வாழத் தகுதியற்றவன் நான்


காலையும் மாலையும் அற்ற நேரமான பதினோரு மணியளவில் சில புத்தகம் வாங்குவதற்காக பணத்தினை அனுப்ப தபால் நிலையம் வரை சென்றிருந்தேன்.நான் இருப்பதோ சேலத்தில் தான்.ஆனால் பெரிய டிராபிக் ஜாம்.ஏன் என வினவிய பிறகு தான் புரிந்தது இன்று சேலத்தில் மாரியம்மன் பண்டிகை என்று.வழியெங்கும் வழிபாடுகள் சாலையினை மறித்து கொண்டு அரங்கேறியது.வருடா வருடம் இந்த முறையான வழிபடுதலை நான் கண்டும் கோபமும் கொண்டிருந்தேன்.ஆனால் இன்று நான் கண்ட காட்சி என் மனதை ஒரு கணம் அப்படியே உறைய வைத்தது.நான் கண்ட காட்சி ஒரு இளைஞன்.வயது முப்பதுக்குள் தான் இருக்கும்.நல்ல உடல் வாகு கொண்டிருந்தான்.அவனின் முதுகுபுறத்தில் இரண்டு இரும்பு கிடுக்கியினை போன்ற கூர்மையான கருவியினால் தன் சதையினுள் குத்தி கேலண்டரை ஆணியில் மாட்டியிருப்பதை  போன்று முதுகின் இரண்டு புறமும் இரண்டு கிடுக்கியினை  செருகி மாட்டியிருந்தான்.மாட்டி வெகு நேரம் ஆகியிருக்கும் போலிருக்கிறது.காரணம் இரத்தம் இல்லை.இரண்டு கம்பிகளின் ஒரு முனை மனித சதையுடன் உறவு கொண்டிருக்கையில் அந்தக் கம்பியின் மறுமுனையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.அந்தக் கயிறு சற்று பெரிதாக இருந்தது.இரண்டு கயிறும் ஒரு தென்ன்ங்குலையில் கட்டப்பட்டிருந்தது.இதனைப் போன்று ‘தசாவதாரம்என்னும் திரைப்படத்தில் கண்டிருக்கிறேன்.ஆனால் உண்மை என்றும் உரைய வைப்பதாகவே இருக்கிறது.இந்த இளைஞன் தன் சதையின் உறுதுணையோடு அந்த தென்னங்குலையினை இழுத்து சென்றுகொண்டிருந்தான்.அப்படி இழுத்து இரண்டடி வைக்கும் போதே அந்த முதுகின் சதையே பிய்ந்து விடும் போல் தோற்றம் அளித்தது.இழுக்கும் நேரத்தில் குத்தப்பட்டிருக்கும் இடத்தில் கூம்பினை போன்று சதை எழுந்தது.பார்க்க முடியாமல் பேருந்தின் இடது பக்கத்தில் பார்த்தால் எட்டு அடிக்கு ஒரு சூலத்தை தன் வாயின் இரு பக்கத்தின் மூலமாக சொருகிக் கொண்டு கோயிலினை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.தன் சூலத்தினை இடிக்காமல் இருக்க சொந்தக் கார்ர்களின் பந்தோபஸ்து!அலகிடுதலும் ஆங்காங்கே சாலையெங்கிலும் காணக் கிடைத்தது.மனிதநேயம் எங்கே சென்றது என மனதளவில் குமுறிக் கொண்டிருக்கும் நான் தான் மடையன்!காரணம் இந்த அனைத்து சம்பவத்தையுமே சுற்றி நின்று ஒரு சமுதாயமே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.இவர்களிடம் சென்றா ‘உங்களிடம் மனிதநேயம் இல்லையா?என்று கேட்க முடியும்.
      இந்த நாகரீகமற்ற சமுதாயத்திடம் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்க விரும்புகிறேன் ‘உங்கள் கடவுள் இதை தான் உங்களிடம் கேட்கிறானா? நீ உன்னையே வதைத்துக் கொள் அதை கண்டு களித்துவிட்டு உனக்கு வேண்டுவதை தருகிறேன் என்பவன் தான் கடவுளா?அப்படி நினைப்பவனும் அதனை கேட்டு நடப்பவனும் இந்த சமூகத்தின் மனநோயாளிகள் இல்லையா?தன் கடையின் முன் ஒரு ஆட்டினை வெட்டி அதனை தோலுறித்து தொங்கவிடப்படுதலுக்கும் இதற்கும் என்னய்யா வித்தியாசம்?இரண்டையும் இந்த சமூகம் வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.சரி இத்தனையும் செய்யும் அந்த தனி மனிதனுக்கு என்ன கிடைக்கிறது.வலி!முன்பு ஏகாதிபத்தியத்தால் நடந்தது இன்று கடவுளின் பெயரால் அரங்கேற்றப் படுகிறது.அப்போது கடவுள் என்ன சர்வாதிகாரியா?என்னிடம் சமூகத்தின் பால் கேட்க கேள்விகள் மட்டுமே இருக்கிறது.ஆனால் பதில்???இதனை படித்தால் என்னை நாத்திகவாதி என்று இந்த பாழாய் போன சமூகம் சொற்களால் வதைக்கும்.அதைப் பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை.என்னை பொறுத்தவரை ஆத்திகவாதியும் நாத்திகவாதியும் ஒரே நிலையில் இருப்பவரே.ஒரு விஷயத்தை முழுதும் அறிந்தவன் தான் அதை பறைசாற்றவோ எதிர்க்கவோ தகுதி உடையவன்.ஆனால் நான் ஒரு agnostic.இருக்கிறதா இல்லையா என்ற வாதத்திலேயே வாழ்க்கை நடத்துபவன்.
