வறுமைக்கோடு


இந்தியாவின் ஏழ்மையினை பற்றி ஸ்வாமிநாதன் எழுதியுள்ள கட்டுரை உண்மையில் சிந்திக்க வைக்கிறது. உலக அரங்கில் உலக வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக்கோடு ரூ.23.75. இந்தியாவில் சென்ற ஆண்டு வறுமைக்கோட்டினை ரூ.32(urban) மற்றும் ரூ.26(rural) என வகைப்படுத்தி வைத்தனர். என்ன ஆனதோ தெரியவில்லை சரியாக ஆறு மாதம் கழித்து ரூ.28.65(urban) மற்றும் ரூ.22.40(rural) என மாற்றிவிட்டனர். இந்த விலைப்பட்டியல் எதற்கெனில் ஒரு மனிதன்/இந்தியன் ஒரு நாளினை இந்த விலையினில் கழிக்க முடியும் என்பதே. இது உண்மையா என எனக்கும் தோன்றியது. கேள்விகளுக்கு ஜனநாயக நாட்டில் இடமில்லை. அதனால் இது தான் உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இதற்காக மீடியாக்களும் அரசியல்வாதிகளும் எவ்வளவோ கொந்தளித்தார்கள். அபிஜித் சென் என்னும் economist  இது தான் சரி என்று தீர்மானமாக சொல்கிறார். இதனை படித்தவுடன் எனக்குத் தோன்றும் கேள்வி ஏன் இவர்கள் வறுமைக் கோட்டிலேயே இருக்கிறார்கள் ? அந்த வறுமைக் கோட்டினை இன்னும் கீழ் தள்ளும் விதத்தில் தான் விலைவாசி ஏற்றம் இருக்கிறது. அதனை ஏன் பார்க்க மறுக்கிறார்கள் ? இது மேல்தட்டு மக்களுக்கு கவலையில்லை. கவலையில்லை என்பதை விட இதனை பார்க்கும் அளவிற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே விலையேற்றத்தினை ஏன் அரசாங்கம் வறுமைக் கோட்டின் கீழ் மற்றும் நடுத்தர மக்களின் நிலையிலிருந்து பார்க்க மறுக்கிறது ? இந்த இரண்டு நிலை மக்களை தான் அது அதிகம் பாதிக்கிறது. உன் வரவினை ஏற்றமாட்டேன் ஆனால் எதற்காக செலவு செய்கிறாயோ அதன் விலையினை மட்டும் ஏற்றுவோம் என்கிறது நம் அரசு. இதனை இரண்டு மூன்று நாட்கள் எதிர்க்கிறார்கள். அதன் பின் அந்த விலை அன்றாடம் ஆகிவிடுகிறது. உதாரணம் பயணச்சீட்டின் விலையேற்றம். இது அன்றாடம் காய்கறி விற்பவர்கள், பேருந்தினை பயன்படுத்தி கல்லூரி,பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்களை அதிகம் பாதித்தது. விலையேற்றத்திற்கு பிறகு இரண்டு நாட்கள் பேருந்துகள் வெறிச்சோடி இருந்தது. அதற்கு பின் எப்போதும் போல் புட்போர்ட் நிறைந்தது. தேவைகளுக்காக ஓடும் மனம் நம் அன்றாட அவஸ்தைகளை மறக்கச் செய்கிறது. அவர்களுக்கு ஒரு போராளி தேவைப்படுகிறான். அன்று பாரதி பெரியார் போராடினார்கள் என்றால் அவர்களுக்கு துணையாக மக்கள் இருந்தனர். இன்றோ உனது வேலையான போராட்டத்தினை நீ செய் எனது வேலைகளை நான் பார்க்கிறேன் என்னும் குணம் தான் மக்களின் மனதில் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் செயலும் அதிகம் தெரிவதில்லை.
ஒரு எழுத்தாளன் கூறுகிறான் “போயஸ் கார்டனுக்கும் அறிவாலயத்திற்கும் இடையே நடப்பவர்கள் தான் கம்யுனிஸ்டுகள்” என்று. எதிர்த்து கேட்க முடியாத வாக்கியம். காரணம் அது தான் யதார்த்தம். இந்த நாட்டிற்கு மனித உரினை காப்பகமே வேண்டாம் எனக் கூறுபவன் நான். சாலையில் விபத்து நடக்கிறதெனில் உடனே எத்தனை பேருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வரும். எங்கு கேஸில் நம் பெயர் இடம் பெற்றுவிடுமோ என ஒதுங்கி செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்படியிருக்கும் சமூகத்தில் எதற்கு போராளிகள். யாரோ ஒருவன் போராடுகிறான் என்பதால் தானே மக்கள் களத்தில் இறங்காமல் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களும் அமைதியாகிவிட்டால்…? இதற்கான பதில் தான் இந்த சமூகத்திற்கு பாடமாய் அமையும்.அரசாங்கத்தின் கரும்புள்ளியாக இருக்கும் மாவோயிஸ்டுகளின் வீரியம் ஏழ்மையில் ஆரம்பித்தது தான். ஆக மக்கள் உழைக்க தயாராக இருக்கின்றனர். வாய்ப்புகள் இருக்கிறதா…? அரசு அனைத்து sector ஐயும் தன் வசம் கொண்டு வியாபாரம் நடத்துகிறதே அன்றி சேவை செய்யவில்லை.
பயணச்சீட்டின் விலையினை ஏற்றுவதன் மூலம் அரசு கூற வருவது என்ன ? இரயிலில் பயணம் செய்யுங்கள் என்றா ? unreserved compartment இன் அழுக்கினையும் துர்நாற்றத்தினையும் ஏதாவது ஒரு அமைச்சர் அறிந்திருந்தால் கூட நிச்சயம் விலைவாசியினை ஏற்றியிருக்க மாட்டார்.
அனைத்து sector ஐயும் அரசுடைமையாக்குவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதன் நோக்கம் சேவையாக இருக்க வேண்டுமே அன்றி பணத்தின் தேவையாக இருக்கக் கூடாது.மனிதன் தன் அன்றாட தேவைக்காக உழைக்கிறான். அப்பொது நீ தரும் வேலை தமிழ் குழந்தைகளை பீகாருக்கும் பீகார் குழந்தைகளை தமிழ்நாட்டிற்கும் அனுப்புவது போல போலித்தனமாக இருக்கக் கூடாது. அப்படி உண்மைத்தனமான செயல்களை செய்ய முடியுமெனில் நிச்சயம் வறுமைக் கோட்டிற்கு எல்லை கோட்டினை வைக்க முடியும்.
நான் இந்தியாவில் வசிக்கிறேன் என பெருமையாகக் கூறுவேன். ஏனெனில்,
1.   மனதில் கொஞ்சமும் ஈரமின்றி இத்தனை ஏற்றத்தாழ்வுளை வைத்துக் கொண்டு “INDIA IS A SOCIALIST COUNTRY” என பத்தாங் கிளாஸ் பையனின் மண்டையில் கொட்டி மனப்பாடம் செயய்ச் சொல்கிறார்கள்.
2.   ஒவ்வொரு முறையும் என் பயணம் இரயிலில் கக்கூஸின் அருகில் சடக் சடக் சத்தத்துடன் தான் தொடர்கிறது.

Send your comments : krishik10@gmail.com

Share this:

CONVERSATION