வாழத் தகுதியற்றவன் நான் ( 2 )

-->
     இந்தச் சமூகம் வீட்டிலேயே என்னை சிறை வைக்கிறது.நான் தான் வாழத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டேனே ஆனால் நான் நடக்கவும் தகுதியற்றவன் என்றால் நான் என்ன செய்வது.நடந்தால் என் காலடியில் மனிதர்கள் புரண்டு கொண்டிருக்கிறார்கள்.எழுந்திரு நடைபாதையிலும் நடுரோட்டிலும் புரள்வது சட்ட விரோதமான,அரசிற்கு புரம்பான செயல் என்று அவர்க்கு பாடம் நட்த்தும் அளவிற்கு தெளிந்த மனநிலையில் அவர்களும் இல்லை கூறும் அளவிற்கு என்னிடம் பொறுமையும் இல்லை.அவன் வேறொரு உலகத்தில் சஞ்ஜரித்துக் கொண்டிருக்கிறான்.நான் என்னால் ஆன வரைக்கும் அவனை கடந்த செல்வேன் அவ்வளவுதான்!வேறென்ன செய்ய முடியும்.அவனை மது ஆட்கொண்டிருக்கிறது.தன்னை மறக்கும் அளவிற்கு,நினைவினை இழக்கும் அளவிற்கு குடிப்பானேன்.தன் மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து நடுரோட்டில் அனாதை பிணத்தை போல் படுத்துகிடக்கும் நிலைமைக்கு ஆளான இந்த மதுவின் ஸ்பரிசத்தினை அவர்கள் ஒரே வார்த்தையில் கூறுகின்றனர்-கொண்டாட்டம்.இன்னும் தார்மீகமாக கூறவேண்டுமெனில் அவன் ஆன்மீகத்தின் உச்சியில் தன்னை மறந்த நிலையில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.
     என் வீட்டருகில் டாஸ்மாக் கடை வெகு நாட்களுக்கு முன்பு இருந்தது.என் அம்மா முதற்கொண்டு பல பெண்கள் அவ்வழியே செல்ல அச்சம் கொண்டிருந்தனர்(மதுவின் விளையாட்டை பார்த்துக் கொள்ளுங்கள்!).பிறகு அரசின் செயல்பாடோ என்னவோ அந்த கடையினை இடமாற்றம் செய்தனர்.அதனால் நகர்வாசிகள் ஆசுவாசம் அடைந்தனர்.ஆனால் பண்டிகை ஆரம்பித்ததிலிருந்து கடையினை மறுபடியும் திறந்தனர்.அந்த சம்பவத்தையே மேற்கண்ட பத்தியில் கூறியுள்ளேன்.என் அப்பாவுடன் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது எங்களருகில் வந்த இளைஞர்களின் வண்டி நேரே டாஸ்மாக் கடைக்குத் தான் சென்றது.ஆஹா....!சின்ன பள்ளிக்கூடத்தையே என்னால் காண முடிந்தது.ஒன்றை உணர்ந்து கொண்டேன் தன் மெய்யை மறக்கச் செய்வது இசை மட்டுமல்ல மது என்ற ஒன்றும் தான் என்று.ஐயா நான் மதத்தையோ மதுவையோ நிந்தனை செய்பவன் அல்ல.மது என்பது தனி மனிதனின் விருப்பு வெறுப்புகள் சார்ந்த விஷயம்.ஆனால் மதம் என்ற பெயரால் செய்தால் அதனை எப்படி சகித்துக் கொள்வது.கிறித்துவர்களும் மதுவை பிரதானமாக வைக்கிறார்கள் என்று தர்க்க ரீதியாக என்னை கேட்டால் என் பதில் அவர்கள் என்ன பாட்டில் பாட்டிலாக குடித்து நடுரோட்டில் படுத்து அனைத்து மக்களையும் தடுத்து,சமூக சீர்கேட்டை உண்டு செய்கிறார்களா?பிற மதத்தவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்களா?இல்லை.காரணம் அவர்களது கொண்டாட்டங்கள் ஆன்மீக ரீதியாக இருக்கிறது.நம்முடைய கொண்டாட்டமோ வெறும் கொண்டாட்டமாகவே இருக்கிறது.