         இதற்கிடையில் இந்த பறை,மேளம் போன்ற சப்தங்கள்.சப்தத்தின் மாசினை மட்டும் சமுகத்திற்கு கொடுப்பதில்லை.சில பெண்கள் ரோட்டில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.பேருந்திலும் ஒரு பெண் நெலிய ஆரம்பித்தாள்.அனைவருக்கும் திகைப்பு ஏற்பட்டது.ஆனால் பத்து நமிட்த்தில் தூங்கிப் போனால்.அப்படி ஆடுபவர்களை சுற்றி ‘அம்மா வந்துட்டா ஆத்தா வந்துட்டாஎன்ற கூக்குரல்கள் வேறு.பல இசை மேதைகளிடம் கேட்டிருப்போம் ‘மெய் மறந்துஎன்னும் சொல்லை.பிடிக்காத இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் தூக்கம் வரும்.பிடித்த இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்.போதையில் இருப்பவனும் இசை கேட்பவனும் அனுபவிப்பது ஒன்றே.இந்த உடல் ரீதியான மாறுதலைத் தான் இங்கும் சில பெண்களிடம் காண முடிந்த்து.இதனை உண்மையில்லை என கூற விரும்பினால் பிடித்த இசையை தனிமையில் என்னை சுற்றி யாரும் இல்லை என்ற அத்யந்த உணர்வுடன் ரசித்துப் பாருங்கள்.கால்கள் ஜதி போட ஆரம்பிக்கும்.ஒன்று சொல்வேன் இந்த சமுகத்தை திருத்த பெரியார் தேவையில்லை கார்ல் மார்க்ஸ் தான் தேவை.
             கண்ணுக்கு தெரியாத ஒரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒருவன் தன் முதலாளித்துவத்தை தன் அடிமைகளிடம் பிரதிநிதித்துவம் படுத்திக் கொண்டிருக்கிறான்.எனக்கு தேவை இருக்கிறது,அதனை என் முதலாளி தான் தர முடியும் அதனால் நான் இங்கே உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதே பாட்டாளியின் குரலாக இருக்கும்.இங்கே உழைப்பு எனக் கூறுவது உடல் வதையை தான்.
            உங்கள் நண்பர்களிடம் கூடக் கேட்டுப் பாருங்கள் அவர்களின் பதில் நாங்கள் ஆட்டினை உண்போம் ஆனால் அதனை வெட்டுவதை பார்க்கமாட்டோம்.ஏன் எனக் கேட்டால் அருவருப்பாக இருக்கிறதாம்!தன்னைப் போல இருக்கும் மனிதன் வதை செய்து கொள்ளும் போது மட்டும் கண்டு களிப்பான்.எனக்கும் பேரப் பிள்ளைகள் பிறக்கும் அன்றும் இதே மனிதர்கள் இதே சம்பிரதாயம் தான் நிலைத்து நிற்கும்.பெரியாரும் கார்ல் மார்க்ஸும் தமிழகத்தில் பிறக்கப் போவதில்லை.பிறந்தாலும் தன் கோட்பாடுகளை மனம் என்னும் ஏட்டில் தான் பதிந்து வைப்பானே தவிர சமூகத்திற்கு கூறமாட்டான்.காரணம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு சமூகமும்,மனமும்,அறிவும் விஸ்தீரணம் அடைந்திருக்காது.இசையில்,அமைதியில்,பேச்சின் இடையே தோன்றும் மெளனத்தில் சமயத்தை,கடவுளை பலர் தேடுகிறார்கள்.என்னை பொறுத்தவரை இலக்கியமும்,எழுத்தும் தான் என் கடவுள்,என் சமயம்.என் கடவுள் என்னை வதை செய்து கொள்ள சொல்லவில்லை.உன் கடவுளை விட என் கடவுள் பெரியவன் எனக் கூறும் அளவிற்கு நான் கீழ்த்தரமானவனும் அல்ல.வதைகளும் வன்முறைகளும் இல்லாத மக்கள் சமூகத்தை என் மனம் தேடிக் கொண்டிருக்கிறது.எப்படியும் ஒரு நாள் நிம்மதியான அமைதியான சூழ்நிலையில் தூங்குவேன் என்ற எண்ணம் கொண்டுதான் இந்த அவலமான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.வன்முறையில் இன்பத்தை காணும் உன் கடவுளை நானும் ஒரு நாள் வதைக்க வேண்டும்.உன் பெயரால் வதைகளை ஒரு கொண்டாட்டமாக கொண்டாடும் சமூகத்தின் முதலாளியான நீயும் கொண்டாடு என்றே செய்வேன்.இதுவே என் தீராத ஆசை
        இதை எழுதியதற்கு என்னை கழுமரத்தில் எற்றினாலும் சரி அந்த மரத்திலும் எழுதுவேன்
“இது காட்டுமிராண்டிகளின் சமூகம்,இங்கே வாழத் தகுதியற்றவன் நான்என்று.

SEND YOUR COMMENTS: krishik10@gmail.com

Share this:

CONVERSATION