிடம் தங்கள் பூர்ஷ்வா தனத்தினை காண்பிக்கின்றனர். உங்களிடம் எனது தொகையினை தள்ளுபடி செய்யுங்கள் என யாசகம் கேட்கவில்லை பிடுங்கப்போகும் பணத்தினை கூறிவிட்டு பிடுங்குங்கள் என்றே கூறுகிறேன். இருபதாயிரம் என்பது சாதாரண தொகையல்ல கேட்டவுடன் எடுத்து நீட்ட. இதில் first graduate மாணவர்களின் நிலை? அரசு அவர்களுக்கு அளித்தும் அதனை அதிகம் என நினைக்கும் அவர்கள் பெற்றோர்களின் நிலை?

சே. . . இந்த அசிங்கம் பிடித்த மனிதர்களுக்கெல்லாம் சாகும் போது கூட பணம் இருந்தால் பிணம் எரியும் என்ற நிலை தான் வரும்! என் தந்தையின் பணத்தினை அட்மிஷனுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் பிடுங்கும் போது வந்த கோவம் யாரிடம் காட்ட எனத் தெரியவில்லை அதனால் பதிவு செய்கிறேன்.

பின் குறிப்பு : இப்போதும் நன்கு யோசித்து பார்க்கிறேன் எனக்கு எல்.கே.ஜி இல் அட்மிஷன் பீஸ் வாங்கினர் அதன் பிறகு பதினொன்றாம் வகுப்பில் தான்.
ம்ம். . . யோசித்து என்ன பிரயோஜனம்!

Share this:

CONVERSATION