     உதாரணத்திற்கு கிறித்துவ மதத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்.மாஸ்என்னும் விஷயத்தில் மக்கள் ஈடுபாட்டுடன் விவிலியத்திலிருந்து சொற்களுடன் ஆன்மீக ரீதியாக ஆண்டவனுடன் பொழுதை கழிக்கின்றனர்.இஸ்லாமிய மதம் எனக்கு மிகவும் பிடித்த மதம்.காரணம் அந்த மதம் தன் பிள்ளைகளை தன் பால் ஈர்க்க வைக்கிறது.ஐந்து முறை நமாஸ் செய்வதை ஒரு முஸ்லீம் தன் தலையாய கடமையாக உணர்கிறான்..இத்தகைய உணர்தலை ஒரு மதம் வன்முறையின்றி இயல்பாக ஏற்பட வைக்கிறது எனில் அது கொண்டாடப்படவேண்டிய மதம் இல்லையா.திருக்குரான் படிக்கையிலே ஒரு முஸ்லீம்  தன் கடவுளுடன் கொண்டாடுகிறான்.ஆனால் இந்து மதத்தில்...?வேதங்கள் இருக்கிறது,ஆனால் யாருக்கு புரியப் போகிறது.பிராமணர்களுக்குத் தான் புரியப் போகிறது.தனக்கு தெரிந்த வேதங்களை பிறைக்கு கூறவும் மட்டான்.அதென்னெ பிராமணர்களின் இரகசிய புத்தகமா அல்ல இந்து மதத்தின் பொக்கிஷமா?பாமரனுக்கும் புரியும் அளவிற்கு ‘அர்த்தமுள்ள இந்துமதம்என்னும் புத்தகம் இருக்கிறது.இந்த புனித நூல் ஒரு மனிதனை இந்து மதத்தின் பால் ஈர்க்கும் சக்தி கொண்டது.ஆனால் நான் கண்ட சடங்குகள் இந்து மதத்தினையே புறக்கணிக்கும் அளவிற்கு சக்திகளை கொண்டது.இந்து மதத்தின் சடங்களுக்கு அர்த்தங்கள் எத்தனை இந்துக்களுக்கு தெரியும்?ஒரு திருமண வைபவத்தின் பொருளே தெரியாமல் இந்துக்கள் திருமணத்தை சிறப்பிக்கின்றனர்.அர்ச்சனை செய்யும் போது அதன் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்?இந்து மதத்தின் கோட்பாடுகளை இந்துக்கள் அறியாமலேயே சடங்குகள் சம்பிரதாயங்கள் என்னும் பெயரில் ஒட்டு மொத்த சமூகத்தையும் வதை முகாம்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
     இந்த சமூகம் உனக்கு அமிர்த்த்தினை அளிக்கிறது.அந்த அமிர்த்த்தின் சுவையினால் படுத்து புரள திறந்தவெளி படுக்கையினையும் அளிக்கிறது.உன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வதை செய்து கொள்ளலாம்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தம் எழுப்பி தொந்தரவு செய்யலாம் என்று சகல உரிமையும் கொடுக்கும் போது சாமன்யனான எனக்கு மட்டும் இந்த சமூகம் தன் பால் ஒரு வெறுப்பினை அளிக்கிறதே ஏன்?ஆக தவறு சமூகத்தின் பால் இல்லை.உன் கண் முன் ஆயிரம் விஷயம் தோன்றும் அதையெல்லாம் பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம்  உன் கண்களுக்கு இல்லை.இதுவல்லவா சமூகத்தின் அறிவுரை!ஒரு மாபெரும் திடலில் முழுக்க நரகல்களாக இருக்கிறது.மனிதர்கள் அனைவரும் தத்தம் பாதத்தினை அதன் மேல் பதித்து நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.என்னால் இதனை கிரஹித்துக் கொள்ள முடியவில்லை.ஆனால் என் சக மனிதன் என்னிடம் “பிடிக்கவில்லையெனில் நரகலினை கையினால் ஒதுக்கிவிட்டு தூய பாதையில் செல்ல்லாமே!என்றான்.
     என்னை படைத்த அவன்தான் இவர்களையும் நரகலையும் படைத்திருக்கிறான்.எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என விருப்பத்தையும் என் கையில் திணித்து விட்டான்.எனக்கு இரண்டுமே பிடிக்கவில்லை.அதனால்தான் ஒட்டு மொத்த சமூகத்தையும் மறுதலித்துக் கொண்டிருக்கிறேன்.

SEND YOUR COMMENTS: krishik10@gmail.com

Share this:

CONVERSATION